- Thursday
- January 15th, 2026
கனடா ரொறன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19.03.2017) முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளார். கனடா ரொறன்ரோ மாநகர சபைக்கும் யாழ் மாநகர சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (19.03.2017) கைச்சாத்திடப்பட்டுள்ளது. யாழ் பொது நூலக...
கிளிநொச்சியில் 28 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை நேற்று காலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முதலமைச்சரின் காலில் விழுந்து தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கதறி அழுதுள்ளனர். அத்துடன் தமது உறவுகளின் விடுதலைக்கு முதலமைச்சர் முயற்சி எடுக்கவேண்டுமெனவும், தங்களுக்காக குரல்கொடுக்கவேண்டுமெனவும் அவரின்...
கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியில் தங்கியுள்ள தமக்கு, காணி மற்றும் வீட்டுத்திட்டங்களை பெற்றுத்தரக்கோரி, கடந்த 15 நாட்களாக மேற்கொள்ளுப்பட்டுவந்த கவனயீர்ப்புப் போராட்டம், முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. காணி உரிமையாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிராமசேவகர் மற்றும் மதகுரு ஆகியோர், போராட்டத்தில்...
நேற்றைய தினம் ஓடிசுட்டன் சந்தியில் பிரதான வீதிக்கு ஏற முற்பட்ட மோட்டார் வாகனமும் பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த டிப்பர்வாகனமும் விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளில் பயணித்த முன்னாள் போராளியும் வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் முன்னாள் பொருளாளருமான குமாரசாமி நந்தகோபால்(நந்தன்) என்பவரும் அவருடைய மகனும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குமாரசாமி...
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு ஆதரவு வழங்கவேண்டும் என யாழப்பல்கலைக்கழக முகாமைத்து பீட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேப்பாபுலவு மக்களின் சொந்த நிலத்தை மீட்பதற்கான தொடர் போராட்டம் நேற்று பதினேழாவது நாளாக நடைபெற்றது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு...
வடக்குமக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரமேம்பாட்டை மீள்நல்லிணக்கத்தின் ஊடாக ஏற்படுத்தல் என்ற புதிய கருத்திட்டம் நோர்வேநாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை (15.03.2017) வவுனியாவில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்திட்டத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். தொழில் முயற்சியில் வடக்கைத் தெற்குடன் இணைக்கும் மீள்நல்லிணக்கத்தின் ஊடாக...
கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பிரிவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரின் விசேட வீதிப் பரிசோதனையின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு இ.போ.ச பேருந்தில் கடத்தப்பட்ட கேரளக் கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது....
இனியும் உழைத்து சீவிப்பதற்கான தெம்பு எமக்கில்லை. எமக்கான வாழ்வாதாரம் கேப்பாப்பிலவில் எமது காலடிக்குள் காணப்படுகிறது. எனவே நாம் நிம்மதியாக வாழ்வதற்கு எமது பூர்வீக காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமது பூர்வீகக் காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி, முல்லைத்தீவு ராணுவத் தலைமையகத்திற்கு முன்னாள் கேப்பாப்பிலவு மக்கள் கடந்த...
முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களில் சிலரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேப்பாப்புலவிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு மக்கள் 15 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இராணுவ முகாமுக்கு முன்பாக இப்போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் தங்களது பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து...
அநுராதபுரம் பொலநறுவை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 2016ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் இவ்வருடத்தில் முல்லைத்தீவு மட்டக்களப்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கஜந்த...
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக நாளைய தினம் காலை 10 மணிக்கு பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோரியும், பறிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் சமவுரிமை மக்கள் இயக்கத்தால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. யாழ்.ஊடக மையத்தில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று ஆறாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்க முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தாம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தபோதும், இதுவரை தமக்கு எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் தாம் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தமது போராட்டம் கவனிப்பாரற்று...
வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனை மாங்குளத்தில் அமையவுள்ளது. இதற்கான பணிமனைக் கட்டிடத்துக்கான அடிக்கல் மாங்குளத்தில் நாட்டப்பட்டுள்ளது. வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று முன்தினம் சனிக்கிழமை (11.03.2017) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். இரண்டு மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ள இக்கட்டிடத்தை...
தமது பூர்வீக நிலத்தை கையளிக்குமாறு கோரி கடந்த 8 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களை 24 மணிநேரமும் ராணுவம் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகத்துக்கு முன்னால் இம் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், ராணுவ முகாமுக்கு முன்னால் சீ.சீ.ரி.வி. கமராவை பொருத்தி...
முல்லைத்தீவு முறுகண்டிப் பகுதியில் நேற்று காலை 11.30 மணியளவில் புகையிரதமும் வேன் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் வேன் சாரதி அதிஸ்டவசமாக காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார். ஸ்கந்தபுரம் பகுதியில் இருந்து கிளிநொச்சியை நோக்கி வந்துகொண்டிருந்த ஹயஸ் வேன் முறுகண்டிப்பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முயன்றபொழுது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கடவையில் இருந்த சமிக்ஞை விளக்கு சரியாக வேலை...
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் நேற்று புதன் கிழமை கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். தங்களின் பூர்வீக நிலமான இரணைத்தீவில் மீள்குடியமர்த்துமாறு தெரிவித்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரணைத்தீவு எமது பூர்வீக நிலம். எமது நிலத்தில் குடியிருக்க அனுமதி வழங்க தெரிவித்து பூநகரி மகா வித்தியாலயத்திற்கு அருகிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி...
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் அரசாங்கம் பதில் சொல்ல வெண்டும் எனவும், கால தாமதமின்றி தீர்வு வேண்டும் இல்லையேல் சர்வதேச குற்றவியல் நிதீமன்றிற்கு முன் காணாமல் ஆக்கப்பட்டோர்...
கிளிநொச்சியில் 37 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் உறுதிசெய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் கர்ப்பிணி தாய்மார்கள் எனவும் 9 பேர் சிறுவர்கள் எனவும் தெரிய வருகின்றது. திருநகர், புதுமுறிப்பு, தர்மபுரம், முரசுமோட்டை, வேரவில், உதயநகர், கனகாம்பிகைக்குளம், மலையாளபுரம், இராமநாதபுரம், கிருஸ்ணபுரம், சாந்தபுரம், புளியம்பொக்கணை, திருவையாறு, செல்வநகர், வட்டக்கச்சி, முகமாலை, கல்மடுநகர்,...
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கடந்த 10.02.2017 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அன்று தொடக்கம் கடந்த 03.03.2017 வரையான 21 நாட்களில் 244 பேர் இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 25 கர்ப்பிணிகளும், 9 சிறுவர்களும் அடங்கலாக...
கிளிநொச்சி - ஆணைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் 22 வயதுடைய யுவதி தான் பிரசுவித்த குழந்தையை தனது வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்திற்கு அருகில் குழிதோண்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடை யுவதி மகப்பேற்றின் பின்னர் ஏற்பட்ட கடும்...
Loading posts...
All posts loaded
No more posts
