Ad Widget

தாண்டிக்குளம் விவசாயபண்ணையை தாரை வார்த்தது வடக்கு மாகாணசபை!!

வவுனியாவில் அமைந்துள்ள தாண்டிக்குள விவசாயப் பண்ணைக்குரிய நிலத்தில் பொருளாதார அபிவிருத்தி மையம் அமைப்பதற்காக றிசாட்பதியுதீன் அவர்களின் அமைச்சுக்கு வன்னி மாவட்ட சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தினால் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி 2016ஆம் ஆண்டு ஒலிபரப்பாகிய மின்னல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாண்டிக்குள விவசாயப் பண்ணை அமைந்துள்ள நிலம் 1989ஆம் ஆண்டு மத்திய...

யாழ்.மாவட்ட செயலக பாதுகாப்பு அதிகாரியின் அடாவடி!!

யாழ்.மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் நிர்வாகமா அல்லது மாவட்ட செயலாளரின் நிர்வாகமா நடைபெற்று வருகின்றது என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது. யாழ். மாவட்ட செயலகத்திற்கு செல்பவர்களுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர் மரியாதையற்ற முறையில் நடந்துகொள்கின்றார். யாழ். மாவட்ட செயலகத்தில் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீனின் கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலுக்கு வருகை தந்த அமைச்சர் ரிசாட்...
Ad Widget

யாழ். நகரத்தில் அல்லற்படும் பாதசாரிகள்

யாழ் போதனா வைத்தியசாலையின் முன் வீதியில் உள்ள பாதசாரிகள் நடந்து செல்லும் பகுதியில் மின்கம்பங்கள் புதிதாக நடப்பட்டு உள்ளமையால் குறித்த நடைபதையில் பாதசாரிகள் நடந்து செல்லது சிரமமாக உள்ளது. குறிப்பாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் ,முதியவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். மேலும், மின்கம்பம் நடுவதற்கு என தோண்டப்பட்டுள்ள கிடங்கு மூடப்படாமையால் ஆபத்தான நிலைமையும் ஏற்பட வாய்ப்புள்ளது....

பருத்தித்துறையில் மாசடைந்த குடிநீர் விநியோகம்!

பருத்தித்துறைப்பகுதி மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் மிகவும் மாசடைந்த நீர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நீரினை நேரடியாக பலர் பயன்படுத்துகின்ற நிலையில் அதனை பயன்படுத்தும் மக்கள் வீட்டில் வடிகட்டிய பின்னர்  வடிகட்டியினுள் எஞ்சும் நீர் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. குடிநீர் என்று குழாய்கள் மூலம் கட்டணத்திற்கு அரசினால் விநியோகிக்கப்படும்...

சமுர்த்தி முகாமையாளர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள்

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப் பட்ட சமுர்த்தி முகாமையாளர் ஒருவர் நெடுந்தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், யாழ்.மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளரால் வழங்கப்பட்டுள்ளது. ஏழாலையிலுள்ள சமுர்த்தி முகாமையாளருக்கு எதிராகப் பெண் ஊழியர்களினால், யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஆகியோரிடம் முறைப்பாடு...

வடமராட்சியில் மூடப்பட்டிருந்த மதுபானசாலை! ஆளுநரின் முயற்சியினால் மீண்டும் இயங்க அனுமதி

ஆளுநர் மற்றும் அரச அதிபரின் முயற்சியினால் வடமராட்சியில் பூட்டப்பட்ட மதுபானச்சாலையினை சட்டத்தின் பிரகாரம் தற்காலிகமாக இயங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டதையடுத்து பல்லாயிரக் கணக்கான வெடிகள் கொளுத்தி மிகப் பெரும் ஆரவாரத்துடன் மீண்டும் திறக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் பிரதான சிவன் ஆலயம் ஒன்றிற்கு மிக அருகிலும் மற்றும் வேறு சில காரணங்கள் தொடர்பிலும் முன்னாள் ஆளுநர்...

விடுவிக்கப்பட்ட பலாலி பகுதிகளில் சட்டவிரோத கல் அகழ்வு

அண்மையில் விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட பகுதிகளான பலாலி வடக்கு, பலாலி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத கல் அகழ்வு மற்றும் காட்டுமரங்கள் திருடப்படுவதாக அப்பகுதியில் குடியமர்ந்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். விடுவிக்கப்பட்ட பகுதிகள், பலாலி பொலிஸ் எல்லைக்குட்பட்டதாக காணப்படுகின்றது. பலாலி பொலிஸ் நிலையம் மக்கள் மீளக்குடியமர்ந்தும் தொடர்ந்தும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் காணப்படுவதானால், தாம் பெரிதும் சிரமங்களை எதிர்;கொண்டு...

சங்கானை வைத்தியர் தொடர்பில் மக்கள் விசனம்

வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள சங்கானை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் தனியாக கிளினிக் நடத்துவதால் பெரும்பாலான நேரங்களில் வைத்தியர் வைத்தியசாலையில் இருப்பதில்லையென பொதுமக்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர். 'போதிய வைத்தியர்கள் மற்றும் வசதிகள் இல்லாமல் இயங்கி வரும் சங்கானை வைத்தியசாலைக்கு அதனைச் சூழவுள்ள பெருமளவான மக்கள் சிகிச்சைக்காக நாளாந்தம் செல்கின்றனர். அங்கு சிகிச்சைக்கு செல்பவர்களில் சிறிதளவு தொகையினரையே...

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகங்கள் முடக்கம்

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகங்களின் இணைய வழியாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவு சான்றிதழ்கள் வழங்கும் முறைமை செயலிழந்து போயுள்ளதாக அங்கு கடமையாற்றும் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவு என்பன இணைய வழியாக செய்யப்பட்டு, உடனடியாக மக்களுக்கு பிரதிகளை வழங்கும் நடவடிக்கை...

மாணவிகளை தகாத வார்த்தையில் திட்டிய அரச பேரூந்து சாரதி

இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பேரூந்து சாரதி ஒருவர் குறித்த பேரூந்தில் பயணித்த மாணவிகளை தகாத வார்த்தையினால் திட்டியதுடன், மாணவி ஒருவரை தாக்க முற்பட்டதாக தெரியவருகின்றது. வவுனியாவில் இருந்து நேற்று புதன் கிழமை மதியம் 1.30 மணியளவில் மன்னார் நேக்கி பயணித்த குறித்த பேரூந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. குறித்த மாணவி தனது பயணத்தை...

தந்தைக்கு எச்ஐவி இருந்ததாக வதந்தி, மகனுக்கு பள்ளிக் கூட அனுமதி இல்லை

குருநாகல் மாவட்டத்தில், நோய் காரணமாக உயிரிழந்த தந்தை ஒருவருக்கு எச்ஐவி இருந்ததாக பரவிய வதந்தி காரணமாக, அவரது 6 வயது மகனுக்கு அந்தப் பிரதேசத்தில் உள்ள பல பள்ளிக்கூடங்கள் அனுமதி மறுத்துள்ளன. பிரதேசத்து கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று அந்த சிறுவனின் தாய் கூறினார். இந்த நிலையில், தேசிய மனித உரிமைகள்...

யாழ் பிரதேச செயலகத்தில் பதிவுச் சான்றிதழ்கள் எடுப்பதற்கான விரைவுச் சேவை இல்லை!

யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலகத்திலும் இணைய ரீதியில் விரைவாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணப் பிரதேச செயலகம் மாத்திரம் அதனை தபால் மூலம் அனுப்பும் பழைய நடவடிக்கையை தொடர்ந்தும் பேணி வருகின்றது. சான்றிதழ்கள் தேவைப்படுபவர்கள், பிரதேச செயலகம் சென்று தங்கள் விண்ணப்பத்தைக் கொடுத்து உடனடியாக சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் முறையானது பிரதேச...

அடிக்கல் நாட்டிய கட்டடம் எங்கே???

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கான சிகிச்சையியற் துறைக்கான கட்டடம் அமைப்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள காணியில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டும் இன்னமும் கட்டடம் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க, முன்னாள் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இணைந்து இக் கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினர். கட்டடப் பணிகள் இன்னமும்...

யுத்த காலத்தில் கைவிடப்பட்ட வாகனங்களுக்காக நட்டஈடு வழங்குமாறு கோரிக்கை

முல்லைத்தீவில் யுத்த காலத்தில் கைவிடப்பட்ட வாகனங்களுக்காக நட்டஈடு வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதி யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்களை மக்கள் கைவிட்டுச் செல்ல நேரிட்டது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து பொது மக்கள் கைவிட்டுச் சென்றிருந்த ஆயிரக்கணக்கான வாகனங்களை பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியிருந்தனர். முல்லைத்தீவின் அநேகமான இடங்களில் இந்த...

பனிக்கன்குளம் பாடசாலை வீதி எப்போது புனரமைக்கப்படும்

முல்லைத்தீவு,ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு செல்லும் வீதி கடந்த 30 வருடங்களுக்காக புனரமைக்கப்படாதுள்ளதால் அவ்வீதி வழியே பயணிக்கம் பொது மக்கள் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர். 1960ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் இப்பகுதியில் மக்கள் குடியேறிய இந்த பகுதியில் இதுவரை...

எனது மகன் விடுவிக்கப்படவேண்டும் இல்லையெனில் என்னை மாய்த்து கொள்ள வேண்டி வரும்! – அரசியல் கைதியின் தாயார்

எனது மகன் விடுவிக்கப்படவேண்டும் இல்லையெனில் என்னை மாய்த்து கொள்ள வேண்டி வரும் என சிறையில் உள்ள அரசியல் கைதியின் தாயார் ஒருவர் தெரிவித்தார். கொடிய யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்படாமல் பல துன்பங்களை அனுபவிப்பது மட்டுமன்றி அவர்களது குடும்பமும் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். சிறைக்கைதிகள்...

வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேட்டுக்கு மத்தியில் கல்வியை தொடரும் சிறார்கள்

வடமாகாண கல்வி அமைச்சரின் அலுவலகததுக்கு அருகில் உள்ள முன்பள்ளி பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிறார்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியிலும் தொற்று நோய் அபாயத்திற்கு மத்தியிலும் கல்வியை தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். யாழ். ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள நல்லூர் முத்தமிழ் முன்பள்ளி பாலர் பாடசாலைக்கு அருகில் உள்ள வீதிகளில் குப்பைகள், கழிவுகள்...

பொம்மைவெளி காக்கை வெளிப்பிரதேசத்தில் குடியிருப்புக்கள் வெள்ளத்தில்!

நாவாந்துறை பொம்மைவெளி காக்கை வெளிப்பிரதேசத்தில் சரியான வடிகாலமைப்பு வசதிகள் இன்றி குடியிருப்புக்கள் வெள்ளத்தினால் பாதிக்கபட்டுள்ளன. நகரில் இருந்து ஒரு கிலோமீற்றருக்குள் மக்கள் தண்ணீரால் அவதிப்படும் காட்சி வருத்தமளிப்பதாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகி்றது . யாழ்ப்பாணத்தில் தொடரும் கடும் மழையின் காரணமாக இப்பிரதேசத்தில் வாழும் சிறுவர்கள் குழந்தைகள் சுகாதாரபிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இது...