- Sunday
- November 8th, 2026
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பில் தனக்கும் பிரச்சினை உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டமா அதிபருக்கு தனது அதிருப்தியை தெரிவித்ததை அடுத்து மேன்முறையீட்டிற்கான நடவடிக்கையை அவர் ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம்...
பாடசாலை மாணவ, மாணவியரின் போஷாக்கினை மேம்படுத்துவதற்காக 5,185 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கொண்டு பகல் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிகவும் பின்தங்கியுள்ள பாடசாலைகளுக்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 7911 பாடசாலைகளைச் சேர்ந்த 12 இலட்சம் மாணவர்களுக்கு இவ்வாறு பகல் உணவு வழங்கப்படவுள்ளதாக அவர்...
கறுப்பு பணத்தை ஒழிப்பது குறித்து, இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், விஜயின் பைரவா படத்தின் கதையும், கறுப்பு பணம் ஒழிப்பதை மையமாக வைத்து தான், தயாராகி உள்ளதோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டிரெய்லரில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பது...
பல அதிரடி ஆக்சன் மற்றும் செண்டிமென்ட் படங்களை இயக்கியவர் பி.வாசு. அதோடு சில படங்களை காமெடி கலந்த கதையிலும் இயக்கியிருக்கிறார். அந்த வகையில், ரஜினியை வைத்து அவர் இயக்கிய மன்னன் படம் அம்மா செண்டிமென்ட் மற்றும் கணவன்-மனைவிக்கிடையே நடக்கும் ஈகோ பிரச்சினையை மையமாக வைத்து இயக்கிய அவர், பின்னர் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தை ஹாரர்...
வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் அஜித். ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் இப்படம் அஜித்தின் ஆக்சன் பட வரிசையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், வேதாளம் படத்தில் நடித்து வந்தபோது காலில் அடி பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித், இந்த படத்திலும் சண்டை...
யுத்தத்தின்போது கட்டளைகளை வழங்கியவர்களே குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டுமென தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரி நிற்கின்றோமே தவிர பழிவாங்க முயற்சிக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்களின் கருத்தறியும் செயலணியின் இறுதி அறிக்கை நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் வெளியிடப்பட்டதையடுத்து அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு...
வடக்கிற்கு விசேட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் ஒரு அங்கமாக பலாலி, பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ‘பலமிக்கதோர் இலங்கை’ எனும் எதிர்கால பொருளாதார திட்டத்தை நேற்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் வெளியிட்டுவைத்து உரையாற்றிய பிரதமர், குறித்த பொருளாதார திட்டத்தில் பலாலி விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தியில்...
அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களில் பணியாற்றுவதற்காக 1 மில்லியன் சீனர்கள் நுழைவு விசா பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய அமைப்புத் தெரிவித்த கருத்தை சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ண நிராகரித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய கொழும்பில் நடாத்தியிருந்த செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க...
இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவொன்று நேற்று யாழ்பாணத்திற்கு பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் இந்தியாவின் அனுசரணையுடன் புனரமைக்கப்பட்டு வரும் பலாலி விமானத்தளம், துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் யாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கலாச்சார மண்டபத்தினையும் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,...
தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் பேட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது. 07 விக்கட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது அந்த அணி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது. அதன்படி இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டுமாயின் 507 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது. தனது இரண்டாவது...
யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 1 லட்சம் பேர் இந்தியாவில் இருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் லண்டனின் இலங்கைக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுக்களின் தலைவர் லோர்ட் நெசபியிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த லண்டனின் இலங்கைக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுத் தலைவர் லோர்ட் நெசபி நேற்று (04) யாழ்ப்பாண மாவட்ட...
இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி பல்வேறு சாதனைகளை செய்தார். இதனையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி விலகினார். அவரை தொடர்ந்து கோலி கேப்டனாக பொறுப்பேற்றார். இந்நிலையில், இந்திய அணியின் ஒருநாள் மற்றும் இருபது ஒருவர்...
வடக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்ளீர்ப்பதற்காக இடம்பெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியெய்தியவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இந்த மாதம் 16,17,18ஆம் திகதிகளில் இடம்பெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 2016ஆம் ஆண்டின் 1000 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி கிடைத்தது....
பாடசாலை நேரத்திற்கு மேலதிகமாக ஆசிரியர்களை பயமுறுத்தி அதிபர்கள் வேலை வாங்க முடியாதெனவும் அவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக தொழிற்சங்க செயற்பாட்டை மேற்கொள்வோமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில், நாடு பூராகவும் பாடசாலைக் காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 1.30மணிவரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வடமாகாணத்திலுள்ள குறிப்பிட்ட...
பல்கலைக்கழகத்திற்கு 2016-2017ம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார். புதிய கற்கை நெறிகள் பல ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 50 இனால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஏனைய கற்கைநெறிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படையாக...
நெல்லை மாவட்டம், ஆலங்குளம் ஜோதிநகரை சேர்ந்தவர் மோகன்ராஜ், 55. இவர் ஆலங்குளம் பேரூராட்சி 12வது வார்டில் தொடர்ந்து இருமுறை சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று கவுன்சிலராக செயல்பட்டுள்ளார். மேலும் இயக்குநர் ஹரி இயக்கிய சாமி, ஐயா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக மோகன்ராஜ் நடித்துள்ளார். வடிவேலுவுடன் 'கிணற்றை காணோம்' காமெடி காட்சியில் நடித்து புகழ் பெற்றவர்...
யாழில் பல பெண்களிடம் தகாத முறையில் நடப்பதற்கு முயற்சித்த பொலிஸ் புலனாய்வாளர் ஒருவருக்கு எதிராக யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். நகர் முனியப்பர் வீதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் பணியாற்றும் இளைஞன் ஒருவரை நேற்று கைதுசெய்து அழைத்துச் சென்ற 45 வயது மதிக்கத்தக்க குறித்த பொலிஸ் புலனாய்வாளர், அவரை யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்...
விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கில் வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவும் வலுவான நிலையில் காணப்பட்டதால் சிறந்த சுகாதார சேவையை வழங்கக்கூடியதாக இருந்ததெனவும் குறிப்பிட்டுள்ள வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், தற்போது அவ்வாறான ஒரு நிலை இல்லையெனக் குறிப்பிட்டுளார். முல்லைத்தீவு தேவிபுரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே...
மூன்று தசாப்தகால யுத்தத்தின் காரணமாக அழிவடைந்துள்ள வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, முப்படையினரின் பங்களிப்புடன் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்துள்ளார். பௌத்த விகாரைகள் மட்டுமன்றி, தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களைப் பாதுகாப்பதற்கு சிவில் பாதுகாப்பு படையினரின் பங்களிப்புடன் ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டத்தை இவ்வருடம் முதல் ஆரம்பிப்பதற்கு...
நாடளாவிய ரீதியில் இன்று முதல், குளிர் வானிலை அதிகரிக்கும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. காலைவேளையில் அல்லது இரவு வேளைகளிலேயே குளிரான நிலைமை காணப்படும் என்றும், அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வு கூறப்பட்டது போல, நிகழுமாயின், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலும் மழையை எதிர்ப்பார்க்கலாம்” என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. “மத்திய, சப்ரகமுவ...
Loading posts...
All posts loaded
No more posts
