யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக குறித்த மாணவன் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஊடகவியலாளரும் பல்கலைக்கழக மாணவனுமான ப.சுஜீவன் என்பவரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக வாளாகத்திற்குள் குறித்த மாணவனை சூழ்ந்த நான்காம் வருட மாணவர்கள், பகிடிவதை எனக்கூறி அவர் மீது சரமாரியாகத்...

வடக்கிலுள்ள தனியார் கல்வி நிலையங்களை பதிவு செய்யுமாறு பணிப்புரை!

வட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், “இதனடிப்படையில் வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் உரிமையாளர்கள் தமது கல்வி நிலையங்கள் தொடர்பான...
Ad Widget

வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களமே மர்மமாக இருப்பதாக ஆசிரியர் சங்கம் கவலை!!

வடமாகாண கல்வித்துறையில் மர்மங்கள் நீடிக்கின்றன. பணிப்பாளர்கள் இல்லை!! அதிபர்கள் இல்லை!! ஆசிரியர்கள் இல்லை!! இதுவே இன்றைய வடமாகாண கல்வியின் நிலை என்று கவலை வெளியிட்டுள்ளது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு மாகாணத்தில் உள்ள பிரதானமான யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் வெற்றிடம் ஒரு வருடத்தை...

மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை – பாடசாலை அதிபர் கடிதம்

வவுனியா – ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை என ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அதிபர் கெ.தனபாலசிங்கம், கொழும்பிலுள்ள மதுவரி ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். குறித்த கடிதத்தில், ‘வேலாயுதம் சுரேந்திரனால் எமக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தின்படி, அவரால் கண்டி வீதி, ஓமந்தைப்பகுதியில் அமைக்கப்படும் பியர் விற்பனை நிலையம்...

தமிழ் மாணவர்கள் பல்கலைக்கு தேர்வாவதில் வீழ்ச்சி!

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்வதாக கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சுதர்சன் கவலை வெளியிட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவை ஒன்றியத்தின் தலைவர் என். நிராஜ் தலைமையில் வெள்ளி விழா காரைதீவு கலாசார மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றது. இந்த விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ரி....

இந்திய துணை தூதரகத்தின் ஒழுங்கமைப்பில் வடமாகாண மாணவர்களுக்காக கல்வி கண்காட்சி!

இந்திய துனணத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய கல்வி கண்காட்சி பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி மூலம் இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்கள் இந்தியாவில் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் பாலச்சந்தர் குறிப்பிட்டார். இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன்...

வடக்கு மாணவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை!

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்த சிறப்பு விடுமுறைக்கான கட்டளையை கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார். இதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜனவரி 15ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படும் தமிழர்களின்...

அதிபர் ஆசிரியர்களை தாக்கும் முயற்சி – மாணவர்கள் போராட்டம்!

தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பாடசாலை மாணவர்கள் ஒன்று திரண்டு ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி பாடசாலைக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறிப்பிட்ட சில மாணவர்கள் பாடசாலையின் ஒழுக்க...

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்!

2018ம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்தார். விண்ணப்பங்களை ஒன்லைன் முறையில் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும். இதற்குரிய வழிகாட்டல்கள்...

சர்வதேச பரதநாட்டியப் போட்டி- கிராமிய நடன பிரிவில் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி முதலிடம்

இந்தியாவின் காஞ்சிபுரத்திலே ஏழாவது முறையாக இடம்பெற்ற ஹிடின் ஐடோல் (Hidden Idol ) சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் கிராமிய நடன பிரிவில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் முதலாமிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தனர். கடந்த வாரம் நடைபெற்ற இந்த கிராமிய நடனப்போட்டியில் பங்கேற்ற யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் 8...

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியீடு!- வதந்தியை நிராகரித்தது பரீட்சை திணைக்களம்

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் வெளியீடு குறித்து ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளை பரீட்சை திணைக்களம் நிராகரித்துள்ளது. பெறுபேறுகள் நேற்று (வியாழக்கிழமை) வெளியாகுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்த நிலையிலேயே பரீட்சை திணைக்களம் அதனை மறுத்துள்ளது. எவ்வாறாயினும், பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினத்திற்கு முன்னர் வெளியாகும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை...

தேசியப் பாடசாலைகளில் தரம்6இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை தேசியப் பாடசாலைகளில் தரம் 6இல் இணைப்பதற்கான வெட்டுப்புள்ளியை கல்வி அமைச்சு வெளியிட்டது. வடக்கில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளி 176 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய இரண்டுக்கும் 164 புள்ளிகள்...

வைத்தியசாலையில் தங்கியிருந்தபடி நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதும் மாணவி

டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியொருவர், க.பொ.த. சாதாரணதர பரீட்சை எழுதிவருகிறார். குறித்த மாணவி நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு வந்து, பரீட்சை எழுதி வருகிறார். யாழ் நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவர் திடீரென டெங்கு நோய்த்தொற்றிற்கு இலக்காகியுள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரீட்சைக்கு...

கல்­விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப்பரீட்சையில் ஆள் மாறாட்டம்!!

கல்­விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்­சை­யில் ஆள் மாறாட்­டம் செய்து பரீட்சை எழு­திய குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்­தால் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் துணுக்­காய் கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட பாலி நகர் மகா வித்­தி­யா­ல­யத்­தில் கடந்த 4ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது. இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் கல்­வித் திணைக்­கள வட்­டா­ரங்­கள்...

விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அவசியம் – ஆளுநர்

வடமாகாணத்தில் அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களை பாராட்டுவதற்கான விழா ஒன்றினை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். மருதனார் மடம் இராமநாதன் கல்லுாரியில் வலிகாமம் வலயகல்வி அலுவலகம் நடத்திய ஆசிரியர் கௌரவிப்பு விழா கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர்...

பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்க்க நிதி கேட்கின்றார்களா? 1954க்கு உடனே அழையுங்கள்!!

பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கு நிதி மற்றும் பாலியல் ரீதியில் இலஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் தாமதிக்காமல் 1954 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் பணிப்பின் பேரில் 46 ஆசிரியர்களுக்கு உடனடியாக இடமாற்றம்!!

யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட பாட­சா­லை­க­ளில் தேவை­யான ஆள­ணிக்­கும் அதி­க­மாக இருந்த 46 ஆசி­ரி­யர்­கள் போதிய ஆசி­ரி­யர்­கள் இல்­லாத பாட­சா­லை­க­ளுக்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ள­னர். கடந்த வாரம் கல்வி அமைச்­சுக்குப் பய­ணம் மேற்­கொண்ட வட­மா­காண ஆளு­நர் றெஜி­னோல்ட் குரே யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யப் பாட­சா­லை­க­ளின் அதி­பர்­களை அழைத்­துக் கலந்­து­ரை­யா­டி­னார். இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லின்­போது சில பாட­சா­லை­க­ளில் தேவைக்கு மேற்­பட்ட...

சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக நவம்பர் 30 ஆம் திகதி மூடப்படும்!

சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக நவம்பர் 30 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பாடசாலைகள் மீண்டும் 1 ஆம் தவணைக்காக 2019 ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதரண தரப் பரீட்சை...

மாணவர்கள் மத்தியிலும் தாக்கத்தை செலுத்தும் அரசியல் நெருக்கடி!

கடந்த 26 ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை தற்போது மாணவர்கள் மத்தியிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நல்லாட்சி அரசாங்கத்தால் மாணவர்களுக்கான சீருடைக்கு பதில் வவுச்சர் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால் புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர் முறைக்கு பதிலாக மீண்டும்...

சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆள்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

வரும் டிசெம்பர் மாதம் இடம்பெறும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என்று ஆள்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார். விண்ணப்பித்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை கிடைக்கப் பெறாவிட்டால் அல்லது ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் விரைவாக ஆள்பதிவுத் திணைக்களத்திற்கு வந்து திருத்திக்கொள்ளுமாறு அவர்...
Loading posts...

All posts loaded

No more posts