Ad Widget

இலங்கையில் பொலித்தீன் பயன்படுத்தினால் 10,000 தண்டம்!

சூழல் மாசை கட்டுப்படுத்தும் வகையில் பொலித்தீன் மற்றும் பிளாிஸ்டிக் பாவனையை முற்றாக தடை செய்யும் நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது. எதிா்வரும் செப்டெம்பா் முதலாம் திகதி தொடக்கம் இத்தடை அமுலுக்கு வரும் எனத் தெரிய வருகின்றது.

20 மைக்குரோனுக்கு குறைந்த தடிப்பையுடைய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் மற்றும் பாவனை வியாபாரம் மற்றும் உற்பத்தி ஆகிய அனைத்தும் குறித்த திகதி தொடக்கம் தடை செய்யப்பட இருக்கின்றது.

சட்ட ரீதியாக தடை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தின் பின்னா் யாரேனும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அல்லது தயாரித்தால் அல்லது விற்பனை செய்தால் அவா்கள் மீது 10000 தண்டமும் இரண்டு வருட சிறையும் விதிக்கப்படும் என்று மத்திய சூழலியல் அதிகார சபை அறிவித்துள்ளது.

Related Posts