வடக்கின் புதிய அமைச்சர்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் பேச்சு

வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகியுள்ள இரண்டு அமைச்சுக்களுக்கும் புதியவர்களை நியமிப்பது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் பதவி விலகியுள்ள அமைச்சர்களான த.குருகுலராசா மற்றும் பொ.ஐங்கரநேகசன் ஆகியோரின் அமைச்சுக்களான, முறையே கல்வியமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவற்றின் செயற்பாடுகளை முதலமைச்சர்...

யாழ். மாணவர்கள் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு பொலிஸார் வழங்கிய தகவலில் சில உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதென சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தாம் இந்த விடயத்தை நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி...
Ad Widget

கேப்பாப்பிலவு பிரச்சினை பற்றி அறிவிக்கப்படவில்லை! : ஜனாதிபதி செயலகம்

கேப்பாப்பிலவு மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு இதுவரை எழுத்துமூலம் அறிவிக்கப்படவில்லையென தெரிவித்ததாக, கேப்பாப்பிலவு மக்கள் குறிப்பிடுகின்றனர். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய கேப்பாப்பிலவு மக்கள், அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் மகஜரொன்றை கையளித்தனர். ஜனாதிபதியை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சமந்தி ரணசிங்கவிடமே...

கிளிநொச்சியில் சுகாதார தொண்டர்கள் போராட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற சுகாதாரத் தொண்டர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கவில்லை என வடமாகாணத்தில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதற்கான ஆதரவினை கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் வழங்கி வந்தனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு...

அஞ்சல் ஊழியர்கள் இன்றும் பணிநிறுத்த போராட்டம்

மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் இன்றும் (28) பணிநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் துணை இணைப்பாளர் எச்.கே.காரிய வசம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் பிரதான 3400 க்கும் அதிகமான அஞ்சலகங்களில் இந்த பணிநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். நுவரஎலிய, கண்டி, காலி மற்றும் கொழும்பு...

லசித் மாலிங்க மீது ஒழுக்காற்று விசாரணை!

அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டமை தொடர்பில் கிரிக்கட் வீரர் லசித் மாலிங்க மீது மூவரடங்கிய குழு முன்னிலையில் ஒழுக்காற்று விசாரணையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.குறித்த மூவரடங்கிய குழுவில் , இலங்கை கிரிக்கட்டின் செயலாளர் மொஹான் த சில்வா , பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி த சில்வா...

மாணவர்கள் மரணிக்கும் வீதம் அதிகரித்துள்ளது!

அண்மைக் காலமாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாடசாலை மாணவர்கள் விபத்துக்களில் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய வீதிப் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. திடீர் விபத்துக்கள், டெங்கு நோய் போன்றன மாணவர்களின் மரணத்துக்கு காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

அரசுடைமையாகின்றது சைட்டம்: மாணவா்களின் போராட்டத்திற்கு வெற்றி!

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சைட்டம் தனியார் நிறுவனத்தில் கற்கும் மாணவர்களுக்கு மருத்துவ சபையில் அனுமதி வழங்கப்பட்டமை மற்றும் அவர்களுக்கு அரச மருத்துவமனைகளில் பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட பல...

கேப்பாப்பிலவு மக்களால் ஜனாதிபதி மாளிகை முற்றுகை

படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களால் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டுள்ளது. இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி இம் மக்கள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பூர்வீக கிராமங்கள்...

அரசியல்வாதிகள் என்ன கூறினாலும் தமிழர்கள் நல்லவர்கள்: வடக்கு ஆளுநர்

தமிழ் மக்களின் சமயம், கலாசாரம் மட்டுமன்றி சிங்கள மக்களின் சமயம் மற்றும் கலாசாரமும் இந்தியாவிலிருந்தே வந்ததென குறிப்பிட்டுள்ள வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே, அரசியல்வாதிகள் என்ன கூறினாலும் தமிழ் மக்கள் நல்லவர்கள் என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்தோடு, நாட்டில் இன, மத,...

சரியான நேரத்தில் தீர்மானம் எடுப்பேன்: வடக்கு முதல்வர்

வடக்கு மாகாணத்தின் இரு புதிய அமைச்சர்களை நியமிக்கும் விடயத்தில் சரியான நேரத்தில் முடிவெடுப்பேன் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களின் பதவி வெற்றிடமாக உள்ள நிலையில், கல்வி அமைச்சர் ஒருவரை முதல்வர் தெரிவுசெய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது தொடர்பில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....

விசாரணைக் குழு அமைக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை: வடக்கு அமைச்சர்கள்

வடக்கில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பாகவும் விசாரிப்பதற்கு புதிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த விசாரணைக் குழுவில் முன்னிலையாக மாட்டோம் என சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவ்வாறான விசாரணைக் குழுவை அமைப்பதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் 13ஆது திருத்தச் சட்டத்திலோ மாகாண சபை தேர்தல் சட்டத்திலோ முதலமைச்சருக்கு...

மானிப்பாயில் மர்ம நபர்கள் தாக்குதல்! ஒருவர் படுகாயம்!!

மானிப்பாய் பிரதேசத்தில் நேற்று இரவு கூரிய ஆயுதத்துடன் உந்துருளிகளில் வந்த சிலர், நபரொருவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.மானிப்பாய் - ஆனந்தன் வைரவர் ஆலய சந்தியில் நேற்று இரவு 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.தாக்குதலை மேற்கொண்ட தரப்பினர் 4 உந்துருளிகளில் வந்துள்ள நிலையில், மூன்று பேர், குறித்த நபர் மீது தாக்குதலை நடத்திய பின்னர் தப்பிச்...

அரச வைத்தியசாலை அம்பியுலன்ஸ் சாரதிகளும் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில்

நாடு முழுவதிலுமுள்ள அரச வைத்தியசாலைகளின் அம்பியுலன்ஸ் சாரதிகள் இன்று (27) காலை 7.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். சகல மாகாண சபைகளிலும் உள்ள சுகாதாரத்துறை அம்பியுலன்ஸ் சேவையை ஆரம்பிப்பதாக ஆட்சியாளர்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை மாகாண சுகாதார சேவை சாரதிகள்...

நயினாதீவு திருவிழாவை முன்னிட்டு கடற்பிரயாண பாதுகாப்பு ஏற்பாடு

நயினாதீவு ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, பயணிகள் பாதுகாப்பு சேவை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்களவாடி ஞானவைரவர் சனசமூக நிலையத்தினரால், இந்தக் கடற்பயணிகள் பாதுகாப்பு சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் எஸ்.தியாகராஜா தெரிவித்தார். இதற்காக 60க்கும் அதிகமான தொண்டர்களும் நீச்சல்வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 5 படகுகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டார். உயிரை பணயம் வைத்து...

தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

தபால் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியிலான பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர். நுவரெலியா, கண்டி மற்றும் காலி கோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள தபால் அலுவலகங்களை சுற்றுலா ஹோட்டலாக மாற்ற அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனடியாக நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி குறிப்பிட்டுள்ளது....

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சுப்பதவி வழங்கலாம்! :சித்தார்த்தன்

எந்தக் கட்சிக்கூடாகவேனும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சுப் பதவியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கலாம் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தற்போது வடமாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள இரண்டு அமைச்சுக்களுக்கும் அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக நேற்றையதினம் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்திருந்தார். இந்நிலையில், அமைச்சுக்களை அமைப்பது தொடர்பாக...

ஆஸியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள்!

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒரு தொகுதியினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்த குறித்த புகலிடக் கோரிக்கையாளர் அவுஸ்ரேலிய குடியகல்வு குடிவரவு திணைக்களத்தினால் அரச விமானமொன்றின் மூலம் நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 24 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு நாடுகடத்தப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. சட்டவிரோத குடியேற்றம் தொடர்பில்...

கூட்டமைப்பிற்கு எதிரான விமர்சனங்கள் அழுத்தங்களாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்: ஸ்ரீ கஜன்

தற்போது பிரதான எதிர்க் கட்சியாக செயற்பட்டு வருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் அனைத்தும் இனப்பிரச்சினை தீர்விற்கு அரசாங்கத்திற்கான அழுத்தங்களாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று சிரேஷ்ட ஊடகவியலாளரும் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஸ்ரீகஜன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக் காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ் மக்கள் பேரவை: மாவை

தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை செயற்பட்டு வருகின்றதென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும், இவ்வாறான செயற்பாடுகளால் கட்சியை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாதென மாவை மேலும் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) வெளியாகியுள்ள தமிழ் நாளிதழொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் ஓர் சமூக...
Loading posts...

All posts loaded

No more posts