பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான துண்டுப்பிரசுரம்

தேசத்திற்கான பெண்களின் உரிமைக்குரல் எனும் தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், கையெழுத்து வேட்டையும் யாழில் இடம்பெற்றது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும், ஜேர்மன் தூதரகமும், இணைந்து இன்று வியாழக்கிழமை யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இந்த துண்டுப்பிரசுர விநியோகத்தினை மேற்கொண்டிருந்தனர். கடந்த காலங்களில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்பட்டமையினால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிக்க...

புதிய நிலையான அபிவிருத்திச் சட்டமூலம் அரசியல் ரீதியாகத் தமிழர்களைப் பாதிக்கும்

இலங்கை அரசாங்கம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு நிலையான அபிவிருத்திச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற முயற்சிக்கின்றது. இதற்கு, முதற்கட்டமாக நிலையான அபிவிருத்திச் சட்டமூலமொன்றைத் தயாரித்து மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அனுப்பி வைத்திருக்கிறது. இது மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிப்பதாகவும், அரசியல் ரீதியாகத் தமிழ்மக்களைப் பாதிப்பதாகவும் உள்ளது. இதனாலேயே, இந்தப் புதிய அபிவிருத்திச் சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரித்துள்ளது என்று...
Ad Widget

”எனது நண்பனை இரும்புக் கம்பிகள் மற்றும் கொட்டன்கள் கொண்டு தாக்கிக் கொண்டிருந்தனர்..”

“மைதானத்தில் ஆடிக்கொண்டு இருந்த சிலர், எம்மைத் தாக்குவதற்காக ஓடிவந்தனர். அதனைக் கண்ட நான் ஓடினேன். ஓடிக்கொண்டே திரும்பிப் பார்க்கும் போது, எனது நண்பனான ஜெயரட்ணம் தனுஷன் அமலனை (உயிரிழந்தவர்) சூழ்ந்து நின்றிருந்தவர்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் கொட்டன்கள் கொண்டு தாக்கிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நான், திரும்பி ஓடி வந்த போது, நண்பன் நினைவற்றுக் கிடந்தான்”...

போத்தல்களால் தாக்கி பணம் பறிப்பு

சித்தன்கேணி பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் சென்ற குழுவினர் கடை உரிமையாளரை தாக்கி அச்சுறுத்தியதுடன் ஒரு தொகையான பணத்தையும் அபகரித்து சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், சித்தன்கேணி டச்சு வீதியில் அமைந்துள்ள பலசரக்கு கடையொன்றினுள் நேற்று இரவு 7.45 மணியளவில் 4 பேரடங்கிய குழுவினர் வாள், பொல்லு, கத்திகளுடன் நுழைந்து உரிமையாளரை...

அஜித்தின் 57வது பட தலைப்பு விவேகம்

நடிகர் அஜித்தின் 57 வது படத்திற்கு விவேகம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் தன்னுடைய 57வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. அஜித் நடித்து வெளிவந்த...

கவுதமின் கனவு படம்!

விக்ரம் நடிக்கும், துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், சமீபத்தில் துவங்கி, வேகமாக நடந்து வருகிறது. கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் விக்ரமும், கவுதம் மேனனும், இதில் கூட்டணி அமைத்துள்ளதால், படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதற்கேற்ற வகையில், படத்தின், 'பர்ஸ்ட் லுக், டிரெயிலர்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. சூர்யாவுக்காக, இந்த படத்தை பார்த்து பார்த்து...

ஹன்சிகாவிடம் நான் கண்ட மாற்றம்!! பிரபுதேவா

தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஹன்சிகா. அதையடுத்து பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம்ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்தார். தொடர்ந்து ஜெயம்ரவியுடன் ரோமியோ ஜூலியட் படத்தில் நடித்த ஹன்சிகா, இன்று திரைக்கு வரும் போகன் படத்திலும் அவருடன் நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று...

இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த கிளிநொச்சி மாவட்ட தமிழ் மாணவிகள்

பங்களாதேஷில் இம்மாதம் 17 தொடக்கம் 23 வரை நடைபெறவுள்ள உலக்கக்கிண்ணப் போட்டியில் றோல் போல் விளையாட்டில் இலங்கையின் றோல் போல் தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டு அவா்கள் போட்டியில் பங்குபற்றவுள்ளனா். கிளிநொச்சி இந்துக்கல்லூரி உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன் ,சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே குறித்த போட்டியில் பங்குபற்றுகின்றனர். அத்துடன் மிக...

பயணிகள் போக்குவரத்து பஸ் சாரதிகள் விசேட அனுமதிப் பத்திரம் ஜூலை 0 1 முதல் கட்டாயம்

பயணிகள் போக்குவரத்து பஸ்களில் சாரதிகளாக உள்ளவர்கள் பயணிகள் தொடர்பாக போக்குவரத்து திணைக்களத்தினால் பயிற்சியின் பின் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை வைத்திருப்பது கட்டாயம் எனவும், இது தொடர்பான சட்டம் ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இவ்வருடத்தில் புதிதாக இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில்...

ட்ரம்பினால் அமெரிக்க விமான நிலையத்தில் இலங்கையர்களும் தடுத்து வைப்பு

அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தடை உத்தரவால் இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த 71 பேரையும் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தடுத்து வைத்திருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த...

வான்படைத் தளத்தின் நுழைவாயிலை மறித்து முல்லை மக்கள் இரவு பகலாக போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டம் – கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள், தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இரவு பகலாக இன்று (வியாழக்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. கேப்பாப்பிலவு விமானப்படை தளத்தின் 2ஆவது நுழைவாயிலை மறித்து இம் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். யுத்த...

வடக்கில் நடைபெறும் சம்பவங்களை பொய்யாக பெரிதுபடுத்த வேண்டாம்: பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்

வடக்கை போன்று தெற்கிலும் அன்றாடம் வாளால் வெட்டிக் கொல்லப்படும் சம்பவங்கள் பதிவாகின்றன எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வடக்கில் நடைபெறும் விடயங்களை மாத்திரம் பொய்யாக ஊதி பெரிதாக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து, அண்மையில் யாழ்.அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த...

வட்டு யாழ்ப்பாண கல்லூரி மைதான கொலைச்சம்பவம் யாழ்.மேல் நீதிமன்றில் தொடர் விசாரணை

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்றத்தில் தொடர் விசாரணையாக நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையில் நடை பெற்ற கிரிக்கட் போட்டியின் போது ஏற்பட்ட குழு மோதலில் ஜெயரட்ணம் தனுசன் என்பவர்...

வாள் வீசியவர்களுக்கு விளக்கமறியல்

நல்லூர், கந்தர்மடத்தில் உள்ள பலசரக்கு கடை மீது, பெற்றோல் குண்டு வீசி, கடையில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஐவரும், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதுடன், யாழ். மாவட்ட நீதிமன்றில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அதன்போது, சந்தேகநபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் டி.சிவலிங்கம்,...

ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்!: இரா.சம்பந்தன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். முக்கியமான இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை முன்னெடுக்காமல் தீர்வுத்திட்ட நடவடிக்கைகளுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரா.சம்பந்தன்...

ஜனாதிபதி மட்டக்களப்பு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார்.ஜனாதிபதி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை திறந்துவைத்தார். இக்கட்டத்தொகுதி இரத்தவங்கி நவீன சத்திரசிகிச்சை கூடம் சட்ட வைத்தியபிரிவு கதிர்வீச்சு பிரிவு நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைபெறுவதற்கான வசதி மற்றும் நிர்வாகப்பிரிவு ஆகியன உள்ளடங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நிகழ்வு கிழக்கு...

இந்தியா அபார வெற்றி! முதல் முறையாக டோனி அரைசதம்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மணிஷ் பாண்டே நீக்கப்பட்டு ரிஷாபா பாந்த் சேர்க்கப்பட்டார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு...

121 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 121 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 06 விக்கட்டுக்க​ளை இழந்து 307 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 117 ஓட்டங்களையும் பெப்டு பிளவ்சிஸ் 105 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும்...

யாழில் வீதியில் நின்றிருந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டு முயற்சி

யாழ்.கஸ்தூரியார் வீதியில் வீடொன்றின் முன் நின்றிருந்த இளைஞர்கள் மீது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று வாள்வெட்டு நடத்த முயன்ற நிலையில் குறித்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து தப்பியுள்ளனர். நேற்றய தினம் மாலை 6.40 மணியளவில் கஸ்தூரியார் வீதியில் உள்ள வீடொன்றுக்கு முன் 4...

கருணா குறித்த விசாரணைகள் நிறைவு

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும்...
Loading posts...

All posts loaded

No more posts