வேட்பாளர்கள் மீது தாக்குதல்: பொலிஸில் முறைப்பாடு!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கட்சியில் சாவகச்சேரி பிரதேச சபையின் 16 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் குமாரவேல் மற்றும் நகரசபையின் 5 ஆம் வட்டாரத்தில் இராமச்சந்திரன் ஆகிய இரு வேட்பாளர்களும்...

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் : சுகாஸ்

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் என சட்டத்தரணி சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று (26.01.2018) கரவெட்டியில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய அவர், “எங்கள் தலைவன் பிறந்த வரலாற்றுப் பெருமைவாய்ந்த இந்த...
Ad Widget

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான அணியை உருவாக்க அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும் : அங்கஜன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் கைகோர்க்க முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். தற்போது, அரசாங்கத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட 2 கோடி...

வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பிலான பிரச்சினை மற்றும் வைத்தியர்களின் தொழில் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வினை பெற்றுத்தர தவறியுள்ளமை போன்ற காரணங்களை முன்வைத்து எதிர்வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் தொடர் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றுக்கு செல்ல அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்­பாக சங்­கத்தின் செய­லாளர் வைத்­தியர் ஹரித்த...

முல்லைத்தீவில் வாக்கு அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டமை தொடர்பாக இருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த வாக்காளர் அட்டைகள் புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டிலே இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டே கைப்பற்றப்பட்டன. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 288 வாக்குச்சீட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில்...

சிறுவனை தாக்கிய சம்பவம்: சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பிணை

கிளிநொச்சியில் சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தலா ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த நால்வரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மீண்டும்...

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வர்த்தகத்திலே ஈடுபட்ட இருவர் கைது

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் நேற்று (வெள்ளிக்கிழமை)மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து பத்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் எழுபத்தெட்டாயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. மேலும் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. அத்துடன்...

இந்தியாவினது அழுத்தமே எமது நிலை சீரடைய உதவும் :முதலமைச்சர்

இந்தியா மற்றும் சர்வதேசத்தினது அழுத்தத்தின் விளைவாகவே எமது நிலை சீரடையக்கூடும் என வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இந்திய குடியரசு தின விசேட நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து கூறுகையில், “பல்வேறு சிற்றரசுகளாகச் சிதறிக் கிடந்த இந்தியா சுதந்திரத்தின் பின்...

கூட்டமைப்பின் வேட்பாளர் உதயசிறி உள்ளிட்ட அறுவர் கைது!!!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயசிறியை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே உதயசிறி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வைத்து வேட்பாளர் உதயசிறி தாக்கப்பட்டார் என்று முறைப்பாடு...

போலி வாக்குச் சீட்டுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் கைது!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற பெண்வேட்பாளர் ஒருவர் சட்டவிரோத போலி வாக்குச் சீட்டுடன் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கரைச்சி பிரதேச சபைக்கு பரந்தன் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான கிருஸ்வேணி விக்ரர்லோகநாதன் ( விக்கரர்சாந்தி) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். பரந்தன்...

ஊர்காவற்துறையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அச்சுறுத்திய கடற்படையினர்

பொது மக்களின் காணிகளை கடற்படையினர் சுவீகரிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை கடற்படையினரும், புலனாய்வாளர்களும் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவகத்தின் ஊர்காவற்துறை பருத்தியடைப்பில் பொது மக்களின் காணிகளை ஆக்கிரமித்து கடற்படையினர் முகாம் அமைத்துள்ளனர். இதனால் முகாம் அமைந்துள்ள காணி உள்ளிட்ட அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த மக்களும் அச்சம் காரணமாக வேறு இடங்களில் தங்கியுள்ளனர். இந் நிலையில்...

பெண் சமூகத்தை இழிவுபடுத்தியவர்கள் பதவி நீக்கப்பட வேண்டும்: இலங்கை ஆசிரியர் சங்கம்

ஆசிரிய சமூகத்துக்கும், பெண்கள் சமூகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்திய ஊவா மாகாண முதலமைச்சரினதும், கல்வி அதிகாரிகளினதும் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இக்கோரிக்கையை முன்னிறுத்தி பாரிய கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவும் இலங்கை ஆசிரியர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஹற்றன் பேரூந்து நிலையத்திற்கு அருகில் பிற்பகல்...

யாழ். பல்கலைக்கழக மாணவன் மீது வவுனியாவில் தாக்குதல்

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக விஞ்ஞான பீட மாணவன் மீது பெருன்பான்மை இனத்தினை சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த...

ஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கில் திடீர் மாற்றம்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் கர்ப்பிணித் தாயொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று(புதன்கிழமை) ஊர்காவற்றுறை பொலிஸாரிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த வருடம்...

வெள்ளவத்தை ரயில் விபத்தில் வவுனியா பெண் பலி!

கொழும்பு – வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) நடந்த விபத்துச் சம்பவமொன்றில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவத்தில் உயிரிழந்த பெண் வவுனியா தாண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த கமலி என்றழைக்கப்படும் கமலவதனா (வயது 35) என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனது மகனுடன் ஒரு ரயிலில் இருந்து இன்னுமொரு ரயிலுக்கு மாறிய வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....

தமிழரசு கட்சியின் மும்மூர்த்திகளும் அரசாங்கத்தின் கைப்பொம்மைகள் : சுரேஸ்

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதாக, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இதனால், தமிழ் மக்கள் அவர்கள் மீது விரக்தி கொண்டுள்ளதாகவம் அவர் கூறினார். அம்பாறை கல்முனையில் தமிழர் விடுதலை கூட்டமைப்பின் செய்தியாளார் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...

சிறைக்காவலர்கள் தாக்கிய சிறுவனுக்காக மனித உரிமை ஆணைக்குழு களத்தில்!

சிறுவன் ஒருவன் சிறைக்காவலர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற சிறுவன், சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தில் மோதி விபத்திற்குள்ளானான். சிறுவனின் தவறினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக கூறி, சிறைக்காவலர்கள் மனிதாபிமானம் இன்றி சிறுவனைத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான சிறுவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 பேரே தபால் மூல வாக்களிப்பில் வாக்களித்தனர்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூலம் 120 வாக்காளர்கள் நேற்று தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இதன்போது மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களும், தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களும் தபால் மூலம் வாக்களித்தனர். குறித்த மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 122 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவற்றுள் 26 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 96...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக அமைச்சர் அனந்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை 4ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு எதிராகவே நேற்று முன்தினம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வேட்பாளர் முகநூலில் தன்னை விமர்சித்ததாக குற்றஞ்சாட்டியே அவருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இதனையடுத்து...

புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் நெடுந்தீவில் கைது

நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், எட்டு இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த எட்டு மீனவர்களும் இரண்டு விசைப்படகுககள் சகிதம் நேற்றிரவு (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரரிக்கப்பட்டு வருவதோடு, இன்று யாழ். மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
Loading posts...

All posts loaded

No more posts