வவுனியாவில் கடும் காற்றுடன் மழை

வவுனியா நகரில் நேற்று (புதன்கிழமை) மதியம் முதல் 3 மணிநேரம் மழையுடன் காற்று வீசியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல்வேறு கட்டங்களும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன. அத்துடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நின்ற மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் 5 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்ததுடன், பொலிஸ் நிலையத்தில் இருந்த...

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக விசேட குற்றப்புலனாய்வு துறையினரால் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை நேற்று(புதன்கிழமை) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட வேளை நீதவான் எம்.கணேசராஜா எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிட்டார். சந்தேகநபரை முன்னிலைப்படுத்தி விசேட குற்றப்புலனாய்வு துறை...
Ad Widget

அரசியல் கைதிகளின் வழக்குகளை கொழும்பிற்கு மாற்ற விரைவில் நடவடிக்கை: நீதியமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை கொழும்பிற்கு மாற்றுவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை திருத்த சட்டமூலத்தின் மீதான விவாதத்தின்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...

யாழ். நாவற்குழியில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட தயாராகும் 300 பிக்குகள்

தென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு சென்று சமய அனுஷ்டானங்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழும் பிரதேசத்தில் கடந்த வாரம் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த விகாரை...

முல்லைத்தீவில் மூன்று கோடியே 70 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு வேலைத்திட்டங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு கமநலசேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மூன்று கோடி 70 இலட்சம் ரூபா செலவில் பத்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. மத்திய கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சிறிய குளங்கள் புனரமைப்பு, நீர் விநியோக வாய்க்கால்கள் புனரமைப்பு போன்ற பத்து வேலைத்திட்டங்கள்...

வித்தியாவின் கொலையுடன் கடற்படையினருக்கு தொடர்புண்டு: சிறிதரன்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கடற்படையுடனும் இராணுவத்துடனும் தொடர்புடையவர்கள் என சுட்டிக்காட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், வித்தியாவின் கொலையில் கடற்படையினருக்கு பெரும் பங்கு உள்ளதென குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே குறித்த வழக்கை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வில், சிறிதரன்...

வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைப்பு

வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரி வாடியடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இதனை வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புதன்கிழமை (24.05.2017) சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின்...

தனது மகள் நின்மதியாக வாழ வேண்டும் : யாழ்.மேல் நீதிமன்றில் தாய் மன்றாட்டம்

தன் மகள் சந்தோசமா வாழுகிறாள் அவளின் வாழ்க்கை சீரழிய கூடாது. எனக்கு எந்த விதமான நஷ்ட ஈடுகளும் தேவையில்லை. என் மகள் சந்தோசமா வாழ வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணொருவரின் தாயார் யாழ்.மேல் நீதிமன்றில் மன்றாட்டமாக கோரினார். கடந்த 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலான...

சம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டமையை கண்டித்து வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வில் அவசர பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவுள்ளது. வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு நாளை 25 ஆம் திகதி கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம்...

வடக்கில் ஏன் புலிக்கொடியை ஏற்றமுடியாது? : சிறிதரன்

தேசிய கொடியில் உள்ள சிறுபான்மை இனங்களை குறிக்கும் நிறங்களை நீக்கிவிட்டு சிங்கக் கொடியை வடக்கில் ஏற்ற முடியும் என்றால், தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரை நீக்கிவிட்டு ஏன் புலிக் கொடியை தமிழ் மக்கள் வடக்கில் ஏற்ற முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை)...

நாடளாவிய ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தால் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படவிருந்த ஹர்த்தால், அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிக்கு அமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அறிவித்துள்ளது. முன்னதாக, அந்த அமைப்பு விடுத்திருந்த பகிரங்க அழைப்பில், நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இனவாதத் தாக்குதல்களைக் கண்டித்து நாளையதினம் நாடளாவிய ரீதியில்...

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் நாடுகடத்தல்!

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்து வந்த 120 இலங்கையர்கள் அங்கிருந்து இன்று (புதன்கிழமை) நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான மூலம் இரண்டு கட்டமாக பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாகவும், முதற்கட்டமாக இன்று காலை 9.30 மணிக்கு 50 பெண்கள் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்கா பொலிசார் தெரிவித்தனர். இவர்கள் இலங்கையில் உள்ள...

கடந்த ஆட்சிக்கால அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது: சம்பந்தன்

கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சகல இனங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். அண்மைக்காலமாக தொடரும் சிறுபான்மையினங்களின் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் மதவழிபாட்டுத் தலங்கள்...

சிறுபான்மை மக்களை மிரட்டும் சிங்கள சுவரொட்டி!

பதுளை வாழ் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில், சிங்கள மொழியிலான சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘சிங்களயாகே இவசீம பரீக்ஷா நொகரனு’ (சிங்களவர்களின் பொறுமையைச் சோதிக்காதே) என்று அச்சிடப்பட்டு, பதுளை முதியங்கனை ரஜமஹா விஹாரையின் பின்னால் செல்லும் பிரதான வீதியின் மதிலில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் அண்மைய நாட்களாக சிறுபான்மை சமூகங்களை...

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் மருத்துவ வசதியின்றி உயிரிழப்பு!!

அவுஸ்திரேலியாவில், இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் உரிய முறையில் கவனிக்கப்படாத காரணத்தினால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகள் புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடுமையான ஆஸ்துமா நோயாளியான குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் தீவுகளுக்குள் பிரவேசித்து சில மணித்தியாலங்களில் அருள்செல்வம்...

6 மாதங்களில் இராணுவம் மீளழைக்கப்பட வேண்டும் : சிவாஜிலிங்கம்

வட மாகாணத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை 6 மாதங்களுக்குள் மீளழைக்க வேண்டும் என வட மாகாண உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். வலிகாமம் பகுதியில் சுமார் 4,000 ஏக்கர் காணி இராணுவத்தினரிடம் காணப்படுவதாக தெரிவித்த அவர் 600-700 ஏக்கர் காணி இராணுவ நடவடிக்கைகளுக்கு...

விஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் திடீர் அகழ்வு

வறக்காபொல பகுதியைச்சேர்ந்த நிமல் சேனாரத்ன என்ற நபர் 2009 ஆண்டு பிற்பகுதியில் விஸ்வமடுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணி புரிந்துள்ளார். குறித்த நபர் 2010 ம் ஆண்டு இரண்டாம் மாதம் முதல் வீடு வந்து சேரவில்லை என அவரது மனைவியால் வறக்காபொல பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு...

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத தாக்குதல்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்துமாறு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது. இவ்வாறான இனவாத தாக்குதல்களுக்கு எதிராக நாளையதினம் (வியாழக்கிழமை) நாடளாவிய ரீதியில் பூரண கடையடைப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், அதன்போது அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் நிர்வாகங்கள் மற்றும் வர்த்தகர்கள்...

வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டினபேரில் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையில் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி இடம்பெற்ற வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்பாட்டத்தின்போது நீதிமன்ற உத்தரவை கிழித்து காலில் போட்டு மிதித்து நீதிமன்றத்தை அவமதித்தாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, குறித்த நால்வரும் நேற்றய...

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

முஸ்லிம் மக்கள் பொருளாதார பலத்தை கொண்டிருப்பது சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இருப்பிற்கு ஆபத்தென்ற நோக்கிலேயே தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தொடர்ந்து தெரிவித்த அவர், ”முஸ்லிம்...
Loading posts...

All posts loaded

No more posts