- Tuesday
- May 19th, 2026
நாட்டில் தற்பொழுது நிலவும் அசாதாரண காலநிலையினால், ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களுடைய எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 104 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய பணிக்கு குழுவின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி தனது 84 ஆவது வயதில் நேற்று பிற்பகல் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பகல் ஒரு மணியளவில் காலமானார்.
“வருடாந்தம், பல்கலைக்கழக தகுதி பெறும் 2,500 மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படுவதில்லை” என்று, கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துனநெத்தி தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களினதும் செயற்பாட்டு தொடர்பாக விசாரணை செய்த போதே, இது தொடர்பாக தெரியவந்ததாக, அவர் தெரிவித்தார். “பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இரண்டாவது முறை மற்றுமொரு தெரிவு நடைபெறும். ஆனால்,...
கிளிநொச்சி மாவட்டம் குடிநீர் தட்டுப்பாடு, பெருமளவு வீதிகள் புனரமைக்கப்படாமை, முறையான நகர் திட்டமிடல் இல்லாமை, பாரிய தொழிற்சாலைகள் மீள இயங்காமை, குளங்கள் புனரமைக்கப்படாமை, நன்னீர் மீன்பிடி தொழில் வளர்ச்சியடையாமை போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குள் சிக்குண்டுள்ளது. இந்த நிலையில் விசேட அபிவிருத்தி திட்டங்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையாக உள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட...
கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதற்கு தாய்லாந்து நாட்டினால் முன்மொழியப்பட்ட மோரா (MORA) எனும் பெயர் சூட்டப்பட்டுள்ள தாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோரா சூறாவளியானது தற்போது இந்தியாவின் கல்கத்தா (KOLKATA) நகரிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 720 கிலோ மீற்றர் தூரத்திலும் வங்களாதேஷ் நாட்டின் சிட்டாகொங் (CHITTAGONG)...
திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்களை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளதாகவும், அவர்களை கட்டி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டி வைக்கப்பட்ட இளைஞர்களை பொலிஸார் மீட்டதுடன் அவர்களை கைது செய்துள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய...
வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் மத்தியில் பெண்கள் படும் அவலத்தை அறிந்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். தென்னிலங்கையில் இருந்து ஆடை தொழிற்சாலைக்கு உங்களுடைய பெண் பிள்ளைகளை அனுப்புமாறு கேட்ட போதும் தாம்...
நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் காணப்பட்டிருந்த அடக்குமுறை ஆட்சியானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற பெண்கள் வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்களில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது; ’நாட்டில் கடந்த கால யுத்தத்தின் காரணமாக இன்றும் கூட...
நாட்டின் அனர்த்தநிலை காரணமாக 8 மாவட்டங்கள் அதியுயர் ஆபத்து வலயங்களாக தேசிய கட்டட மற்றும் ஆராய்ச்சி அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிப்பதால் இரத்தினபுரி,கேகாலை,காலி,களுத்துறை,மாத்தறை, அம்பாந்தோட்டை,கண்டிமற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களே அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் தங்கியிருப்பது ஆபத்தானது என்றும், அடுத்துவரும் நாட்களுக்கு குறித்த பகுதி மக்கள் மிகவும்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கினை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ட்ரயல் அட் பார் நீதிபதிகள் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி படுகொலை வழக்கினை ட்ரயல் அட் பார் முறையில் நடத்துவதற்கு பிரதம நீதியரசர் பிரசாத் டெப் பரிந்துரை வழங்கியிருந்தமைக்கு அமைவாகவே இவ்வழக்கு விசாரணை குறித்துக்...
CTA அனுசரணையில் CCIY யின் ஒத்துழைப்பில் NCIT யினால் ஒழுங்கு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ள மேற்படி நிகழ்வில் இணையம் , மென்பொருள், இணைய வடிவமைப்பு , மொபைல் அப்ஸ், இலத்திரனியல் தகவல் பாதுகாப்பு , நெற்வேக்கிங் , இலத்திரனியல் சந்தைப்படுத்தல் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் அதுதொடர்பிலான ஆலோசனைகளை வழங்கும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் நிறுவனங்கள்...
திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளமொன்றை அமைப்பது தொடர்பில் இலங்கைக்கும்- அமெரிக்காவிற்கும் இடையே இரகசிய உடன்பாடொன்று கையெழுத்தாகியுள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். அதன்படி திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு எதிர்காலத்தில் குறித்த கடற்படை தளத்தை அமைப்பதற்கு அமெரிக்கா இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, அமெரிக்காவிடமிருந்து 400 மில்லியன் டொலர் பெறுமதியான போர்...
நாவற்குழியில் புகையிரத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் புகையிரத்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று சனிக்கிழமை காலை பயணித்த புகையிரத்தின் மீதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகையிரதத்தின் மீது வீசப்பட்ட கல் புகையிரத்தில் பயணித்த இராணுவ சிப்பாயின் தலை மீதுபட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த இராணுவ சிப்பாய்...
பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை குமரன் நினைவாக யாழ். வல்வெட்டித்துறையில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டிவைக்கப்பட்டது. நீச்சல் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்படவுள்ள குறித்த நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல்லை நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, வல்வை குமரன் ஆனந்தனின் உறவினர்கள் மற்றும் வடமாகாண முதலமைச்சர்...
யுத்த அழிவு சின்னமாக பேணப்பட்டு வந்த கிளிநொச்சியில் யுத்த காலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி இராணுவத்தினரால் எதிர்வரும் முப்பதாம் திகதி விடுவிக்கப்படவுள்ளது. குறித்த நீர்ததாங்கி உள்ள நாற்பது பேர்ச் காணி இராணுவத்தினரால், கரைச்சி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. அதனை பிரதேச செயலகம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையிடம் கையளிக்கவுள்ளது. யுத்த காலத்தில் இராணுவத்தினராலும்...
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்களை அவதானமாக இருக்குமாறு யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். நாட்டில் சீரற்ற காலநிலை நிலவும் நிலையில் யாழ். மாவட்டத்திற்கு பாதிப்புக்கள் உண்டா என யாழ்.மாவட்ட வானிலை...
இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவற்காக நிவாரணப்பொருட்கள் , வைத்திய குழு மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் இரு கப்பல்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இலங்கை மக்களுக்கு உதவி வழங்க முன்வருமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டதுக்கிணங்க உடனடியாக இந்திய அரசாங்கம் நிவாரண பொருட்களை அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளது....
நாட்டில் நிலவிவரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 100 பேர்வரை உயிரிழந்ததுடன், நூறிற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்தவர்களே இந்த அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தினால் 5 இலட்சத்திற்கும்...
ஊர்காவற்துறை பாலக்காட்டு சந்தி பகுதியில் நடைபெற்ற விபத்து சம்பவத்தினை அடுத்து வன்முறைகளில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் மெலிஞ்சி முனை பகுதியை சேர்ந்த பெண் உட்பட 17 பேர் இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஊர்காவற்துறை பாலக்காட்டு சந்தியில் கடந்த வாரம் தனியார் பேருந்து ஒன்றும் துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் மெலிஞ்சிமுனை...
வௌ்ள அனர்த்தம் காரணமாக, நாளைய தினம் நடைபெறவிருந்த பொது நிர்வாக சேவை பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த பரீட்சையை நடத்துவதற்கான மற்றுமொரு தினம் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும், விரைவில் பரீட்சை தினத்தை அறிவிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள் அனர்த்த நிலை தொடர்பில்,...
Loading posts...
All posts loaded
No more posts
