Ad Widget

க.பொ.த பரீட்சை விண்ணப்பங்களில் மாற்றம்

விண்ணப்பதாரர்களின் வசதி கருதி கல்வி பொதுத் தராதர உயர்தர விண்ணப்பங்களில் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதற்காக 3 விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். அதற்கமைய விண்ணப்பங்களில் தேசிய அடையாள அட்டை இலக்கம், எப்பிரிவில் தோற்றவுள்ளனர் மற்றும் பரீட்சை இலக்கம் என்பன உள்ளடக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்....

க.பொ.த உயர்தரப்பரீட்சை 2015 கால அட்டவணை இணையதளத்தில்

2015 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான மாற்றப்பட்ட கால அட்டவணை www.doenets.lk இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதம் 4ஆம் திகதி பரீட்சை ஆரம்பமாகி 13ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் தொடர்ந்து 17ஆம் திகதி பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் 24ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 8ஆம் திகதியுடன் நிறைவடையும்...
Ad Widget

இரண்டாம் தவணை விடுமுறையில் மாற்றம்!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளமை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளமை ஆகிய காரணங்களினால் இரண்டாம் தவணை விடுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய உயர்தர பரீட்சை நடைபெறவுள்ள பாடசாலைகள் தவிர்ந்து ஏனைய அனைத்து பாடசாலைகளும் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் 3ஆம் தவணைக்காக ஆரம்பிக்கப்படும் என்றும்...

புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதில் பிரச்சினை இல்லை

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, திட்டமிட்டவாறு அன்றைய தினமே நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓகஸ்ட் மாதம் நடைபெற ஏற்பாடாகியிருந்த கல்விப் பொதுத்...

உயர் தரப் பரீட்சை திகதியில் மாற்றம்!

ஓகஸ்ட் 14 - 21 ஆம் திகதி வரை நடைறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் அத்தினங்களில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பொதுத் தேர்தலையொட்டியே பரீட்சை தினங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. எனினும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம்...

பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லாவிட்டால் பெற்றோர்கள் பாடசாலைக்கு அறிவிக்க வேண்டும்

பிள்ளைகள் பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லையென்றால் அது தொடர்பில் 1 மணித்தியாலத்துக்கு முன்னர் பெற்றோர்கள் பாடசாலைக்கு அறிவிக்க வேண்டும் எனவும் இதனை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் பொ.அருணகிரிநாதர் தெரிவித்தார் தமிழ் சிவில் சமூகத்தின் கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை (19) யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு...

சிறுவர் கழகங்களுக்கிடையிலான நாடகப்போட்டியில் தேசிய ரீதியில் யாழ் மாவட்டம் முதலிடம்

கடந்த வருடம் உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் தேசிய நன்னடத்தை திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சிறுவர் கழகங்களுக்கிடையில் தேசிய மட்டத்தில் தமிழ் மொழி மூலமாக நடாத்தப்பட்ட போட்டியில் யாழ் மாவட்டத்தின் சிறுவர் கழகம் முதல் இடத்தை பெற்றுள்ளது. இலக்கம் 176, பனிப்புலம், திருநாவுக்கரசு சிறுவர் கழகம்...

இலவச சிங்கள மொழிப்பயிற்சி வகுப்புக்கள்

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனுசரணையுடன் ஐக்கிய மொழிச்சங்கம் நடாத்தும் இலவச சிங்களமொழிப் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன என வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தின் தலைவர் வ.சிவச்சந்திரதேவர் தெரிவித்தார். இப்பயிற்சி வகுப்புக்கள் எதிர்வரும் 04 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் பி.ப 3:00- 5:00 வரை வதிரி கரவெட்டியில் அமைந்துள்ள...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2015ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபில்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை நடைபெறவுள்ள 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பழைய அமைப்பின் படி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான விண்ணப்பங்களுக்கான ஏற்றுக்கொள்ளும் திகதி முடிவடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா வளாகத்தில் வியாபார முகாமைத்துவ இளமாணி கற்கைநெறி

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் வியாபார முகாமைத்துவ இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும் புதிய கற்கை நெறியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வியாபார கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அம்பலம் புஸ்பநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 2014 - 2015 ஆம் கல்வியாண்டில் வியாபார முகாமைத்துல இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும்...

பல்கலைக்கழக அனுமதிக்கு இணையத்தளம் ஊடாகவும் விண்ணப்பிக்கலாம்!

புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு வெளியிடப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் இணையத்தளம் ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்...

18 தேசிய கல்விக்கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

நாட்டிலுள்ள 18 தேசிய கல்வியற்கல்லூரிகளுக்கு 2015 ஆம் கல்வியாண்டுக்கான 32 வகையான மூன்றாண்டு கால ஆசிரியர் கல்வி தொடர்பான சேவை முன்தொழிற்பயிற்சிகளைப் பயில்வதற்கு தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து கல்வியமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது. 25 வயதிற்குட்பட்டு 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தேவையான இசட் புள்ளிகளைப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 32 வகையான பாடநெறிகளுக்கு தேவையான...

கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்தல்

2015ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை (08) அரச வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் மே 25ஆம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.

ஆசிரிய கலாசாலை பரீட்சைகளில் சித்தியடையாதோருக்கான மீள்பரீட்சை

2011ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரும் நடைபெற்ற ஆசிரிய கலாசாலைப் பரீட்சைகளில் சித்தியடையத் தவறிய ஆசிரியர்களுக்கான, மீள்பரீட்சை ஒன்றை இவ்வருடத்தில் நடத்துவதற்குப் பரீட்சைத் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கோப்பாய் ஆசிரிய கலாசாலையூடாக ஏற்கெனவே பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைய தவறியவர்கள், நூன சித்தி பெற்றவர்கள் ஆகியோர் மீள் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் பொருட்டு எதிர்வரும் 30க்கு முன்னர் கலாசாலை அதிபருடன்...

வடக்கிலிருந்து இந்தியா சென்று கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களை பதிவு செய்யக் கோருகிறது தூதரகம்

வடக்கு மாகாணத்திலிருந்து இந்தியா சென்று பட்ட மேற்படிப்புக்கள், கற்கை நெறிகளைப் பூர்த்திசெய்தவர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது யாழ். இந்தியத் துணைத்தூதரகம். இதுகுறித்து தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: வடமாகாணத்திலிருந்து சென்று இந்தியாவில் இந்திரவியல், கட்டடவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பாரம்பரிய கலைகள் உட்பட அனைத்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புகளை அல்லது...

கிளிநொச்சி- முல்லைத்தீவு விசேட கல்வி வலயமாக பிரகடனம்

கிளிநொச்சி- முல்லைத்தீவு விசேட கல்வி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் யாழ் விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் குறித்த மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் அவற்றின் உட்கட்டுமான அமைப்புக்களை மேம்படுத்தவுள்ளது. சிவில் பாதுகாப்புப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பரீட்சை வைக்கப்பட்டு பின்னர்...

5000 மஹாபொல அடுத்த மாதம்: தேர்தல் முறையிலும் மாற்றம்

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது போன்று 5000 ரூபா மஹாபொல புலமை பரிசில் அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (07) உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, தேர்தல் சட்ட திருத்தம் குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். 100 வேலைத் திட்டம்...

வளலாய் அமெரிக்க மிசன் பாடசாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

வளலாய் அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வளலாய் மீள்குடியேற்ற சங்கத்தலைவர் செல்லப்பு துரைரட்ணம், புதன்கிழமை (01) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 1990ஆம் ஆண்டு இடப்பெயர்வுடன் மூடப்பட்ட இந்தப் பாடசாலையை மீள ஆரம்பிப்பதன் மூலம் வளலாய் பகுதி மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டை தமது...

வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை முன்னிலை

இன்று திங்கட்கிழமை(30) வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 28 பேர், 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக அதிபர் திருமதி வி.சண்முகரட்ணம் தெரிவித்தார். 9 ஏ சித்திகளை 28 பேரும் 8 ஏ சித்திகளை 48 பேரும் 7 ஏ சித்திகளை 25 பேரும் 6...

மீள் திருத்தத்துக்கு 24வரை விண்ணப்பிக்கலாம்

வெளியாகியுள்ள கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை இன்று வெளியாகிய பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தள முகவரிகளில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
Loading posts...

All posts loaded

No more posts