Ad Widget

அடுத்த தீபாவளிக்குள் தீர்வு வரும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்- சம்பந்தன்

நல்லாட்சி அரசாங்கத்தில் 2017ஆம் ஆண்டு தீபாவளித் திருநாளுக்கு முன்னர் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

sam

அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற அரசாங்கத்தின் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய அவர் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான வெளிச்சம் தெரிவதாகவும் கூறினார்.
ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்ட இந்த தீபாவளித் திருநாள் கொண்டாட்டத்தில் சம்பந்தன் சிறப்புரையாற்றினார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்குமென அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நகர்வின் வெளிப்பாடுதான் இந்த தீபாவளித் திருநாள் பண்டிகை என்று குறிப்பிட்ட அவர் அந்த பண்டிகையை தேசிய பண்டிகையாக அரசாங்கம் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது என்றும் புகழாரம் சூட்டினார்.நல்லாட்சியில் தமிழ் மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியிருக்கிறது.

அடுத்த ஆண்டு தீபாவளி திருநாளுக்கு முன்னர் இந்த வெளிச்சம் நிரந்தரமானதாக அமையும் என சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.அங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

Related Posts