- Saturday
- May 16th, 2026
தமிழ் பிரதேசங்களை சிங்கள பிரதேசமாக்கும் அரசின் சூழ்ச்சிக்கு, கூட்டமைப்பினர் சிலர் துணைபோவதாக, ஈ.பி.ஆர்.எல.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரமேச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். கூட்டமைப்பு என்கின்ற பேரில், தமிழரசு கட்சி தான்தோன்றித்தனமாக செயற்பட்டு, இவ்வாறான விடயங்களைக் கையாள்வதாகவும் அவர் கூறினார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர்...
யாழ் இந்திய துணை தூதுவா் ஆர்.நடராஜனின் மகள் பயணித்த வாகனம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சங்குப்பிட்டியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த, யாழ் இந்திய துணை தூதுவரின் மகள் சென்ற வாகனம், சங்குப்பிட்டிப் பகுதியில் வைத்து, அதே திசையில் பயணித்த கார் ஒன்றுடன் மோதியுள்ளது. இதன்போது, தனியாருக்கு சொந்தமான கார் தடம்புரண்டது. எனினும்,...
இலங்கையில் பௌத்த மதத்துக்கு முதலிடம் என்பதில் மாற்றம் எதுவும் இல்லை. இதனை ஏனைய இனத்தவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று, ஏனைய மதங்களுக்கும் அவற்றுக்குரிய இடம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி, மடவல பிட்டியேகெதர ரஜமகா விகாரையில் நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற மதவழிபாடுகளின் பின்னர் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....
அடுத்து வரும் சில தினங்களில் பருவப்பெயர்ச்சி காலநிலையில் படிப்படியாக அதிகரிப்பு நிலை காணப்படும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில், பிற்பகல் 2.00 மணியின் பின்னர், இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும், காலை வேளையில், மழை பெய்யும். ஊவா...
அனுராதபுரம் சிறையினில் 28 வது நாளாக உண்ணாவிரதத்தினில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் மூவரது உடல்நிலை மீண்டும் மிகமோசமான கட்டத்தை அடைந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் மூவரும் பலாத்காரமாக சிறை அலுவலர்களால் வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களிற்கு சேலைன்கள் ஏற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது பேசும் தகவு பெரும்பாலும் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் அரியாலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரியவருகின்றது. நேற்று இரவு 09.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரியை மேற்கோள் காட்டி தகவல் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதிக...
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் இலங்கை ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதகமான தீர்வொன்றை பெற்றுத்தருவார் என வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பு குறித்து யாழில் இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் தெரிவித்த அவர், ”தமிழ் அரசியல்...
அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்புவதற்கு ஒருசிலர் தேவையற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக எதிர்க் கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நாவின் உண்மை, நீதி, நஷ்டஈடு, மற்றும் மீள்நிகழாமையை உறுதிசெய்வதற்கான விசேட நிபுணர் பப்லோடிக்ரீப் தலைமையிலான குழுவினர் இன்று கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பின் போதே சம்பந்தன்...
இலங்கையில் வறுமை நிலை குறைந்துள்ள போதிலும், வடக்கு மாகாணத்தில் வறுமை நிலை அதிகளவில் உள்ளதாக சனத்தொகை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அதிகாரபூர்வ தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை மாவட்ட அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில், அதிகபட்சமாக வறுமை நிலை காணப்படுகின்றது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களுக்கு அமைய, 2012/13, காலப்பகுதியில், 6.7 வீதமாக இருந்த சிறிலங்காவின் வறுமை நிலை,...
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழுவானது பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியாவை சென்றடைந்துள்ளது ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொலன்னறுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவை முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டிற்கான இறுதி நடமாடும் சேவை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது. இதில்...
அரசியல் கைதிகள் விடயத்தில் துரிதமான பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. அரசியல் கைதிகளின் துரித விடுதலை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவ சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஆண்டுகள் பல கடந்துள்ள போதிலும்,...
தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவத்தினரால், யாழ் போதனா வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (சனிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது, வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி நினைவுச்சுடர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து வைத்தியசாலை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஆகியோர் உயிரிழந்தவர்களின்...
டெங்கு ஒழிப்பு பிரிவை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்தி யாழ். திருநெல்வேலி பகுதியில் சோதனையில் ஈடுபட்ட நபரினால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த நபர் பொலிஸாரோ வேறு ஊழியர்களோ இன்றி தனியாக வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) சோதனையிட்டுள்ளார். வீடுகளை சோதனையிட்டது மாத்திரமன்றி, வீட்டு உரிமையாளர்களின் பெயர் விபரங்களையும் அவர் திரட்டியுள்ளார். மேற்படி நபர்...
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதனால் 4 -0 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் முன்னணியில் உள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 43.4 ஓவர்களில் 173 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணிக்கு லஹிரு திரிமான்ன 62...
யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு கிணற்றுக்குள் தள்ளி படுகொலை செய்ய முயற்சித்த கணவனை எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரந்தனை பகுதியில் நேற்று முன்தினம் இரவு (வியாழக்கிழமை) மனைவி மீது தாக்குதல் மேற்கொண்ட கணவன் ,...
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி வங்கி கணக்கில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த பெரும்பான்மையின பெண்கள் ஐவர் விளக்கமறியலில் வைக்கபட்டு உள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாடு செல்வதற்காக தென்னிலங்கை முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக நுழைவு விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார். விசா பெறுவதற்கு அவரது வங்கி கணக்கில் 20 இலட்ச ரூபாய்...
வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை அழைத்து வந்து தம்மிடம் ஒப்படைப்பாரென எதிர்ப்பார்ப்பதாக உறவினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காய் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், நேற்று (வெள்ளிக்கிழமை) 239 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் வவுனியாவுக்கு விஜயம் செய்யும்...
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை வவுனியாவிற்கு மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டுமென, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்குச் வந்துள்ள அமைச்சரிடம், குறித்த அரசியல் கைதிகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வெளிநாட்டிற்குச் சென்றுள்ள சட்டமா அதிபர்...
தமிழ் தேசிய ஜனநாயக போராளிகள் அமைப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த ஊடக சந்திப்பு கிளிநொச்சி பாரதி ஸ்டார் விடுதியில் மாலை 2 மணியளவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஜனநாயக போராளிகள் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்திருந்தனர். இது குறித்து அவ்வமைப்பின் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ”இன்று பலர் முன்னாள்...
கல்வியற்கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிகளை நிறைவுசெய்த சுமார் மூவாயிரத்து 626 பேருக்கு புதிதாக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரத்து 78 தமிழ் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வியமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம் மற்றும் இராஜாங்க கல்வியமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இவ்ர்களுக்கான...
Loading posts...
All posts loaded
No more posts
