புதிய அரசியலமைப்புக்கான உபகுழுக்களின் அறிக்கை வெளியானது

அதிகாரப்பகிர்வு சம்பந்தமானது அடிப்படை உாிமைகள் சம்பந்தமானது  

பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளத்தில் அவர்களது அன்றாட தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியவில்லை- பிரதமர்

பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் இன்று  முன்வைத்துள்ளார். அத்துடன், தேர்தல் தொகுதிகளுக்குப் பொறுப்பாகவுள்ள ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பி னர்களுக்கும் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவாவது கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பிரேரணையில் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளத்தில் அவர்களது...
Ad Widget

மாகாணசபைகள் பலப்படுத்தப்பட வேண்டும்! புதிய அரசியலமைப்புக்கான சித்தார்த்தன் குழுவினர் அறிக்கை.!

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட உபகுழுக்களில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் குழுவின் தலைமையிலான குழுவின்  இடைக்கால அறிக்கையில் மாகாணசபைகள் உள்ளுராட்சிசபைகள் சம்பந்தமான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. 6 உபகுழுக்கள் அமைக்கப்பட்டு பாராளுமன்றுக்கு இன்று அறிக்கை கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அந்நிலையில் அதிகாரப்பரவலாக்கல் சம்பந்தமான குழுவின் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணசபை மற்றும்  உள்ளுராட்சிக்கட்டமைப்புக்களை பலப்படுத்தி அதிகாரப்பரவலாக்கத்தை செய்ய வேண்டும்...

ஆவா என்ற பெயர் எப்படி வந்தது? பாகம் 1

உண்மையில் இந்த ஆவா குழு என்பது யார்? இதில் எத்தனை பேர் உள்ளனர்? இவர்கள் எங்கு ஒன்று கூடுவார்கள்? இவர்களின் தலைவன் யார்? இவர்களின் பின்புலம் என்ன? இவ்வாறான பல கேள்விகள் எமது மனதில் உள்ளன. இவை அனைத்திற்கும் இந்த ஆவா குழு என்று பெயர் யாரால் சூட்டப்பட்டது? எதனால் சூட்டப்பட்டது என்று பார்த்தாலே இவை...

சர்வதேச நீதிபதிகளற்ற விசாரணை தமிழர்களுக்கு நீதியை தராது- விக்கினேஸ்வரன்

இலங்கைமீதான போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள் வாங்கப்படாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி என்பது கிடைக்கப் போவதில்லை என பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொது நலவாய விவகாரங்களுக்கான அமைச்சர் பரோனஸ்அனெலியிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக கூறியுள்ளார். நேற்று முன்தினம் இரவு இலங்கையை வந்தடைந்த பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான அமைச்சரும்,...

எழுகதமிழ் நிகழ்வில் முன்னின்று செயற்பட்டவர் கட்சி அலுவலகத்தில் வைத்து கைது!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்   தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய  இளைஞரை  கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பொலிஸார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.  கைது செய்தமைக்கான ஆதாரங்களைக்கூட அவர்கள் வழங்கவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இது குறித்து கட்சி உறுப்பினர்கள் எமது தளத்துக்கு தகவல் தருகையில் , கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன்  கட்சியினருடன்...

ஹோலிப்பண்டிகை நடாத்த யாழ் மாநகரசபை அனுமதி மறுப்பு! எதிர்ப்புக்களை அடுத்து ஆணையாளர் முடிவு!

எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி காலை 9 மணி முதல் 5 மணி வரை யாழ் மாநாகரசபை திடலில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படவுள்ளதாக Rathee Event Management நிறுவனம் விளம்பரப்படுத்தியிருந்தது. தனது விளம்பரத்தில் முதன்முறையாக ஹோலிப்பண்டிகை அறிமுகம் என தெரிவித்திருந்தது. இது முன்னர் 20 ம் திகதி என்றும் பின்னர் 27ம் திகதி என்றும் மாற்றப்பட்டு இறுதியாக...

கேலிக்கூத்தாகிய சூரன் போர்கள்!

இந்து ஆலயங்களில் குறிப்பாக முருகன் ஆலயங்களில்  கந்தசஷ்டி விரத முடிவு நாளில் சிறப்பாக சூரன் போர் நிகழ்வு நடைபெறுவது வழமை. இலங்கையின் சில ஆலயங்களில் நவீன மோட்டார் வாகனங்களை பயன்படுத்தி குறித்த நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளது. இது சென்ற வருடமும் இலங்கையின் தென்பகுதியில் இடம் பெற்றிருந்தது தற்போது வடபகுதிக்கும் பரவியுள்ளது. தேவர்களை துன்புறுத்திய சூரனையும் அவன் சகோதரனையும்...

கூட்டமைப்பினை உடைக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை! விக்கினேஸ்வரன்

இன்று(5)   யாழ் இலங்கைவேந்தன் கலைக்கல்லுாரி மண்டபத்தில் நடைபெற்ற  ஊடகவியலாளர் வித்தியாதரனால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகை ஆரம்ப விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முதலமைச்சர் இவ்வாறு   தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் கூட்டமைப்பினை உடைப்பது எனது நோக்கமல்ல.என்னால் தமிழ்கூட்டமைப்பின் ஒற்றுமையினை சீர்குலைப்பதாக சிலர் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.இது சில தனிப்பட்டவர்களின் கருத்தாக இருக்கலாம்.பல்லாயிரம்...

நவம்பர் 27 இல் யாழ் மாநாகர சபை திடலில் ஹோலிப்பண்டிகை! தனியார் நிறுவனம் நடாத்துகின்றது

எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி காலை 9 மணி முதல் 5 மணி வரை யாழ் மாநாகரசபை திடலில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படவுள்ளதாக Rathee Event Management நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது. தனது விளம்பரத்தில் முதன்முறையாக ஹோலிப்பண்டிகை அறிமுகம் என தெரிவித்துள்ளது. இது முன்னர் 20 ம் திகதி என்றும் பின்னர் 27ம் திகதி என்றும் மாற்றப்பட்டுள்ளது. இது...

முதலமைச்சராக விக்கியை தெரிவு செய்ய அன்று நாங்கள் எடுத்த முடிவு இன்றும் சரியாகவே நான் கருதுகின்றேன் -சம்பந்தன்

முதலமைச்சராக விக்கியை தெரிவு செய்ய அன்று நாங்கள் எடுத்த முடிவு இன்றும் சரியாகவே நான் கருதுகின்றேன் என இன்று(5)  ஊடகவியலாளர் வித்தியாதரனால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகை ஆரம்பவிழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் முதலமைச்சராக விக்கினேஸ்வரனை தெரிவு செய்ய கூட்டமைப்பு ஏகமனதாகவே முடிவு செய்தது .   மாவை...

படைத்துறை தொழிலுக்கு தொடர்பில்லாத பல தொழில்களை இராணுவம் செய்வது தொடர்பில் இறுதி முடிவு தேவை -அமைச்சர் மனோ

படைத்துறை தொழிலுக்கு தொடர்பில்லாத பல தொழில்களை இராணுவம் செய்வது தொடர்பில்  இறுதி முடிவு  தேவை  என அமைச்சர் மனோகணேசன் தனது முகப்புத்தகத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது. அமைச்சர் ராஜித சேனாரத்ன பற்றியும், முதல்வர் விக்னேஸ்வரன் பற்றியும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சொல்வது பிழை. வடக்கில் ஆவா குழுவை இப்போது இராணுவம் நடத்துவதாக...

கேள்விக்குள்ளாகும் முஸ்லிம் தனியார் சட்ட மாற்றம்!

இலங்கையில் முஸ்லிம் அரங்கில் இன்று   பேசு பொருளாக முஸ்லிம் தனியார் சட்டம் மாறியுள்ளது. இது தொடர்பாக ஆராய அமைச்சரவையின் உப குழு நியமனமும், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜீன் லம்பெர்ட் தலைமையிலான ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் அறிக்கையின் வெளிப்பாடும் இதன் மீதான விவாதத்தை அதிகரித்துள்ளது.முஸ்லிம் சட்டத்தின் கீழ் திருமணம் முடிப்பதற்கான குறைந்த...

மாகாண கல்வியமைச்சு ஏற்பாடு செய்யும் நிகழ்வு தொடர்பில் எதிர்ப்பு

வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் அவர்களால் 2.11.2016 அன்று அவரது முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட அழைப்பிதழ்  சம்பந்தமாக சமூகவலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .புத்தளம் பாரளுமன்ற உறுப்பினருக்கு வடக்கு மாகாணசபையுடன் இணைந்து முஸ்லிம் சமூகம் கௌரவிப்பு விழா நவம்பர் 6ம் திகதி எடுப்பதாக இந்த அழைப்பிதழ் கூறுகின்றது. அத்துடன் ஏற்பாட்டாளர்களாக கல்வி அமைச்சின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது அத்துடன் அரச...

கிலாரியின் வெற்றிக்காய் நல்லூரில் நாளை 1008 தேங்காய் உடைப்பேன்- சிவாஜி

நவம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கிலாரி கிளின்ரன் வெற்றி பெற வேண்டி சமயப்பிரார்த்தனைகளை மேற்கொள்ளப்போவதாக வட மாகாணசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நாளை (2)  நல்லூர் ஆலய முன்றலில் 1008 தேங்காய்கள் உடைத்தும் பெரியன்னை தேவாலயத்தினில் மெழுகுதிரி ஏற்றியும் பிரார்த்தனை செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். யாழ்.ஊடக அமையத்தில்...

யாழ் பல்கலை மாணவர்களின் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற ஜனாதிபதி இணக்கம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் தொடர்ச்சியாக வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் – மாணவர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று...

அவரசமாக எதற்கும் தீர்வு கண்டுவிடமுடியாது.பொறுமை காக்கவேண்டும்- யாழில் மைத்திரி

இன்று கீரிமலையில் மைத்திரி ”நல்லிணக்கபுரம்” வீடுகள் கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது சனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார் மாணவர்கள் இழப்பு ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியை ஏற்றுக்கொள்கின்றேன். தென்னிலங்கையில் இவ்வாறு மாணவர் கொலை செய்யப்பட்டால் இதை விட மோசமாக வெகுண்டெழுந்திருப்பார்கள். அந்தவகையில் பக்குவமாக நடந்து கொண்டதற்காக வடக்கு மக்களுக்கு நன்றி கூறுகின்றேன். பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடாத்தப்பட்டு நீதிவழங்கப்படும். மாவை சொன்னதுபோல...

பல்கலைக்கழக மாணவர்களின் நிர்வாக முடக்கப்போராட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக முடக்கப்போராட்டம் மத்திய அமைச்சர் சுவாமிநாதன் உடனான பேச்சுவார்த்தைகளின் பின் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அடுத்து  மதியம் 12.30 மணியளவில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று காலை விஜயம் செய்த மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையிலான குழுவினருடன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தலைவர்களுடன் நீண்ட பேச்சுவார்தைகளில் ஈடுபட்டனர்....

யாழ் பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடுகளும் மாணவர்களால் முடக்கப்பட்டுள்ளது

யாழ் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் முன்னரே முடக்கப்பட்ட நிலையில் இன்று நிர்வாகச் செயற்பாடுகள் மாணவர்களால் முடக்கப்பட்டுள்ளது. மாணவர் கொலை தொடர்பில்  தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை நிர்வாகச்செயற்பாடுகள் மடக்கப்படும் என மாணவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பே!- சுமந்திரன்

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பில் இன்று கொழும்பில் முஸ்லீம் சமூகத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட  நினைவுநாள் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சம்பந்தன் மற்றும் சுமந்திரன் பங்கேற்றிருந்தனர். நிகழ்வில் கலந்துகொண்ட சுமந்திரன் அவர்கள் தனது உரையில் வடமாகாண முஸ்லீம்கள் மீள்குடியேற்றத்தில் வடமாகாண முதல்வர் தடை போட்டுவருவதாக குற்றம் சாட்டியுள்ளதோடு கூட்டமைப்பால் மேலதிக  ஆசனம் ஊடாக  வடமாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின்...
Loading posts...

All posts loaded

No more posts