பாடசாலைகளில் பொலித்தீன் பாவனைக்குத் தடை!

பாடசாலைகளில் பொலித்தீன் பாவனையை தவிர்த்துக் கொள்ளுமாறு கல்வி அமைச்சு சகல பாடசாலை அதிபர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது. டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் பெற்றோரும் மாணவர்களும் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. டெங்கு நுளம்புகள் பெருகாத வண்ணம் பாடசாலை...

முன்னறிவிப்பு இன்றி, பணிப்புறக்கணிப்பிற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தயார்!

சைட்டம் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வொன்றை முன்வைக்க அரசாங்கம் தவறினால் முன் அறிவித்தல் இன்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கம் சைட்டம் பிரச்சினைக்கு உரிய தீர்வை விரைவில் முன்வைக்காவிடின் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஷா தெரிவித்துள்ளார். மேற்படி...
Ad Widget

இவ்வருட இறுதிக்குள் யாழ்.நகரம் மூலோபாய நகரமாக மாற்றமடையும்: சம்பிக்க

“யாழ்ப்பாணத்தினை, இவ்வருட இறுதிக்குள் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களை இணைத்து மூலோபாய நகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என பாரிய நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்திகள் தொடர்பாக நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தினை மூலோபாய நகரமாக மாற்றி...

ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பங்கு பரிமாற்றத்தில் இறக்குமதியாளர்களிடம் காணப்படுகின்ற டொலர் தேவையின் அதிகரிப்பே இந்த நிலைமைக்கு காரணம் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் கையிருப்புகளை அதிகரிக்கும் நோக்கில் டொலரை கொள்வனவு செய்ய மத்திய வங்கி முன்வந்துள்ளது. இதன்காரணமாக ரூபாயின் பெறுமதி பொதுவான நிலைக்கு வந்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள்...

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கினை திசை மாற்ற முயற்சி?

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கினை திசை மாற்றும் முயற்சிகள் இடம்பெறுகின்றனவா எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக மன்றில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார். கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கு நேற்ற திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் முன்னிலையில் இடம்பெற்றது. அதன் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள...

உரிய பதிலளிக்காவிடில் விரைவில் வேலை நிறுத்தம் : பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம்

தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதிலளிக்காவிடில் விரைவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக, அந்த ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் முதல் எந்தவொரு நாளிலும் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, இன்று நள்ளிரவு...

வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை

வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வட மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸ் அதிகாரிகளை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி பளை பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய இராணுவ நிகழ்வின் போது, பொலிஸாரின் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கை...

வித்தியா படுகொலை வழக்கு: சிறப்பு அமர்விற்கான நீதிபதிகள் நியமனம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான விசேட நீதிபதிகள் பிரதம நீதியரசர் பிரியசாத் டிப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல்...

ஜூலை மாதத்திலிருந்து தனியார் பஸ் கட்டணம் அதிகரிப்பு!

தனியார் பஸ் கட்டணங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார். தனியார் பஸ் கட்டண சீர்திருத்தம் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், வருடாந்தம் இடம்பெறும் தனியார் பஸ் கட்டண சீர்திருத்தங்களுக்கு அமைவாகவே குறித்த கட்டண அதிகரிப்பு இடம்பெறவுள்ளது....

கேரள கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது!

வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் நேற்று (22) மாலை 5.30 மணியளவில் கேரள கஞ்சா வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான மதவாச்சி பஸ்ஸில் பயணித்த இராணுவ வீரரின் கைவசமிருந்த 50 கிராம் 200 மில்லிகிராம் கேரள கஞ்சாவினை வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்....

இனவாத மோதல்களை தூண்ட முயற்சி நடக்கிறது : விமல் வீரவன்ச

தமிழீழ அடிப்படைவாத பிரிவினரால், மனித படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்படும் தருணத்தில், யுத்தம் நிறைவு செய்யப்பட்டு 8 வருடங்கள் நிறைவடைந்ததுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் பொலிஸ் வாகனத்திற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெற்கில் சிங்கள- முஸ்லிம் மோதலுக்கு அடிகோலுவதற்கு சூட்சும நடவடிக்கைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முண்ணனியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்....

இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற வெடிப்பில் 19 பேர் பலி

இங்கிலாந்து, மெஞ்சஸ்டரில் இடம்பெற்ற ´அரியானா கிரான்ட்´ ன் இசை நிகழ்ச்சியில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் 19 பேர் பலியாகினர். 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராண்டின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில்இ இசை கச்சேரி முடிந்த பிறகு திங்கள்கிழமை...

சாதனைகளே இனத்திற்கு பெருமை: நீதிபதி இளஞ்செழியன்

பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்கள் சிறந்த சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் அந்த சாதனைகளே இனத்திற்கும் மொழிக்கும் பெருமை தேடித் தரும் என்றும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு...

மனோகணேசன் நாகரிகமான முறையில் பேசுவதற்கு பழகிகொள்ள வேண்டும் : சிவாஜிலிங்கம்

தேசிய சுகவாழ்வு, நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன் பொதுபலசேனாவோடு தன்னை இணைத்து பேசியதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் அமைச்சர் மனோகணேசன் நாகரிகமான முறையில் பேசுவதற்கு பழகிகொள்ள வேண்டும் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்ற (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்...

வடக்கு மக்கள் தேவைக்கு அதிகமாகவே காணிகளை கேட்கிறார்கள் என்ற ஜனாதிபதியின் கூற்று வருத்தமளிக்கிறது : சஜீவன்

யாழ்.வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை 6 மாதங்களில் மக்களிடம் வழங்குவேன் எனக்கூறிய ஜனாதிபதி, வடக்கு மக்கள் தேவைக்கு அதிகமாகவே காணிகளை கேட்கிறார்கள் என கூறுவது வருத்தமளிக்கிறது என வலி வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்துள்ளார். வலி, வடக்கு மீள்குடியேற்ற நிலை தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்...

முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக அச்சுறுத்தப்பட்டால் முறையிடுங்கள்: சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக மக்கள் யாரும் அச்சுறுத்தப்பட்டிருந்தால் மாகாண சபை உறுப்பினர்கள் ஊடாக முறைப்பாடு கொடுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மாகாணசபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கத்திடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள்...

பிள்ளையாரின் காணியை ஆக்கிரமித்த புத்தர் : பொதுமக்கள் விசனம்

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக புத்தர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம் கிராமத்தில் காணப்பட்ட ஒரு அரச மரத்தில் கடந்த முப்பது வருடங்களாக பிள்ளையார் கோவில்...

அமைச்சரவை மாற்றம் அபிவிருத்திக்கான உத்வேகத்தை அளிக்கும்: ஜனாதிபதி

நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னோக்கிக் கொண்டுசெல்லும் முனைப்பிலேயே அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த வகையில் நாட்டின் அபிவிருத்தியில், இந்த அமைச்சரவை மாற்றமானது புதிய உத்வேகத்தை கொடுக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய...

புலிகளுக்கு உதவுமாறு ‘றோ’விற்கு இந்திரா காந்தி பணித்தார்!: கே.பி

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுமாறு இந்திய உளவுப் பிரிவான ‘றோ’விற்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பணித்திருந்தார் என விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினரும் சர்வதேச ஆயுதக் கொள்வனவாளருமாக கருதப்படும் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே கே.பி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தமிழகத்தின் முன்னாள் முதல்வர்...

அரச வைத்தியர்கள் 24 மணிநேரம் வேலை நிறுத்தம்

அரச வைத்தியர்கள் சங்கம், இன்று திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் 24 மணிநேரம், வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மாலபேயில் அமைந்துள்ள தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவனமான (சைட்டம்) தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என அந்தச் சங்கம் அறிவித்துள்ளது. தலைவரான, வைத்தியர் அனுருத்த பாதெனியவை, இன்று(22) நீதிமன்றத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts