தமிழரசு கட்சியின் மும்மூர்த்திகளும் அரசாங்கத்தின் கைப்பொம்மைகள் : சுரேஸ்

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதாக, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதனால், தமிழ் மக்கள் அவர்கள் மீது விரக்தி கொண்டுள்ளதாகவம் அவர் கூறினார். அம்பாறை கல்முனையில் தமிழர் விடுதலை கூட்டமைப்பின் செய்தியாளார் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய சுரேஸ், புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான இடைக்கால அறிக்கை தமிழர்களுக்கு எதிரானது என பலரும் கூறிவரும் நிலையில், இவர்கள் மூவர் மாத்திரமே அது தமிழர்களுக்கு சாதகமானது என்று, பிரசாரம் செய்வதாகவும் கூறினார்.

Related Posts