- Thursday
- May 14th, 2026
“உள்ளூராட்சி சபைகள் தேர்தலின் போது வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது, தண்டனை சட்டக் கோவையில் உள்ளவாறு ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தும் வரையில் துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமான சூழ் நிலைகள் ஏற்படுமாயின் அந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்” இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப்...
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனியார் துறைகளில் பணியாற்றும் வாக்காளர்களுக்கு விஷேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அல்லது தனிப்பட்ட விடுமுறையில் இழப்பின்றி இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது...
ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றய தினம் வியாழக்கிழமை ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு...
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடமானது தனது 40வது வருட பூர்த்தியை முன்னிட்டு வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து உள்நாட்டு வெளிநாட்டு யாழ் மருத்துவபீட பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் இவலூஷன் பிறைவட் லிமிடட்டின் பங்களிப்போடு மாபெரும் மருத்துவக் கண்காட்சி – 2018ஐ நடாத்தவுள்ளது. மேற்படி கண்காட்சியானது சித்திரை மாதம் 4ம்,5ம்,6ம் மற்றும் 7ம் திகதிகளில் யாழ் மருத்துவபீட...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வருக்குமான தண்டனைத் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி வழங்கப்படும் என யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் நேற்று (01) தெரிவித்தார். யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வங்கி உத்தியோகஸ்தர் ஒருவரின் வீடொன்றில் கடந்த...
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு பக்க நியாயத்தை கேட்டு , நீதிமன்றம் தீர்ப்பளித்தது அநீதியானது. என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான றட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார். யாழில். வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல்...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்ட இருவருக்கு தலா நூறு ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இருவர் கடந்த 20ஆம் திகதி இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரையும்...
நாட்டைத் துண்டாடவோ அல்லது பிளவுபடுத்தவோ தான் ஒருபோதும் தயாராக இல்லை என்பதுடன் எவருக்கும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை, செவனபிட்டிய பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில், “இன்று நாட்டிற்குத் தேவையாக இருப்பது மன்னராட்சி...
யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னாரிலிருந்து தமிழகம் – இராமேஸ்வரத்துக்கு நேரடி கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மன்னார் தனியார் பேருந்து வளாகத்தில் இன்று இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார். இதன்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். “கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் நகரின் உட்கட்டமைப்பு வசதிகள்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில், காலை 11 மணியளவில் ஆரம்பமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முண்ணனியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் வருகைதந்தார். கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் தேர்தல் பரப்புரைகளுக்காக...
கடந்த காலங்களில் இனவாதம் பேசி மக்களை உசுப்பேத்தி வாக்குப்பெற்று மாநகரசபை உறுப்பினரானவர்கள் இதுவரை என்ன செய்தார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர். கடந்த காலங்களில் வெறுமனே ஆசனத்தையும் தமது சட்டைப்பையையும் நிரப்பியவர்கள் மீண்டும் என்ன முகத்தோடு மக்கள் முன் வாக்கு கேட்டு வருகின்றார்கள். கடந்த காலங்களில் இவர்கள் வாக்கு கேட்டு வரும் போது பல்வேறு வாக்குறுதிகளை...
வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கொலை செய்யப்பட்டு, கடற்கரை பகுதியில் கொண்டுவந்து போடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இனங்காணப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதுவரை மக்கள் ஆதரித்துவந்த தரப்புக்கள் தொடர்ந்தும் கோமாளித்தன அரசியல் செய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் இவ்வாறு கோமாளித்தன அரசியல் செய்வதற்கா கடந்த 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில்...
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்,யுவதிகளின் உடலங்கள் கடலில் வீசப்பட்டுள்ளமை மீண்டும் உறுதியாகியுள்ளது.குறிப்பாக கடற்படையினரது வசமிருந்த கட்டுப்பாட்டு பகுதிகளினில் இந்நடவடிக்கைகள் துல்லியமாக கடற்படையின் விசேட பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. தீவத்தில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள வணபிதா ஜிம்பிறவுண் அடிகளாரது என நம்பப்படும் உடல துண்டங்கள் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த...
தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்குட்டபட்ட பிரதேசங்கள் நாற்பது வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எவ்வாறு சுனாமிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டு பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதோ அதே போல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய...
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு வலி வடக்குபிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் வலிவடக்கு பிரதேச உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளருமான சுகிர்தன் ஊடாக தமிழரசுக் கட்சி தாக்கல் செய்திருந்தது. ஏற்கனவே குறித்த விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் காங்கேசன்துறைப் பொலிசாருக்கும்...
2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், சட்ட நடவடிக்கை தொடர்பான அறிவித்தலை சட்டத்தரணிகள் அறிவிப்பார்கள் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். “நிரந்தர தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின்...
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் நேற்று (31) காலை மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் அன்ரன் உதயராஜ் டிலக்சி என்ற 22 வயதான பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று காலை குறித்த பெண்ணின் கணவர் மற்றும் பெற்றோர் ஆகியோர் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போதே குறித்த பெண்...
வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சமீபகாலங்களில் அதிகரித்து வரும் தேர்தல் வன்முறைகள் காரணமாக இவ்வாறு பொலிஸாரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. மேலும் நடைபெற இருக்கின்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தேர்தல் பிரசாரங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். அதனைத்...
நிரந்தரத் தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் வகிபாகம்’ என்ற தலைப்பிலான மக்கள் சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களை இலக்காகக் கொண்டு இச்சந்திப்பு நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் வண்ணார்பண்ணை – பெரியகடை வட்டார வேட்பாளர் ம.அருள்குமரன் தலைமையில், நீராவியடியில் அமைந்துள்ள...
Loading posts...
All posts loaded
No more posts
