Ad Widget

நாளை பல்கலைக்கழகங்களில் போராட்டம்- அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்  போராட்டம் நடத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இதனை சாதாரண விடயமாக பார்க்கமுடியாது பாதுகாப்பு செயலரின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம் வடக்கில் நடந்தால் நாம் போராடாமல் இருக்க மாட்டோம் என தெரிவித்தார் அதன் அழைப்பாளர் லஹிரு வீரசேகர.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

யாழ்ப்­பாணம் நக­ருக்கு அண்­மித்த குளப்­பிட்டி சந்­திக்கு அரு­கா­மையில் பொலி­ஸாரின் துப்­பாக்கி சூட்­டுக்கு இலக்­காகி மாண­வர்கள் இருவர் மர­ண­ம­டைந்­துள்­ளனர். ஆரம்­பத்தில் இந்த சம்­பவம் விபத்து என அறி­விக்­கப்­பட்ட போதும் பின்னர் மரண பரி­சோ­த­னை­களின் பிர­காரம் துப்­பாக்கி பிர­யோகம் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

அதன் அடிப்­ப­டையில் பொலிஸார் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தோடு அவர்கள் பணி­நீக்­கமும் செய்­யப்­ப­டுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.  எவ்­வா­றா­யினும் மாண­வர்கள் இருவர் பொலி­ஸாரின் துப்­பாக்கி பிர­யோ­கத்தில் உயி­ரி­ழந்­துள்ள இச்­சம்­ப­வத்தை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம்.

2012ஆம் ஆண்டு கண்­டி­யி­லி­ருந்து கொழும்பு நோக்கி நடத்­தப்­பட்ட பேர­ணியின் போது களனி பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் இதே­போன்று தான் விபத்தில் உயி­ரி­ழந்­த­தாக கூறப்­பட்ட போதும் அது விபத்து அல்ல திட்­ட­மிட்டு செய்­யப்­பட்ட கொலை என்று தற்­போது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

இதை­யொத்த சம்­ப­வ­மா­கவே யாழ்ப்­பா­ணத்தில் தற்­போது இடம்­பெற்ற துப்­பாக்கி பிர­யோக சம்­ப­வத்­தையும் பார்க்­க­வேண்­டி­யுள்­ளது. பொலிஸார் இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­டுள்ள நிலையில் பொலிஸ் கட்­ட­மைப்பை நிரு­வ­கிக்கும் அர­சாங்­கமே அதற்­கான முழுப்­பொ­றுப்­பையும் ஏற்று பதில் கூற­வேண்­டி­யுள்­ளது.

அத­ன­டிப்­ப­டையில் உயி­ரி­ழந்த குறித்த இரு மாண­வர்­க­ளுக்­காக நீதி கோரி நாம் நாட­ள­விய ரீதியில் போரா­ட­வுள்ளோம். குறிப்­பாக நாட­ளா­விய ரீதியில் உள்ள அனைத்து பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுடன் இணைந்து அந்த பல்­க­லைக்­க­ழ­கங்­களில் போராட்­டங்­களை நடத்­த­வுள்ளோம்.

இந்தபோராட்டத்தில் இன,மத, மொழி பேதமின்றி எமது சகோதரர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவ சகோதரர்களும் தயாராகவுள்ள நிலையிலேயே நாளை திங்கட்கிழமை முதல் போராட்டத்திற்கான அழைப்பு எம்மால் விடுக்கப்படுகின்றது என்றார்.

Related Posts