Ad Widget

கேலிக்கூத்தாகிய சூரன் போர்கள்!

இந்து ஆலயங்களில் குறிப்பாக முருகன் ஆலயங்களில்  கந்தசஷ்டி விரத முடிவு நாளில் சிறப்பாக சூரன் போர் நிகழ்வு நடைபெறுவது வழமை. இலங்கையின் சில ஆலயங்களில் நவீன மோட்டார் வாகனங்களை பயன்படுத்தி குறித்த நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளது. இது சென்ற வருடமும் இலங்கையின் தென்பகுதியில் இடம் பெற்றிருந்தது தற்போது வடபகுதிக்கும் பரவியுள்ளது.

mathalai1

தேவர்களை துன்புறுத்திய சூரனையும் அவன் சகோதரனையும் வதம் செய்யும் நிகழ்வே சூரன் வதை நிகழ்வாகும். இதன்சூலம் அநியாயம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவர் என்பதும் அவர்கள் தமது பிழைகளை உணர வைப்பதும் ஆன செய்திகள் சொல்லப்படுகின்றன.

அதற்கு பாரம்பரிய முறையில் கொம்புமரங்களில் முருகனையும்  சூரனையும் காவி கொண்டோடித்திரிந்து மோதல் செய்யவைத்து இறுதியில் முருகன் சூரனை வதம்செய்ய அவன் சேவலும் மயிலுமாக மாறி முருகனிடம் சரணகதியாகும் நிகழ்வினை நவீனத்தை புகுத்தி  கொச்சைப்படுத்தும் வகையில் சில ஆலயங்களில் சூரன் போர் நிகழ்வு கொண்டாடப்பட்டது இந்துக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாத்தளை ஆலயத்தில்



கொக்குவில் புதுக்கோவில் ஆலயத்தில்


 

 

Related Posts