முதன்முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா, கார்த்தி!

`பருத்தி வீரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களம் அமைந்ததால், தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக தற்போது வலம் வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `காற்று வெளியிடை' ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், வசூல் ரீதியாக ஓரளவுக்கு...

`காலா’ படத்தில் ரஜினிக்கு இணையான வில்லன் நடிகர்

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் `காலா' படம் குறித்து தான் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள ரஜினி, மீண்டும் ஜுன் 24-ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் இணைகிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஹூமா...
Ad Widget

சிவகார்த்திகேயனுக்கு இளம் சூப்பர் ஸ்டார் பட்டம்!

தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இன்ப சேகர் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இமான் இசையில் உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், கே.எஸ்.ரவிக்குமார், பொன்வண்ணன், பேரரசு, எஸ்.வி.சேகர், ஏ.எல்.விஜய், டி.இமான், பிரபு சாலமன், மனோபாலா, தம்பி ராமையா...

‘காலா’ படத்துக்கு தடை கோரி வழக்கு

சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.ஆர். விண்மீண் கிரியேஷன்ஸ் உரிமையாளரான கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா, சென்னை பெருநகர 6-வது உதவி உரிமையியல் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா என்ற கரிகாலன் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக கடந்த 1995...

அடுத்த இன்னிங்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும்படி படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் கடைசியாக பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான `சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு, `களவு' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்....

கடன் பாக்கியை மறக்காமல் கேட்ட இளையராஜா: விழுந்து விழுந்த சிரித்த ரஜினி

ரஜினிகாந்த் எனக்கு கடன்பட்டுள்ளார் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா கடந்த வாரம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு இசைஞானியை வாழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா கூறியதாவது, என் பிறந்தநாள் அன்று...

சினிமாத்துறையில் என் சுதந்திரம் பறிபோனது: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனை

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோணேட்டம்பேட்டை கிராமம். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்த கிராமத்தில் பிறந்தவர். இவர், தனது 72-வது பிறந்த நாளை தனது கிராமத்தில் எளிமையாக கொண்டாடினார். அவருக்கு கிராம மக்கள் பாராட்டு விழா நடத்தினர். முன்னதாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் கோணேட்டம்பேட்டை கிராமத்தில்...

பாரதிராஜா ஒரு குரங்கு, அவர் நடிகரே இல்லை: பார்த்திபன்

பாரதிராஜா அவர்களை பாராட்ட நமக்கு வாழ்நாளே பத்தாது. நான் கொஞ்சம் வித்தியாசமாக அவரை பாராட்ட நினைக்கிறேன். பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார். நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் குரங்கு பொம்மை. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட...

16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மிரட்ட வரும் ஆளவந்தான்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001-ல் வெளியான படம் `ஆளவந்தான்'. தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாச முயற்சியில் ஈடுபடும் கமல், இப்படத்தில் போலீஸ் அதிகாரி, சைகோ என இரு வேடத்தில் நடித்திருந்தார். இதில் சைகோ கமலின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. எனினும் வசூலில் இப்படம் நல்ல வரவேற்பை...

‘காலா’ படத்தில் ரஜினியுடன் இணையும் மம்முட்டி?

ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படப்பிடிப்பு மும்பையில் உள்ள குடிசைப்பகுதிகள், கடை வீதிகள், வழிபாட்டு தலங்களில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்நடிகைகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் கறுப்பு வேட்டி ஜிப்பா, முஸ்லிம் குல்லா அணிந்து மிடுக்காக நடந்து சென்று மக்களிடம் குறைகள் கேட்பது போன்றும், மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து குறுகலான தெருக்களில் பயணித்து தமிழர்களுக்கு உதவுவது...

காலா படத்தின் ஆரம்ப காட்சியில் ரஜினி பேசும் பஞ்ச் வசனம் லீக்!

பாட்ஷா படத்துக்கு முன்பு வரை ரஜினி படங்களின் உருவாக்க முறையே வேறு. படங்கள் அறிவிக்கப்படும். முதல் நாளே படப்பிடிப்பு காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகும். பின்னர் குறித்த இடைவெளியில் சில ஸ்டில்களை பிஆர்ஓக்கள் தருவார்கள். அடுத்து படம் வெளியாகும். முத்து படத்துக்குப் பிறகு படங்களின் ஸ்டில்களை வெளியிடுவதில் கெடுபிடி காட்டினர். குறிப்பாக பாபாவில் அனுமதியின்றி எந்தப் படமும்...

விஜய் படத்திலிருந்து லைகா விலகல்?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். தற்போது மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் தெலுங்குப்படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஸ்பைடர் பட பணிகளை முடித்துவிட்டு, 2017 தீபாவளிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக...

`விவேகம்’ படத்தை தொடர்ந்து தல அஜித்தின் அடுத்த அறிவிப்பு என்ன?

அஜித் தற்போது `சிறுத்தை' சிவா இயக்கத்தில் `விவேகம்' படத்தில் நடித்து வருகிறார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள `விவேகம்' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான `விவேகம்' படத்தின் டீசர்,...

தமிழ் மொழியின் சிறப்பு: `சங்கமித்ரா’ குறித்து படக்குழு வெளியிட்டுள்ள தகவல்

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா'. ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படத்தின் தொடக்க விழா பிரான்சில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில், அதாவது ரூ. 300 கோடி செலவில் உருவாக உள்ள...

வித்யா பாலனுக்கு பதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் யூமா குரேஷி!

பா.ரஞ்சித் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் உருவான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனை அடுத்து, “எந்திரன்-2” படத்திற்கு பிறகு, ரஜினியின் அடுத்த படத்தையும் ரஞ்சித்தே இயக்குவது என்று முடிவானது. இப்படத்தை தனுஷின் wunderbar தயாரிக்கிறது. மும்பையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகிறது என்ற தகவலை தயாரிப்பு...

சாமி வெற்றிக் கூட்டணி உடைந்தது!!

ஹரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் விக்ரம், த்ரிஷா, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடிக்க 2003ம் ஆண்டு வெளிவந்த 'சாமி' படம் மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பரபரப்பான ஆக்ஷன் ஒரு காரணமாக இருந்தாலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இடம் பெற்ற பாடல்களும் முக்கிய காரணமாக இருந்தது. படத்தில்...

ரஜினியின் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்

கபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற 28ஆம் தேதி சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் துவங்கவிருக்கிறது. படத்திற்கு பூஜை போடப்படும் அன்று பப்ளிசிட்டி செய்வதற்காக ரஜினி- 161 படத்திற்கான ரஜினி சம்பந்தப்பட்ட ஃபோட்டோ ஷூட் சமீபத்தில் நடந்தது. பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் இப்படத்தின் கதை மும்பை தாராவி பகுதியில்...

‘கேப்டன்’ ஜேக் ஸ்பாரோவை கதிகலங்க வைக்கும் வைரஸ்!

உலக நாடுகளை மிரட்டிவரும் ‘Wannacry ransomware' எனப்படும் இணைய வைரஸ் ‘பைரட்ஸ் ஆப் தி கரீபியன் - 5’ திரைப்படத்தை ஹாக் செய்து கோடிக்கணக்கில் பணத்தை கேட்டு மிரட்டிவருகிறது. ஏறத்தாழ 150 நாடுகளுக்கு மேல் இணையத்தின் மூலம் பரவி பன்முனை சைபர் தாக்குதலை நடத்திவருகிறது ‘WannaCry ransomware’ எனப்படும் இணைய வைரஸ். இதுவரை 3 லட்சம்...

பணத்துக்காகவே டி.வி. தொகுப்பாளர் ஆனேன்: கமல்

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கமல், முதன்முறையாக சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார். இந்தியில் அமிதாப் பச்சன், சல்மான்கான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிகழ்ச்சிக்குண்டான டீசரை தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் காந்த கண்களை வைத்தே அந்த டீசரை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இந்நிலையில்,...

மேஜிக் கலைஞராக நடிக்கும் விஜய்!

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். சென்னை, மதுரையில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்து வருகிறது. இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts