- Saturday
- September 20th, 2025

உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் எம்.எஸ்.ஜீ எனும் சுவையூட்டியை இன்னும் இரு வாரங்களுக்குள் சந்தைகளில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

இலங்கையில் முதல் தடவையாக தேசிய சமூக வீடியோ கதையாக்கப் போட்டியொன்றை நடத்த இலங்கை அபிவிருத்தி ஊடக நிலையம் தீர்மானித்துள்ளது. நோக்கம் பிரதான நிலை ஊடகங்களில் தமது குரலுக்கான உரிய இடமும் பிரதிநிதித்துவமும் கிடைக்காத மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை ஒரே நிமிடத்தில் வீடியோ கதையாக சித்திரிக்கும் இளைஞர் யுவதிகளை அடயாளம் காண்பது இப்போட்டியின் நோக்கமாகும். சமூக ஊடகத்தில்...

தமிழ்மக்கள் பேரவையின் நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்டமுன் வரைபு தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை மிகவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்கள் தோறும் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங் களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதியப்பட்டுவருவதும் இதில் மக்கள் மிகவும் உற்சாகத்துடன்...

யாழ்ப்பாணத்திலிருந்து மாவிட்டபுரம் வரையில் இடம்பெற்று வந்த 769 ஆம் இலக்க பஸ் சேவையானது, நேற்று வெள்ளிக்கிழமை (04) முதல் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய முன்றல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. கீரிமலை நகுலேஸ்வரத்தின் திருவிழா கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இனிவரும் நாட்களில் ஆலயத்தின் முக்கிய திருவிழாக்கள் நடைபெறவுள்ளமையால், ஆலயத்துக்கு...

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் III ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது – வயது கட்டுப்பாடும் திருத்தப்பட்டுள்ளது. இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழிற் சங்கத்தினால் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் செய்த வேண்டுகோளுக்கு அமைய கல்வி நிர்வாக சேவையின் III ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு...

யாழ். போதனா வைத்தியசாலையானது பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் குறிப்பாக தாதியர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. வைத்தியசாலையின் சேவையை மேம்படுத்தி அதன் தரத்தை உயர்த்த பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த ஆண்டு வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வழங்கும் 6 மாடிக் கட்டடத் தொகுதி அமைக்கும் வேலைகள் சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மேல்...

கிளிநொச்சி மாவட்டத்தில் மின்சாரம் பெறுவதற்காக, மின்சார சபையின் கடன் திட்டத்துக்குள் மாட்டிக்கொள்ள வேண்டாம் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் இணைத்தலைவர்களில் ஒருவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். பூநகரி பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (02) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பூநகரிப் பிரதேச செயலர்...

யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள செம்மணி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. இதனைக் கருத்தில் கொண்ட நல்லூர் பிரதேச சபை மற்றும் மாநகர சபை ஆகியன செம்மணி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு தடை விதித்தன. தற்போது அங்கு விசேட கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு, அவ்விடத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது....

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கவுள்ளதாக அச்சுவேலி இராஜமாணிக்கம் திருமண மண்ட நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மார்ச் மாதம் 06ஆம் திகதி, வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, இலவசமாக தாலி, பட்டுப்புடவைகள், வேட்டிகள், வாழ்வதார உதவி மற்றும் வீட்டுத்தளபாடங்கள் என்பன திருமணத்தின்போது வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், திருமண செலவுகளையும் இராஜமாணிக்க திருமண...

இலங்கை உட்பட 55 நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட மாஸ் சொக்லெட்டுகளை மீளப்பெறுவதற்கு மார்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அண்மைக்காலமாக மார்ஸ் சொக்லெட் தொடர்பில் நுகர்வோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரபல சொக்கலேட் தயாரிப்பு நிறுவனமான மார்ஸ் தனது இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு விற்பனை செய்த, மில்லியன் கணக்கான மாஸ் மற்றும்...

கிளிநொச்சி வலய தொண்டர் ஆசிரியர் விபரம் வெளியாகியுள்ள நிலையில், விடுபட்டவர்களை உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சி கல்வி வலய நிரந்தர நியமனத்திற்கான தொண்டர் ஆசிரியர் பெயர்ப் பட்டியலில் விடுபட்டவர்களது பெயர் விபரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த பதிவு நடவடிக்கை கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தில் காலை 9 மணி தொடக்கம்...

இலங்கையில் இயங்கி வரும் செய்தி இணையத்தளங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஊடக அமைச்சில் செய்தி இணையத்தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக செய்தி இணையத்தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டுமென நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சு சகல செய்தி இணையத்தளங்களுக்கும்...

மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையான நேரத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அநாவசியமான மின் உபகரணங்களை பயன்படுத்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை பொது மக்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீள செயற்படுத்தும் வரையே இதனை...

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேவை ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பொதுமக்கள் சந்தித்து தமது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி புதன்கிழமை முதல் இது நடைமுறைக்கு வருகின்றது. வடமாகாணத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் இன மற்றும் மத பேதமின்றி ஆளுனரைச்...

அமெரிக்காவில் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் பவுடர் பாவித்த பெண் அண்மையில் கருப்பை புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இதனால் இவரது குடும்பத்துக்கு 72 மில்லின் அமெரிக்க டொல் நஸ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்த ஜக்குலின் (62) என்பவர் கடந்த 35 வருடங்களாக ஜோன்சன் அன்ட் ஜோன்சன் பவுடரையும், ஷவர் டூ ஷவர்...

கடந்த 16 ஆம் திகதி வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் நாளைய தினம் (24) ஹர்த்தால் அனுஷ்டிக்க கோரப்பட்டுள்ளது. யாழ் திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபார நடவடிக்கை அனைத்தையும் முற்றாக நிறுத்தி ஹார்த்தால் இடம்பெற வேண்டும் என கோரிய துண்டு பிரசுரங்கள் இன்று திருநெல்வேலி சந்தையில் ஒட்டப்பட்டுள்ளன....

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மற்றும் ஓட்டுனர்களுக்கு ஆகக்கூடியது 3 மாத விளக்கமறியலும் அபராதத்துடன் கூடிய 1 மாத கால சிறைத்தண்டனையும் வழங்குமாறு யாழ். மேல் நீதிமன்றத்துக்குட்பட்ட மாவட்ட நீதிமன்றங்களுக்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அறிவுறுத்தினார். இதேவேளை, விபத்தின் போது நபரொருவர் உயிரிழந்தார் எனின், அவ்விபத்தை ஏற்படுத்தியவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டில் வழக்கு பதிவு...

மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும் என அதன் செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தெரிவித்தார். மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் அதன் செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது. தீருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் புனரமைப்பு வேலைகள் காரணமாக இம்முறை மகா...

ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி இன்று (20) யாழ். நகரில் ஆரம்பமாகிறது. “நட்புறவும் தெளிவும்” என்ற தொனிப் பொருளில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சாரணர் ஜம்போரி நடைபெறவுள்ளது. 37 சாரணர் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 10,000க்கும் மேற்பட்ட சாரணர்கள் இதில் பங்குகொள்வர். 05 வெளிநாடுகளிலிருந்து 17 தலைவர்கள், 110 சாரணர்கள் இதில் பங்கு கொள்வரென பிரதான...

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பிலான முறைபாடுகளை அனுப்பி வைப்பதற்கான கால அவகாசம், சனிக்கிழமை (20) வரை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கெனவே, 2015 நவம்பர் 30 திகதிக்கு முன்னர் இது தொடர்பிலான முறைபாடுகளையும் ஆலோசனைகளையும் அனுப்பிவைக்குமாறு பொதுமக்களை அமைச்சு கேட்டுக் கொண்டிருந்த போதும், பலரின் வேண்டுகோளின் பிரகாரம் தொடர்ந்தும்...

All posts loaded
No more posts