- Wednesday
- August 19th, 2026
எமது போராட்டங்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் ஆதரவு தரவில்லை. அதை நாம் மறந்துவிடமுடியாது. ஐநாவில் தீர்மானம் இயற்றும்போது அவர்கள் அதற்கு எதிராக இராஜபக்ச அரசுக்கு ஆதரவாக வேலை செய்தார்கள் அதை நாம் மறந்துவிடமுடியாது. அதற்காக முஸ்லிம் மக்களை உதாசீனம் செய்ய முடியாது. முஸ்லிம் மக்களுக்கு நாம் எதிரானவர்கள் அல்லர். முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் துன்பியல் சம்பவம். போராட்டத்தில் முஸ்லிம்...
யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் கடந்த 21ஆம் திகதி அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்காக தமிழ்நாடு, சங்கரன்கோவில் நிப்பொன்சான் மியகோஜி ஆசிரம பௌத்த குருமார்கள், வெள்ளிக்கிழமை (28) ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சமாதானத்தை வலியுறுத்தி யாத்திரை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர்கள், இன்று யாழ்;ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். இதன்போதே பிரார்த்தனையில் ஈடுபட்டனர்
நாவலர் வீதியில் இடம்பெற்ற திருட்டு CCTV பதிவுகள் வெளியாகியுள்ளது. சைக்கிளில் வந்தவர்களே அதை செய்திருப்பதாக கருதப்படுகின்றது.
வடக்கில் செயற்படும் “ஆவா” குழுவினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உத்தியோகப் பற்றற்ற ரீதியில் இந்த வேண்டுகோளை இராணுவம் விடுத்துள்ளது. அவசரகால நிலைமை அமுலில் இல்லாததனால் சிவில் நிலைமையில் தலையீடு செய்ய முடியாதுள்ளதாகவும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கில் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உருவாகி வருவது...
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் குடும்ப உறுப்பினர்கள் காலை 9 மணியளவில் வீட்டினை பூட்டிய பின்பு வழமை போன்று பணிக்குச் சென்றுள்ளனர். இதில் கணவர் கூட்டுறவுத் திணைக்களத்திலும் மனைவி ஆசிரியராகவும் பணிபுரிகின்றார். இவ்வாறு பணிக்குச் சென்றவர்களின் வீட்டிற்கு ஆசிரியரின் தாயார் 10 மணியளவில் சென்று திரும்பிய நிலையில் அவசர பணி நிமித்தம் ஆசிரியரும் விடுமுறை...
நல்லாட்சி அரசாங்கத்தில் 2017ஆம் ஆண்டு தீபாவளித் திருநாளுக்கு முன்னர் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற அரசாங்கத்தின் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய அவர் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான வெளிச்சம் தெரிவதாகவும் கூறினார்....
சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சுவிஸ் வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...
2019ஆம் ஆண்டளவில் சகல ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் கூறுகையில் நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் போதியளவு ஆசிரியர்களை வழங்க ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியொன்று பின்பற்ற ப்படும்.13ஆம் ஆண்டுகள் கட்டாயக் கல்வி தொடர்பிலான அரசாங்கத்தின் திட்டம் 2017ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்க...
வட மாகாண சபையின் புதிய பிரதி அவைத் தலைவராக வல்லிபுரம் கமலேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வடமாகாண பிரதி அவைத் தலைவராக கடமையாற்றிய மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதன் கடந்த 07 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து வட மாகாண சபைக்கான பிரதி அவைத் தலைவரை தெரிவு செய்து குறித்து இன்று கலந்துரையாடப்பட்டது. இதன்போது, வட மாகாண...
வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய “ஆவா“ குழுவினை கட்டுப்படுத்த தாம் புதிய குழு ஒன்றை உருவாக்கவுள்ளதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது. ஆவா குழுவின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவோ, அந்த குழுவின் உறுப்பினர்களை கைது செய்யவோ பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பொலிஸாரின்...
நேற்று மாணவர் ஒன்றியத்தினால் ஆளுனருக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிங்கள கடிதத்திற்கு பதிலாக ஆளுனர் இன்று தமிழில் கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கான நடவடிக்கையினை மொழிகள் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் எடு்த்திருந்தார். இதுதொடர்பாக அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் கூறியதாவது என்னை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் அறிவித்தபோது, அந்த...
யாழ்.ஆனைக்கோட்டை ஆலடி வைரவர் கோயிலடியில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் மீது இலக்க தகடு அற்ற ஜீப்பில் வந்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள் எரிபொருள் தாங்கி மீது வாள் வெட்டினையும் மேற்கொண்டு உள்ளனர். ஆனைக்கோட்டை சந்தி வழியாக தமது வீட்டுக்கு இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் மூன்று இளைஞர்கள் மூன்று...
யாழ். சுன்னாகம் பகுதியில் சிவில் உடையில் கடமையில் இருந்த உளவுத் துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்திய சந்தேக நபர்களை விஷேட விசாரணைக் குழுவினர் அடையாளம் கண்டுள்ளனர். ஓரிரு நாட்களுள் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேசிய உளவுத் துறை பணிப்பாளர் சிரேஷ்ட...
கிளிநொச்சி 55ஆம் கட்டைக்கு ஏ9 பாதையில் இன்று மாலை ஒரு சிலர் குடித்துவிட்டு போதையில் வீதியால் போகிற வாகனங்களை மறித்து தவறான வார்த்தைப் பிரயோகங்களால் வசைபாடிய வண்ணம் இருந்துள்ளனர். ரிப்பர் வாகனம் ஒன்று வந்தபோது அதை மறித்து அதன் கண்ணாடியை உடைத்துள்ளார்கள். கர்த்தாலை ஒட்டி உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பொலிசார் உடனே சம்பவ இடத்துக்கு...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்ல்ப்பட்ட சம்பவத்தில் உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறி்க்கையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடராசா கஜன், பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவரும் யாழ்ப்பாண சோதனைச்சாவடிக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சிங்களக்காவல்துறையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் பெருத்தத்...
மாணவர்களின் கொலை தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும் எனபல்கலைக்கழக ஊழியர் சங்கம் கோரியுள்ளது அவர்களது அறிக்கை வருமாறு கடந்த வெள்ளிக்கிழமை(20-10-2016) இரவு கொக்குவிலில் இரண்டு யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் பொலிசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் மூலம் கொல்லப்பட்டமையானது எமக்கும் யாழ் சமூகத்திற்கும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தினையும் வேதனையையும் தருகின்றது. நல்லாட்சி அரசு என்கின்ற பெயரில் ஆட்சி...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து வடக்கில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்திருக்கின்றன. இதேவேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை திங்கட்கிழமை போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் மேற்படி கர்த்தால் அழைப்பும் வெளிவந்துள்ளது. 1.இலங்கை தமிழரசுக் கட்சி 2.தமிழீழ விடுதலை இயக்கம் 3.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி...
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் என்.ஐ.பீ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வுதுறை உத்தியோகத்தர்கள் என தெரியவந்துள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சுன்னாகம் பல்பொருள் அங்காடியொன்றுக்கு முன்னால் வைத்தே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சிவில் உடையில் இருந்த தேசிய புலனாய்வு அதிகாரிகளை வெட்டியுள்ளனர். கடை ஒன்றில் கொள்ளையிட்டவர்களே...
மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் போராட்டம் நடத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இதனை சாதாரண விடயமாக பார்க்கமுடியாது பாதுகாப்பு செயலரின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம் வடக்கில் நடந்தால் நாம் போராடாமல் இருக்க மாட்டோம் என தெரிவித்தார் அதன் அழைப்பாளர் லஹிரு வீரசேகர. அவர் மேலும்...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கே.கே.எஸ் வீதி குளப்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றும் இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக் கொடூர சம்பவத்தினை நாங்கள் வன்மையாக...
Loading posts...
All posts loaded
No more posts
