- Thursday
- May 14th, 2026
எங்கள் சகோதரிகளின் கற்புக்களை சூறையாட காரணமான பேரினவாத கட்சிகளுடன் இணைந்து போட்டியிட வெட்கமில்லையா என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செ. மயூரன் கேள்வியெழுப்பியுள்ளார். நெடுங்கேணியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், இசைப்பிரியா என்ற சகோதரியின் கற்பு சூறையாடப்பட்டதுதான் தெரியும்...
தமிழ்தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு உதவும் என நம்பியே வாக்களித்தோம். ஆனால் அவர்களால் எங்கள் வாழ்க்கையில் மாற்றம் எதுவும் நடக்கவில்லை. கூட்டமைப்பு உண்மையாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை அறிய நடவடிக்கை எதனையுமே இதுவரையில் எடுக்கவில்லை. எடுக்கவும் மாட்டார்கள். 3 தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியிருக்கின்றார்கள். மதியரசன்,...
தற்போதைய அரசினால் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு மாவை சேனாதிராஜா உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அவ்வாறு ஆதரவு தெரிவிப்பதற்காக இருபது மில்லியன் ரூபாவை மாவை சேனாதிராஜா உட்பட மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சமாகப் பெற்றதாக சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடியாக...
இலங்கையின் 70ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வுகளில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடலில் நாளை காலை 70ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பிரிட்டன் இளைவரசர் எட்வேர்ட் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார். எனினும், சுதந்திர தின விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனோ,...
வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இங்கு நீர்த்தேவைக்கான ஆறுகளோ அல்லது நீர்வீழ்ச்சிகளோ இல்லாத நிலையில் நிலத்தடி நீரை நம்பியே எமது விவசாய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. அண்மைக் காலமாக விவசாய நிலங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் அளவுக்கதிகமான உரப்பாவனைகள் மற்றும் பூச்சிகொல்லிப் பாவனைகள் எமது நிலத்தடி நீரைப் பருக முடியாத அளவிற்கு அதை என வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்...
1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் 13 திருத்த சாசனத்தின் மூலம் வடக்கு கிழக்கு இணைப்பு இருந்து வந்த நிலையில் 18 வருடத்திற்குப் பின்னர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் பிரிக்கப்பட்டிருக்கின்றது என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் தெரிவித்தார். கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்...
முட்கம்பிகளுக்குள்ளே இருந்த எமது இனத்தின் பலம் விடுதலைப் புலிகளின் காலத்திலேயே உச்ச நிலையில் இருந்தது என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நற்பட்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில்...
வடக்கு கிழக்கில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை என்பதையும் 1000 விகாரைகள் அமைப்பது என்பதையும் அனுமதிக்க முடியாது என தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் யாழ். மாநகர வேட்பாளர் விசுவலிங்கம் மணிவண்ணண் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக நேற்றயதினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்...
நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் பொய்களை கூறியுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பனர் ரட்ணஜீவன் கூல் நீதிமன்ற நீயாயாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளார் என யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் கு.குருபரன் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டு கருத்து வெளியிடும்...
ஒரே தேசம்’ என்னும் தொனிப்பொருளில் இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெகுவிமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரித்தானிய இளவரசர் எட்வேட் தம்பதியினர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், பிரதமர நீதியரசர் பிரசாத் டெப்,...
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, 3 அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை, அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (02) உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம்...
உள்ளூர் அதிகாரசபை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரையில் 373 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 09 ஆம் திகதி முதல் நேற்று காலை 06.00 மணிவரை 559 தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை நாட்டின் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன. அதன்படி தேர்தல்...
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க செல்லிடத் தொலைபேசி மற்றும் குறுஞ் செய்தி வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இந்த சேவைகளை பயன்படுத்தி தேர்தல் வன்முறை தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் குறுஞ் செய்தி வசதி தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது....
கொழும்பு மற்றும் வவுனியாவில் பதுங்கியிருந்தவேளை கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரால் கூறப்பட்ட இக்ரம் தவிர்ந்த ஏனைய 5 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று பிணையில் விடுவித்தது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து பொலிஸாரால் தேடப்பட்டுவந்தவர்களான முஸ்லிம் இளைஞரான இக்ரம் உள்ளிட்ட மூவர் கொழும்பு புறநகர் பகுதியில்வைத்து...
இந்திய வரவு-செலவுத் திட்டத்தில், இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள உதவித் திட்டங்களுக்காக கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 75 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்ட இலங்கைக்கு, இம்முறை 150 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா புனரமைக்கவுள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத்...
நிலையான ஓர் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும், கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். கல்முனையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த...
உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து விட்டு வாக்களிக்காதவர்களிடம், அதற்கான செலவுத் தொகையை அறவிடுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார். தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து, அதற்கு தகைமை பெற்ற 4 ஆயிரம்...
வவுனியாவில் ஈ.பி.டி.பி.யின் வட்டார தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பதாதைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி.யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் திலீபன் தெரிவித்தார். வவுனியா ஏ-9 வீதியில் அமைக்கப்பட்டிருந்த ஈ.பி.டி.பி வேட்பாளரின் தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக அமைக்கப்படிருந்த பதாதைகளே இவ்வாறு தீ வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை குறித்த வேட்பாளர் அலுவலகத்தை...
அரசாங்கத்திற்கான கூட்டமைப்பின் ஆதரவானது ஒரு இராஜதந்திரமே தவிர, அதனை அரசாங்கத்திடம் சோரம் போவதாக கூற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”உலக நாடுகள்...
தென்னிலங்கைச் சிங்களப் பெருந்தேசியவாதக் கட்சிகள் எல்லாம் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கெல்லாம் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளில் போட்டியிடுபவர்கள் எல்லோரும் எமது அயலவர்கள், நண்பர்கள் அல்லது உறவினர்களாக உள்ளார்கள். தங்கள் வேலை வாய்ப்பு மற்றும் இதர சலுகைகளை எதிர்பார்த்தே இவர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது வெள்ளிடைமலை. தெரிந்த முகம் என்பதற்காக இவர்களுக்கு நாங்கள் வாக்களித்தால், நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலையை...
Loading posts...
All posts loaded
No more posts
