Ad Widget

மாணவர்கள் மத்தியிலும் தாக்கத்தை செலுத்தும் அரசியல் நெருக்கடி!

கடந்த 26 ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை தற்போது மாணவர்கள் மத்தியிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நல்லாட்சி அரசாங்கத்தால் மாணவர்களுக்கான சீருடைக்கு பதில் வவுச்சர் முறை கொண்டுவரப்பட்டது.

ஆனால் புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர் முறைக்கு பதிலாக மீண்டும் சீருடைத் துணியைப் பெற்றுக்கொடுப்பதாக, கல்வி அமைச்சு குறிப்பிட்டிருந்த போதிலும் இதுவரை அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைத்துணி வழங்குவது தொடர்பிலான எவ்வித ஒப்பந்தங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் காரணமாக நாடாளுமன்றிலும், பிரதேசங்களில் நடைபெறும் கூட்டங்களிலும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பவர்கள் தற்போது மாணவர்களின் எதிர்கால நடவடிக்கைகளையும் கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே இந்த தவணை முடிவடைவதற்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம். என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Posts