- Tuesday
- September 15th, 2026
குற்றவாளிகள் என தாங்கள் அடையாளம் காணப்பட்டால் தம்மை சாகும் வரை தூக்கிலிடுமாறு வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இன்றைய தினம் சந்தேகநபர்கள் பத்து பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது தாம்...
யாழ். சிறைச்சாலைக்குள் இருக்கும் கைதி ஒருவருக்கு பாணுக்குள் கஞ்சா வைத்து கொடுக்க முற்பட்ட நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மானிப்பாய் - பூங்காவடி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். சந்தேகநபர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர் எனவும், 30 கிராம் கஞ்சாவினை ஒரு இறாத்தல் பாணுக்குள் வைத்து சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளார் எனவும்...
மிருசுவில் பகுதியில் நபர் ஒருவரை உலக்கையால் அடித்துக்கொலை செய்த மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முருகேசு சத்தியநாதன் என்பவரே அவரது வீட்டில் வைத்து இவ்வாறு அடித்துக்கொலை செய்யப்பட்டவராவார். கொலை சம்பவத்தினை புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அதே...
யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சீர்திருத்த திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் தை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. இதன்படி பாலியல் துஸ்பிரயோகத்தினால் 149 சிறுவர்களும் பாலியல் சேஷ்டைகளினால் 18 சிறுவர்களும், மற்றும் உடல்...
நெடுந்தீவு கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்து ஒப்படைத்துள்ளதாக யாழ்.மாவட்ட கற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இந்திய புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் ஒரு படகில் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை இரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்....
திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பு அதிகாரியாக சேவைபுரிந்த கடற்படை சிப்பாயின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களின் வீட்டுத் தொலைபேசிகளுக்கு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை நீதிமன்றத்தில் வைத்து கடற்படை ஏற்றுக்கொண்டுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளில் கடத்திச்செல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள் என்ற விடயத்தை நீதிமன்றத்தில் வைத்து கடற்படை...
துபாயில் ஆளில்லாத வீடுகளில் நுழைந்து கொள்ளையிட்டதாக கூறப்படும் ஐந்து இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை துபாயின் அல் பார்ஷா (Al Barsha) பகுதியிலுள்ள ஆடம்பர வீடொன்றில் கொள்ளையர்கள் புகுந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட்டு அவர் வந்து பார்த்த வேளை, 250,000 திர்ஹாம் பெறுமதியான கடிகாரங்கள் மற்றும் 100,000 திர்ஹாம் பணம்...
கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் பதிவு செய்யப்பட்ட பாலியல் துஷ்பிரயோக சம்பங்களில் சுமார் 93 சதவீதமானவைக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. ருவான் குணசேகர தெரிவித்தார். கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களுக்குள் மட்டும் 1,850 பாலியல் குற்றங்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவற்றுள் 93 சதவீதமானவை அதாவது...
உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் குடி நீர் போத்தல்களை விற்பனை செய்த சாவகச்சேரி பகுதியை சேர்ந்த வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (06) தீர்ப்பளித்தார். சாவகச்சேரி பொதுச்சுகாதார பரிசோதகரால் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையின் போது, குறித்த குடிநீர் போத்தல்கள்...
2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இடம்பெற்ற கொலைகள், பெண்கள் துஷ்பிரயோகம், தற்கொலைகள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பான விரிவான அறிக்கை, இன்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவால், வௌியிடப்பட்டது. பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கொலைகள் 2014ம் ஆண்டு - 548...
நுகர்வோர் அதிகாரசபையின் உரிய அனுமதி இன்றி கோதுமை மாவின் விலையை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் அதிகார சபையால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கோதுமை மாவை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்கள் விலையை அதிகரிக்க உரிய அனுமதி வழங்கப்படவில்லை...
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (05) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இலுப்பையடி, வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணான கந்தையா யோகரத்தினம் என்பவரே யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வட மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு கிளை காரியாலயத்தில் இம்முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். தனிமையில் வசித்து வரும் குறித்த மூதாட்டியின்...
பேக்கரி உற்பத்திகளுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் இவ் வாரத்துக்குள் தீர்மானிக்கவுள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் சில வரித் திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன கூறியுள்ளார். தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி எனப்படும் என்.டீ.டி வரி ஜனவரி மாதம்...
கஞ்சா, மதுபானம் மற்றும் இதர போதைவஸ்துக்களை பாவித்து சிறு பிரச்சினைகளை ஏற்படுத்திப் பின்னர் அதனை சமூகப் பிரச்சினையாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர் என யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் தெரிவித்தார். யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் கடந்த 2ஆம், 3ஆம் திகதிகளில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்று அப்பகுதியில் பதற்ற நிலைதோன்றியது. இதனையடுத்து, பொலிஸாரின்...
பெண்ணின் அந்தரங்கப் படங்களை வைத்துக்கொண்டு தனது ஆசைக்கு இணங்குமாறு அப்பெண்ணை மிரட்டிய ஒருவரை பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - வடமராட்சி - பருத்தித்துறையில் புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த பெண் தனது அந்தரங்கப் படங்களை தனது கைத்தொலைபேசியில் உள்ள 'வைபர்' மூலம் அதே பகுதியில் வசிக்கும்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவின் 'பிஸ்டல் அணியினர்' பயன்படுத்திய இரு கைத்துப்பாக்கிகளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். செவனகல பொலிஸார் கடந்த மூன்று மாதங்களாக நடத்திய விசாரணைகளின் பிரகாரமே இவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் இராணுவத்திலிருந்து தப்பிவந்து பின்னர் சட்டபூர்வமாக அதிலிருந்து விலகியவர் (வயது 45 ) என்று பொலிஸார்...
கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போன சம்பவம் தொடர்பாக தரம் 6 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேக நபர்களை தலா ஐம்பதாயிரம் ரூபாய் பிணையிலும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணைகளிலும் செல்லுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி...
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் இன்று முதல் கைது செய்வற்கான விசேட சட்டம் ஒன்று அமுல் படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தையொட்டியே இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விசேட சட்டம் இன்று முதல் எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பற்ற இடங்களான ஆறு, கடல், குளங்களில் பொதுமக்கள் குளிக்க...
யாழ். பாடசாலை ஒன்றின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ், நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகநபர்கள் வசமிருந்த ஒன்பது ஹெரோயின் பைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் சங்கரப்பிள்ளை வீதி, ஆணைக்கோட்டை, மற்றும் இணுவில் தெற்கு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீண்டகாலமாக இவர்கள் மாணவர்களை இலக்கு...
இணையத்தளங்களில் அவதூறு செய்திகளை வெளியிட்டவர் எனும் சந்தேகத்தில் நபர் ஒருவரை ,இணைய குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளனர். இணையத்தளங்கள் மூலம் அவதூறுக்கு உள்ளானவர்களை யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். குறிப்பிட்ட இணையத்தளங்கள் சில தனிப்பட்ட நபர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் செய்திகளை பாலியல் குற்றம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. அவை தொடர்பில்...
Loading posts...
All posts loaded
No more posts
