- Saturday
- July 12th, 2025

வனவளத்திணைக்களம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். மாவட்டச்செயலகத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச காணிகள் அனைத்தும் தங்களுடைய வனவளத் திணைக்களத்திற்குரியவை என்றும் அதில் எந்த பணிகளை மேற்கொள்வதாக இருந்தாலும் தங்களின் அனுமதியை...

மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை காணிகள் விடுவிக்கப்படும் வரை கைவிட வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். நேற்றயதினம் கேப்பாபுலவு மக்களை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 52 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கும்,...

தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் தற்போது செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் பிரகாரம் படிபடியேனும் காணிகள் விடுவிக்கப்படும்...

கேப்பாப்பிலவு மக்களின் காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் அல்லது நஷ்டஈட்டுத்தொகையே வழங்கப்படும் என இராணுவத்தினர் உறுதியாக கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவு மக்களின் காணியிலுள்ள முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தலைமையகத்தை அகற்றி அந்த காணிகளை மக்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) அரசாங்க அதிபர் மற்றும்...

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பொன்னகர், பாரதிபுரம், செல்வபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளதுடன், பயன்தரும் மரங்களும் சேதமடைந்துள்ளது. திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியமையால் குறித்த பாதிப்பை மக்கள் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வீடுகள்...

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலை அண்டிய வட்டுவாகல் பகுதி ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க கோரி மக்களால் நேற்று 19-04-2017 ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து கேப்பாபிலவு சென்று அங்க தொடர்ச்சியாக காணி விடுவிப்பிற்காகப் போராவரும்...

அகிம்சை போராட்டத்தின் மூலம் தமிழர்களின் போராட்டத்தை முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்த அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் இடம்பெற்றது. இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற இந் நினைவுதின நிகழ்வில், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு,...

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடு தொடர்பிலான அளவீட்டின் போதே, இந்த அமைதியின்மை இன்றைய தினம் ஏற்பட்டதாக அறியமுடிகின்றது. யுத்தத்தினால் கொக்குளாய் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த தமிழ் மீனவர்கள் இடம்பெயர்நத நிலையில், தமிழர்களின் கரைவலைப்பாடுகளை நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துவந்த...

கிளிநொச்சியில் முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக ஊடகத் தொழில் ஈடுப்பட்டு வரும் ஊடகவியலாளர்களின் தொழில் திறன்விருத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் க.திருலோகமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்று (17) கிளிநொச்சியில் இடம்பெற்ற கிளிநொச்சி ஊடக அமையத்தின் இருபது ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பின் கீழிருந்த மற்றும் யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்களை, உரியவர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று, பாதுகாப்பு அமைச்சின் தகவல் தெரிவிக்கிறது. அவ்வாறு மீட்கப்பட்ட, சுமார் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை முதற்கட்டமாக கையளிப்பதற்கான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தகவல்...

வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், மழையுடன் கூடிய கடுங்காற்று வீசியமையால், 38 வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. அந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாம் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக, பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தினால், வவுனியா களுக்குன்னமடுவ, பெரியக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளே சேதமடைந்தன. எனினும், இந்த அனர்த்தத்தினால் எவருக்கும் சிறு காயங்கள்...

பூநகரி - முட்கொம்பன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக பயணித்த வாகனம் ஒன்று, பூநகரி - பரந்தன் பாதையிலிருந்து முட்கொம்பன் நோக்கிச் செல்வதற்கு திருப்பிய போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், இதன்போது காயமடைந்த இருவரும் கிளிநொச்சி...

முல்லைத்தீவில் கேப்பாபுலவு இராணுவத் தலைமையகம் முன்பாக தமது பூர்வீகக் காணிகளை மீட்கப் போராடும் மக்களுடன் இராணுவத்தினர் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இம் மக்கள் கடந்த மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த போராட்டத்தை 56ஆவது நாளாகவும் இன்றும் தொடர்கின்றனர். இந்த நிலையில் இராணுவத் தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இராணுவத்தினர் சென்று சந்தித்து புத்தாண்டு...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு ஆடை அணிந்து கவனயீர்ப்பை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை 54 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சித்திரை புதுவருடத்தில் கறுப்பு ஆடை அணிந்தும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். சித்திரை புதுவருட...

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற கலாசார நிகழ்வில் கரை எழில் எனும் நூலும் வெளியிடப்பட்டு வருவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் பல்வேறு ஆக்கங்களுடன் வெளியிடப்படுகின்ற கரை எழில் நூலில் கிளிநொச்சியும் மலையக தமிழர்களும் எனும் தலைப்பில் தமிழ்க்கவி என்பவரின் கட்டுரையும் வெளிவந்துள்ளது. குறித்த கட்டுரையில் எழுத்தாளர் கிளிநொச்சி வாழ் மலையக தமிழர்களை...

“இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடமோ அல்லது என்னிடமோ, பாதிக்கப்பட்ட பெண்ணினால் முறைப்பாடு செய்யப்படுமாயின், நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்தார். சிறிதரன் எம்.பியின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமாகி வேழன் என்றழைக்கப்படும் அருணாச்சலம்...

முல்லைத்தீவு - நாயாறு களப்புப் பகுதியில் அத்துமீறி நுழைந்த 23 சிங்கள மீனவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களால் அடாத்தாக அமைக்கப்பட்டிருந்த 8 வாடிகளில் 6 வாடிகள் அகற்றப்பட்டும் உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளரினால் கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி நாயாறு...

பாதுகாப்பு அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் அமைக்கப்பட்ட 150 கோடி ரூபா பெறுமதியான கட்டடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக் கட்டடம் அமைந்துள்ள தமக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு அங்குள்ள மக்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்ற நிலையில், மக்களுக்கு மாற்றுக் காணிகளும் பணமும் வழங்குவதற்கு அரச அதிகாரிகளுடன்...

முல்லைத்தீவு, புதுகுடியிருப்பு நகரப்பகுதியில் உள்ள பொதுச்சந்தைக்குரிய காணியில், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் நடத்தி வந்த சிறு வர்த்தக நிலையம், தேனீர் சாலை மற்றும் இலவச திரையரங்கு என்பவற்றை, அங்கிருந்து இராணுவத்தினர் அகற்றியுள்ளனர். இந்தத் திரையரங்கு, வர்த்தக நிலையம் என்பன கடந்த புதன்கிழமை (05) அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது, இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த...

தமது காணியை ஒப்படைக்குமாறு கோரி இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் இணைந்து விசப் போத்தலுடன் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டார். குறித்த பிரச்சினைக்கு ஒரு வார காலத்திற்குள் சரியான முடிவு வழங்கப்படும் என மாவட்ட செயலக அதிகாரியால் உறுதிமொழி வழங்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. வவுனியா தோணிக்கல்...

All posts loaded
No more posts