பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்தால் ஆண்மை நீக்கம்!

பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டுமென, வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதனை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் ஆமோதித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பாக, வேலியே பயிரை மேய்வதைப் போன்று வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை ஆசிரியர்களே துஷ்பிரயோகத்திற்கு...

அரியாலை படுகொலைச் சம்பவம்: STF அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை, நேற்று (வியாழக்கிழமை) மீள நடைபெற்றதோடு சந்தேகநபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். கடந்த மாதம் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சந்தேகநபர்கள் அடையாளம்...
Ad Widget

வாள்வெட்டு விவகாரம்: இக்ரம் உள்ளிட்ட அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இக்ரம் உள்ளிட்ட ஆறு பேரின் விளக்கமறியலில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை எதிர்வரும் 28ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையில், கடந்த...

வழிப்பறி கொள்ளையர்கள் சங்கானையில் கைது

யாழ்ப்பாணம், சங்கானை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், சங்கானை வீதியில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு செல்ல முற்பட்ட வேளையிலேயே பொலிஸார் இவர்களை மடக்கி பிடித்துள்ளனர். இந்நிலையில், குறித்த இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில்...

பிரமிட்முறை வர்த்தகத்தில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு இடைக்காலத்தடை!

தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமையை ஒத்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று இடைக்கால தடைவிதித்துள்ளது. குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொண்ட போதே நீதிபதி இடைக்கால தடையுத்தரவினைப் பிறப்பித்தார். மேலும் குறித்த நிறுவனத்தின் வர்த்தக...

வித்தியா படுகாலை வழக்கு மூல வழக்கேடுகள் நீதிமன்றில் கையளிப்பு

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவுக்கு அமைவாக, தீர்ப்பாயத்தால் நடத்தப்பட்ட மூல வழக்கேடுகள் மற்றும் அதன் பிரதிகள், உயர் நீதிமன்றில் நேற்று (13) கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் மற்றும் உத்தியோகத்தர்கள் நேரில் சென்று வழக்கு ஆவணங்களை உயர்...

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேருக்கு 56 வருடங்கள் சிறை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழ்வருக்கு தலா 56 வருட கடுங்காவல் தண்டனை விதித்து அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வில்பத்து தேசிய சரணாலயத்திற்குள் கிளைமோர் குண்டை வெடிக்கச் செய்து, மருத்துவர் உட்பட ஏழ்வரை கொலை செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டவர்களுக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டிக்கப்பட்டவர்கள் மன்னார், சாவகச்சேரி, வவுனியா,...

டில்லு குழுவின் தண்டனை உறுதியானது

யாழ்ப்பாணம், மடம் வீதியில் குடும்பத் தலைவர் ஒருவரை வாளால் வெட்டிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 8 பேருக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தண்டணையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (12) உறுதி செய்தார். பொலிஸாரால் டில்லு குறூப் என அழைக்கப்பட்ட இளைஞர்கள் குழுவைச் சேர்ந்த 8 பேருக்கே, தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்...

யாழில் நடுவீதியில் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் கைது

நடுவீதியில் கேக் வெட்டி பிறந்தநாளினை கொண்டாட முயன்ற இளைஞர்களை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ளே வீதியொன்றில் பிறந்தநாளை நேற்று இரவு இளைஞர்கள் சிலர் கொண்டாட முயன்றுள்ளார்கள். அதன் போது தமது மோட்டார் சைக்கிள்களை வீதியின் குறுக்கே நிறுத்தி அதன் மீது பிறந்த நாள் கேக்கினை வெட்ட இளைஞர்கள் தயாராகி உள்ளனர். அந்நேரம்...

சிறுமியை கடத்திய உறவினருக்கு விளக்கமறியல்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்ற உறவினரை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 13வயதுடைய சிறுமியை அவரது உறவினர் ஒருவர் சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 05ஆம் திகதி தன்னுடன் அழைத்து சென்று வவுனியாவில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். அந்நிலையில்...

நெடுந்தீவு கடற்பரப்பில் 27 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 27 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவுக்கு தென்கிழக்கே இவர்கள் நேற்று (திங்கட்கிழமை) இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, யாழ். கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய ஐந்து விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம்...

ஆனைக்கோட்டையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: மானிப்பாய் பொலிஸார்மீது மக்கள் சந்தேகம்!!!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் இலக்கத்தகடு மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் சென்ற கும்பலொன்று, வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்தோடு, தாம் கொண்டுவந்த வாள்களால் வீட்டிலுள்ள பெறுமதிமிக்க பொருட்களை சேதப்படுத்தி, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர். அதன் பின்னர், 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும்...

வாள்வெட்டுக் குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது

'வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன, என்று பொலிஸார் தெரிவித்தனர். "யாழ்ப்பாணம் - மானிப்பாய் - காரைநகர் வீதியில் நேற்று மாலை பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கும்பல் ஒன்று வாள்களுடன் நடமாடியதுடன் வழி பறிப்பிலும் ஈடுபட முயற்சித்துள்ளனர். பொதுமக்கள்...

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்திய ஆவா குழு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் மீதும் மாங்குளம் சந்தியில் வைத்து பிறிதோர் இளைஞர் மீதும் தாக்குதல் நடத்திய ஆவா குழுவைச் சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் வைத்து, வௌ்ளிக்கிழமை (08) இரவு 8.45 மணியளவில் மல்லாவிப் பகுதியில்...

ஊடகவியலாளர் மீது தென்மராட்சியில் தாக்குதல்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒளிபரப்பாக செயற்படும் யாழ்.எப்எம் வானொலியில் கடமையாற்றும் ஊடகவியளாளர் ஒருவர் சாவகச்சேரியில் அமைந்துள்ள வீட்டிற்கு வரும்போது அவருடைய வாகனத்தை மறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.எவ்எம் பிரதம செய்தியாளரான எஸ்.மனோகரன் என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டவராவார். இச் சம்பவம் நேற்று மாலை சாவகச்சேரி தனங்களப்பு வீதியில் இடம்பெற்றுள்ளது. தாக்கியவர்கள் முச்சக்கரவண்டியில் மிகுந்த மதுபோதையில் தாக்குதலை...

நீதிமன்றுக்கு அழைத்துவரும் வழியில் தப்பி ஓடிய சந்தேக நபர்கள் !!

வவுனியா சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் இருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இச்சம்பவம், நேற்று (05) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சான்றுப் பொருட்கள் அறையை உடைத்து, கஞ்சா திருடியக் குற்றச்சாட்டில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவ​ரில் இருவரே, இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர். எனினும், 2 மணிநேர தேடுதலின்...

சுவிஸ்குமாரை பொலிஸ் காவலிலிருந்து விடுவித்த உதவிய குற்றச்சாட்டு வழக்கு முன்னாள் டிஜஜியின் சாட்சியத்தை ஏற்க நீதிமன்று அனுமதி

வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை பொலிஸ் தடுப்பிலிருந்து விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கின் முதலாவது சந்தேகநபரான வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு கீழ் பணியாற்றிய யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் என்.எல்.பெரேராவால் வழங்கப்படும் சாட்சியைப் பதிவு செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் இன்று கட்டளையிட்டார். லலித்...

துன்னாலை இளைஞன் சுட்டுக்கொலை: பொலிஸார் இருவரும் பிணையில் விடுவிப்பு

வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இளைஞன் ஒருவரைச் சுட்டுக்கொன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. வடமராட்சி கிழக்கில் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த யோகராசா தினேஷ்...

யாழில் மாணவர்களை இலக்குவைத்து “ஹெரோய்ன் ரொபி“

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதெனக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, யாழ்ப்பாணத்தில் “ஹெரோய்ன் ரொபி” விற்கப்படுவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திரண எம்.பி, கல்வியமைச்சரிடம் கேள்விகளை கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அளித்த பதிலையடுத்தே, அவர் மேற்கண்டவாறு...

சுன்னாகம் பொலிஸாரினால் தாக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

இளைஞர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நீதி கேட்ட போது, தனது மோட்டார் சைக்கிளுக்குள் கஞ்சாவை வைத்து தன்னை அச்சுறுத்தியதாக யாழ்.வர்த்தகர் மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் மாவீரர் நாளான கடந்த 27ஆம் திகதி இளைஞர்கள் மீது சுன்னாகம்...
Loading posts...

All posts loaded

No more posts