Ad Widget

காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் உள்ளது

தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் தற்போது செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் பிரகாரம் படிபடியேனும் காணிகள் விடுவிக்கப்படும் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

தனியார் காணிகளை விடுவிப்பதே தமது முதலாவது நோக்கம் என இராணுவம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

காணி விடுவிப்பு தொடர்பில் கிடைக்கப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு தாம் முன்னுரிமை வழங்கவுள்ளதமாகவும் இராணுவம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

தமக்கான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு பாரிய செலவீனம் காணப்படுவதாகவும், அரசாங்கம் அந்த செலவீனங்களை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தாம் உடனடியாக அந்த காணிகளை விட்டு வௌியேற தயாராகவுள்ளதாகவும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இரணைமடுவை அண்மித்து கையகப்படுத்தப்பட்டுள்ள 2439 ஏக்கர் நிலப்பரப்பை வெகுவிரைவில் படிபடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவம் உறுதியளித்துள்ளது.

கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள காணி விடுவிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சரவணபவன், சிறிதரன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts