- Friday
- January 9th, 2026
வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை (20.12.2014) மாங்குளத்தில் கோழிக்குஞ்சுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு...
இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 30 அடியை எட்டியுள்ளது. 31 அடியை எட்டுமாக இருந்தால் வான் கதவுகள் திறக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலைமையைக் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் நேற்று மாலை நேரில் சென்று ஆராய்ந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக நீர் வரத்து...
குடும்ப ஆட்சியை இல்லாதொழிக்க பொது வேட்பாளரை வெற்றி பெறச்செய்வதில் பங்குதாரர் ஆகுங்கள் என வடமகாணசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்தார். வவுனியா மாங்குளத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில் -...
தமிழ் பேசும் மக்களனைவரையும் ஒரே நாட்டவர் என்ற ரீதியில் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இணையாக பராமரித்தவர் வருபவர் எமது ஜனாதிபதியே என சிறுதொழில் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று (18) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் 2015 ஐந்தாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து உரையாற்றும்...
முல்லைத்தீவு தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை ! உங்கள் பகுதிக்கு வந்து உங்கள் மத்தியில் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். பௌத்த குருமார் மற்றும் அனைத்து சமய பெரியார்களிடமும் ஆசிர்வாதம்பெற்றவனாக உரையாற்ற விரும்புகிறேன். குறிப்பாக 30 வருட காலமாக நீங்கள் இருளில் மூழ்கியிருந்தீர்கள். இந்த 30 வருட காலத்தில்...
கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்தி உருத்திரபுரம் வீதியில் புகையிரத கடவையைக் கடந்து செல்ல முற்பட்ட பிக்கப் வாகனத்தை புகையிரதம் மோதியதில் வாகனத்தில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும் விபத்து தொடர்பில் தெரிய வருவது, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி...
தனது கணவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் (வயது 26) முகமாலைப் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார். இதுவரை அவர் குறித்த எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. இவ்வாறு சாட்சியமளித்தார் பிரபாகரன் பாலேஸ்வரி. ஆணைக்குழுவின் இறுதி நாள் அமர்வு இன்று புதன்கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெறுகிறது. இதில் சாட்சியமளித்த குறித்த பெண்...
நாளை வியாழக்கிழமை முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முள்ளியவளை ஐயனார் கோவில் வளாகத்தில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தலுக்காக பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார். பிரசாரக் கூட்டத்தில் மக்களை கலந்துகொள்ளுவதற்கு வசதியாக இலவச போக்குவரத்து சேவைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதனையிட்டு நேற்று முதல் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் விசேட பாதுகாப்பு...
கிளிநொச்சி, திருமுறிகண்டி பகுதியில் வசித்து வரும் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டிலிருந்த முக்கிய ஆவணங்கள் செவ்வாய்க்கிழமை (16) பகல் திருடப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் முறைப்பாடு பதிவு செய்ததாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். ஊடகவியலாளரும், அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்த நேரம், வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்துள்ள இனந்தெரியாத நபர்கள், அங்கிருந்த ஆவணங்களை திருடிச் சென்றுள்ளதாக...
வடமாகாண சபை உறுப்பினர் அரியரட்ணம் பசுபதியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலாளர் பிரிவில் 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரதேசத்திலுள்ள 8 வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களின் சுயதொழில் உதவிக்காக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதுடன், அதனைக்கொண்டு அம்மக்கள் சுயதொழில் வாய்ப்பாக கால்நடை வளர்ப்பை மேற்கொண்டதுடன்,...
ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை அடுத்த ஆண்டு முற்பகுதியிலிருந்து புதுப் பொலிவுடன் மீள இயக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையின் முன்னாள் பணியாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது பற்றி மேலும் அவர் தெரிவிக்கையில் குறித்த ஓட்டுத் தொழிற்சாலையை...
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின்போது அழைக்கப்பட்டவர்களில் 33 பேர் சாட்சியமளித்தனர். நேற்றய தினம் சாட்சியமளிப்பதற்காக 52 பேருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதும் 33 பேரே சாட்சியமளித்தனர். நேற்றய சாட்சியங்களில் அதிகளவானவை இராணுவத்திற்கு எதிராகவே பதிவாகின. செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் இருந்து 10 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளுக்கு...
இந்திய மீனவர்களின் வருகையில் தமது இறால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி முல்லைத்தீவுப் பகுதி மீனவர்கள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளினால் தமது தொழிலை மேற்கொள்வதற்கு வசதியாக உரிய நடவடிக்கை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என அம்மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் பெரும் எண்ணிக்கையில் வருகை...
எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காரணமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றய தினம் (09) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு...
பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்காக கிளிநொச்சியில் புதன்கிழமை இடம்பெறவிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் தின ஒன்றுகூடலில் செம்மஞ்சள் நிற ஆடைகளுடன் கலந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில், அக்கட்சியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திர விடுத்துள்ள ஊடக...
நாங்கள் மக்கள் நலன் கருதியே அரசியலில் உள்நுழைந்துள்ளோம். எமக்கு எமது மக்கள் நலமே முக்கியம். அவர்களின் விடிவே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அவர்களின் சுதந்திரமும் சுபீட்சமும் எமது தாரக மந்திரங்களாகத் தொனிக்கட்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது....
வடக்கு மாகாணம் இதுரைகாலம் பாதிப்புற்றவாறு இனியும் பாதிப்புக்குள்ளாக விடக்கூடாது. எமது பிழையான நடத்தைகளை, வழிமுறைகளை, சிந்தனைகளை மாற்ற நாம் முன்வர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம், தாய்ப்பாலூட்டல் ஊக்குவிப்பு மையம், இளையோர் நேய சுகாதார நிலையம் என்பன சனிக்கிழமை திறந்து...
விடுதலைப் புலிகளின் வங்கிகளில் மக்களால் அடகு வைக்கப்பட்ட மற்றும் படையினரால் கண்டெடுக்கப்பட்ட நகைகளை அவர்களுக்கு மீளக் கையளிக்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது அயிரத்து 960 பேருக்கு தங்க நகைகள் மீளளிக்கப்பட்டன. மன்னாரைச் சேர்ந்த 223 பேருக்கும், வவுனியாவைச் சேர்ந்த 319 பேருக்கும்,...
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் வைபவம் கிளிநொச்சியில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு மோட்டார்...
போர் நிறுத்தக் காலப்பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாகக் கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் ஜயரத்னம் மற்றும் இராணுவ கெப்டன் லக்கீ ஆகியோர் உள்ளடங்கலான 80பேர் தொடர்பான தடயவியல் ஆய்வு நேற்று செவ்வாய்க்கிழமை (02) ஆரம்பிக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட ஒட்டுசுட்டான், இந்திமடு, சமளன்குளம் ஆகிய பகுதிகளில், கடந்த 2006ஆம் ஆண்டு...
Loading posts...
All posts loaded
No more posts
