பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் விரைவில் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் தபாலிடும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு...

மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: வவுனியாவில் பதற்றம்

வவுனியாவில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிலர் குழப்பம் விளைத்து மோதலில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைக்கு வழங்கப்படுகின்ற சத்துணவு திட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக போலியான குற்றச்சாட்டை முன்வைத்தமைக்கு எதிராக வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, அவ்விடத்திற்கு வருகை தந்த சிலர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களோடு...
Ad Widget

வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

“கஜா“ புயல் காரணமாக வடமாகாண பாடசாலைகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே-இன் அலுவலகத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள கஜா புயல் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கரையை கடக்கும் என எதிர்வுகூறப்பட்ட நிலையில் வடக்கின் பல பகுதிகளில் தாக்கம் செலுத்தும் என எதிர்வுகூறப்பட்டிருந்தது. அதற்கமைய, யாழின்...

இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்காண விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படும் 2019 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்காண விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் பின்வரும் தகுதிகளில் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும். சைவபரிபாலனசபையால் நடாத்தப்படும் சைவசித்தாந்த பிரவேச பால பண்டிதர் பரீட்சையில் சித்தி அல்லது கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை (இந்துசமயம் அல்லது இந்துநாகரீகம் உட்பட) சித்தி அல்லது சைவசமய...

அமைச்சரின் வருகைக்காக மாணவர்களை துப்பரவு பணிக்கு ஈடுபடுத்தியமையால் பொதுமக்கள் அதிருப்தி

தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சா் மனோ கணேசனின் வருகைக்காக கிளிநொச்சி- பூநகாி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவா்களை வைத்து வீதியை துப்பரவு செய்தமை தொடா்பில் பலா் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கடுமையான விமா்சனங்களையும் முன்வைத்துள்ளனா். பூநகரி பிரதேசத்திலுள்ள ஸ்ரீ வித்தியானந்தா வித்தியாலயத்தில் தரம் 5ஆம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வுக்காக, நேற்றைய தினம்...

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சர் விசேட அறிவிப்பு!

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயமானது என்ற சுற்றறிக்கையை இரத்து செய்வது தொடர்பில் அவதானம் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நுகேகொட அநுல வித்தியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு...

வத்தளையில் தமிழ் மொழி மூல பாடசாலையை நிர்மாணிக்க அனுமதி!

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பிரதேசத்தில் தமிழ் மொழிமூல பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. களனி கல்வி வலயத்திற்குட்பட்டதாக அருள் மாணிக்கவாசகம் இந்து பாடசாலை எனும் பெயரில் இந்த தமிழ் மொழிமூல பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இதுதொடர்பான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இதற்கே...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாணவர்களும் சாதனை!!

இடம்பெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முன்னிலையிலுள்ள 3 தமிழ் மாணவர்களில் இருவர் 2 ஆம் இடத்தினையும் ஒருவர் 3 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளனர். இந்நிலையில், முதலாம் இடத்தை பிலியந்தல -சோமவீர சந்ரசிறி வித்தியாலயத்தைச்...

பரீட்சார்த்திகளை அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை : ஆட்பதிவுத் திணைக்களம்

இவ்வருடம் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களில் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத பரீட்சார்த்திகளை உடனடியாக விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், 80...

சாதாரண தர, உயர்த்தரப் பரீட்சைகளை டிசம்பரில் நடத்த தீர்மானம்!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சை ஆகிய இரண்டையும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பரீட்சை திகதிகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக...

யாழில் 33 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சிங்கள மகா வித்தியாலயம்!

யாழ்ப்பாணத்தில் கடந்த 1965ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயத்தினை 33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியை யாழ்.சிங்கள மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இவர்களின் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை...

ஆசிரியர்களின் வசதிகள் மற்றும் சலுகைகள் அதிகரிக்கப்படுமே தவிர குறைக்கப்படாது – கல்வியமைச்சர்

மாணவர்களின் நலனில் அக்கறையுடன் செயற்படும் ஆசிரியர்களின் வசதிகள் மற்றும் சலுகைகள் அதிகரிக்கப்படுமே தவிர குறைக்கப்படாது என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலை விடுமுறை காலத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுவத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் இதுதொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு...

இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதை எதிர்க்க வேண்டாம்: மனோ

இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதை எதிர்க்க வேண்டாம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் இறக்குவானையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,”வடக்கு கிழக்கிலுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், குறித்த மாகாணங்களுக்கு வெளியில் சென்று...

யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெற்று வரும் அதிகார துஷ்பிரயோகங்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும், தர்மகர்த்தா சபையினரால் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த கோரியும் பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கல்லூரி பழைய மாணவர்களின் பிரித்தானிய கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12ஆம் திகதி Northolt Village Community Centre, Ealing Road, Northolt UB5 6AD பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம்...

மாணவர்களுக்கு முடிவெட்டுவதில் கட்டுப்பாடுகள் அவசியம்!!!

பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பது மாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை, அவர்களது தலை முடிவெட்டு என்பவற்றிலேயே தங்கியுள்ளன. அதனால் மாணவர்கள் அநாகரிகமான தோற்றத்தில் பாடசாலைக்குச் சமூகம் அளிப்பது தடுக்கப்பட வேண்டும். இவ்வாறான பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தக்கூடிய தோற்றத் தில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருவதில் பெற்றோர்கள் அக்கறை காட்டுவதுடன் அழகக அலங்கரிப்பாளர்களும் கவனம் செலுத்த வேண்டும்”...

தரம் ஒன்று மாணவர் அனுமதி: நேர்முகத் தேர்வு ஓகஸ்டில்

2019ஆண்டு பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. “சுற்றறிக்கைக்கு அமைவாக நேர்முக பரீட்சைக்கான குழு நியமிப்பதற்கான ஆலோசனைகள் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள விண்ணப்பப் படிவங்களை பட்டியலிடும் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டெம்பர் 15ஆம் திகதியளவில் முதற்கட்ட...

வடமாகாண ஆசிரியர்களுக்காக கைவிரல் அடையாள நடைமுறையில் மாற்றம்

பாடசாலைகளில் தற்போது தின வரவிற்காக பயன்படுத்தப்படும் கைவிரல் அடையாள நடைமுறையினால் கடந்த ஆண்டு நூற்றிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டமை கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதனால் மாற்று ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் , வடக்கு மாகாணத்தில் தற்போது...

பல்கலைக்கழக அனுமதிக்கான “Z” வெட்டுப்புள்ளி இந்தவாரம் வெளியாகும்!

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையினூடாக தேர்ச்சி பெற்று பல்கலைக்கழக நுழைவிற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி இந்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. 2017 ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய அவர்களுக்கான வெட்டுப்புள்ளி நிர்ணயிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 25 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இந்நிலையில் தற்போது...

நாடுதழுவிய ரீதியில் ஆசிரியர்கள், அதிபர்கள் சங்கம் போராட்டம்!

கல்விச் சேவையில் அரசியல் பழிவாங்கும் போர்வையில் நியமனம் வழங்குவதை எதிர்த்து நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டுமென கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்கள் இணைந்து யாழ்...

வட்டுக்கோட்டையில் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக தெரிவித்து அக்கல்லூரியின் பழைய மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்திருந்தனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கல்லூரி வளாகத்துக்கு முன்னால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ‘கல்லூரியில் வியாபாரம் வேண்டாம்’, ‘மாணவர்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்’, ‘கல்லூரியின் மேன்மை பேணப்பட வேண்டும்’ என...
Loading posts...

All posts loaded

No more posts