கிளிநொச்சியில் 12 பேர் கைது

கிளிநொச்சி - கல்லாறு காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட 12 பேரை தருமபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நீண்ட காலமாக சட்ட விரோதமாக நடைபெற்று வரும் இம் மணல் அகழ்வு மற்றும் வியாபாரம் பற்றி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரியான மகேஸ் வெலிகண்னவுக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...

விக்னேஷ்வரனிற்காக வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது: பொன்சேகா

“வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரனின் விருப்பத்திற்காக வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கு ஒரு போதும் முடியாது” என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அண்மையில் முகமாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “விக்னேஷ்வரனின் தாளத்துக்கு ஆடுவதற்கு...
Ad Widget

வடக்கை மாற்றியமைக்க புலம்பெயர் சமூகம் முன்வரவேண்டும் :வடக்கு முதல்வர்

”வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் வடக்கு மாகாணத்தை மாற்றியமைக்க முன்வர வேண்டும்” என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மூன்று தசாப்தகாலமாக அவுஸ்ரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் பேராசிரியர் கலாநிதி குணசிங்கத்தின் உதவியில் வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட இறந்தோரை நினைவுகூரும் நினைவு கட்டிமொன்றை திறந்து வைத்து, முதியோர் இல்லத்திற்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்து உரையாற்றிய முதலமைச்சர்...

தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க யாரும் தாயாரக இல்லை: கஜேந்திரகுமார்

மக்கள் போராட்டத்தினால் தமது உரிமைகளை பெற்று வருகின்றார்களே தவிர, வேறு எவரும் பெற்றுக்கொடுக்கத் தயாராக இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி-இரணைதீவு பூர்விக மண்ணில் மீள்குடியேற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர்...

முகமாலை, துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம்: முக்கிய தடயங்கள் கண்டெடுப்பு

முகமாலைப் பகுதியில் பொலிஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்பான பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் மூலமாக தாக்குதல் நடத்திய நபர்களின் தடயப் பொருட்கள் சில கிடைத்துள்ளதுடன்...

சாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டார்!

சாவகச்சேரி மந்துவில் பிரதேசத்தில் இன்று காலை இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். குறித்த இளைஞரை இன்று காலை 8.30 மணியளவில் வெள்ளை நிற காரில் வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளதாக அவ்வூர் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். அஜித் என அழைக்கப்படும் 23 வயதுடைய இளைஞனே கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.

முகமாலையில் இராணுவத்தினர் குவிப்பு! மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்பு!!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவின் முகமாலைப் பிரதேசத்தில், இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று (19) அதிகாலை 12.30 மணிக்கு ஏ-9 பிரதான வீதியின் முகமாலை கச்சார்வெளி பிரதேசத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தத் தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏ-9 பிரதான வீதியில்...

வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

நாடளாவிய ரீதியில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இன்று (19) பதிவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், மணித்தியாளத்துக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. எனவே, நாடளாவிய ரீதியிலுள்ள கடற்கரை பகுதிகளில் குடியிருக்கும் மக்களும் மீன்பிடிக்கச் செல்வோரும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு...

ஜனாதிபதிக்கு யாழில் கால்பதிக்க அனுமதியில்லை : மஹிந்த

இராணுவத்தினர் உயிரைப் பணையம் வைத்து நாட்டுக்கு சமாதானத்தைப் பெற்றுத்தந்ததை இன்று பலர் மறந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிரைப் பணையம் வைத்துப் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, தற்போது உருவாகியுள்ள நிலைமை கவலைக்கிடமானது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதைய ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் கால்பதிக்க அனுமதியற்ற ஒரு நிலையம் உருவாகியுள்ளதாகவும்...

யாழ். மாவட்ட அபிவிருத்தி குறித்து பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடும் வகையிலான விசேட சந்திப்பொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்று வருகிறது. பிரதமரினால் அறிமுகம் செய்யப்பட்ட பலம் மிக்கதோர் இலங்கை, திட்டமிட்டதோர் பயணம் எனும் தொனிப்பொருளிலான பொருளாதார திட்டத்தின் கீழ் மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த அபிவிருத்தி கூட்டத்தில் வடக்கு முதல்வர்...

கிரிக்கட் விளையாடிய வீரர் பலி!

ஐதராபாத்தில் கிரிக்கட் விளையாடும் போது காயமடைந்த இளம் வீரர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிர் ஆலம் இத்கா என்ற உள்ளூர் மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கட் விளையாடினர். ஒரே மைதானத்தில் பல குழுக்களாக இளைஞர்கள் விளையாடியதாக கூறப்படுகிறது. இதில் ஒரு குழுவில் இடம்பெற்றிருந்த வாஜித் என்ற இளைஞர், எதிரணி வீரர் அடித்த...

கோலியின் ரசிகையாக மாறிய ஜான்டி ரோட்சின் மகள்

தென்ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளருமான ஜான்டி ரோட்ஸ் இந்தியா மீதுள்ள நேசத்தின் காரணமாக தனது மகளுக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்தார். அவரது செல்லமகள் இந்தியா இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் தீவிர ரசிகையாகி இருக்கிறாள். விராட் கோலி போஸ்டரின் பின்னணியில் தனது மகள்...

விஜய் படத்திலிருந்து லைகா விலகல்?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். தற்போது மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் தெலுங்குப்படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஸ்பைடர் பட பணிகளை முடித்துவிட்டு, 2017 தீபாவளிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக...

`விவேகம்’ படத்தை தொடர்ந்து தல அஜித்தின் அடுத்த அறிவிப்பு என்ன?

அஜித் தற்போது `சிறுத்தை' சிவா இயக்கத்தில் `விவேகம்' படத்தில் நடித்து வருகிறார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள `விவேகம்' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான `விவேகம்' படத்தின் டீசர்,...

தமிழ் மொழியின் சிறப்பு: `சங்கமித்ரா’ குறித்து படக்குழு வெளியிட்டுள்ள தகவல்

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா'. ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படத்தின் தொடக்க விழா பிரான்சில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில், அதாவது ரூ. 300 கோடி செலவில் உருவாக உள்ள...

மாணவர்கள் மீது பொலிஸ் தாக்குதல் : 22ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சைட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை அரைநாள் பணிப்பகிஷ்கரிப்பொன்றில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரையில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

மஹிந்த, கோட்டா தலைமையில் பிரத்தியேக நிகழ்வு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில், இராணுவ வெற்றியின் 8 ஆவது வருட நிறைவைக் கொண்டாடும் நிகழ்வு நாளை (20) மாலை 3.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “பெற்ற வெற்றியைப் பாதுகாப்போம், இராணுவ வீரர்களை தனிமைப்படுத்தாதிருப்போம்” எனும் தொனிப் பொருளில் இந்த நிகழ்வை...

மின்சார கட்டண முறையில் மாற்றம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை

இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம் மின் பாவனையாளர்களுக்காகப் புதிய கட்டண முறையொன்றை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சார சபை சமர்ப்பித்துள்ள ஆலோசனைக்கு அமைய பொதுமக்கள் நுகர்வோர் ஆணைக்குழு, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைவாக, மின்சார பாவனையாளர்கள், மின்சாரத்தைப் பயன்படுத்தும்...

ஆட்சி முறையில் மாற்றங்கள் ஏற்பட்டால் நிரந்தர சமாதானம் கிடைக்கும் : சம்பந்தன்

நாட்டின் ஆட்சி முறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரமே நிரந்தரமான, சமத்துவம் மிக்க சமாதானம் ஏற்படும் என எதிர்க் கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில்நேற்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்கள் அனைவருக்கும் எமது அனுதாபங்களை தெரிவிக்கின்றோம் யுத்தத்திற்கான காரணம் என்ன? அந்த யுத்தத்தின்...

இன்றுமுதல் இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ்!

கடந்த ஆட்சிக்காலத்தில் இழந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இன்றுமுதல் இலங்கைக்கு மீண்டும் வழங்கப்படுகிறது. இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் 6 ஆயிரத்து 600 பொருட்களுக்கான வரிச்சலுகை இலங்கைக்கு கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் நிலவிய மனித உரிமை மீறல்களை காரணங்காட்டி, குறித்த வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவதை ஐரோப்பிய...
Loading posts...

All posts loaded

No more posts