கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் முதலமைச்சரின் செயற்பாடுகள் : மாவை

தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடித்து தலைமையை மாற்ற வேண்டும் என்பவர்களுக்கு பலம் சேர்ப்பதாக வடக்கு முதலமைச்சரின் செயற்பாடுகள் அமைந்துள்ளது என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் அவ்வறிக்கையில், “மாற்றுத் தலைமை எது? அவர்கள் கொள்கை மற்றும் இலக்கை அடைந்திட...

திறந்த ஒரே நாளில் பொன்னாலை வீதியை இழுத்து மூடியது ராணுவம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் திறந்துவிடப்பட்ட பருத்தித்துறை – பொன்னாலை பிரதான வீதியை, ராணுவம் மீண்டும் மூடியுள்ளது. நேற்று முன்தினம் காலை இவ்வீதி மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்றய தினம் (புதன்கிழமை) அங்கு மக்களை ராணுவம் அனுமதிக்கவில்லையென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 28 வருட காலமாக குறித்த வீதி ராணுவத்த்தின்...
Ad Widget

யாழ் பொலிஸ் நிலையத்தில் கைதியொருவர் தற்கொலை முயற்சி?

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் கழுத்தில் பிளேட்டால் கீறி தற்கொலைக்கு முயற்சித்தார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிர் பொலிஸார் தெரிவிக்கையில்... இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. “மதுபோதையில் வந்து தன்னை தாக்குவதாக குடும்பத்தலைவரின் மனைவி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதனடிப்படையில்...

மைத்திரியை கொலை செய்ய முயன்ற மஹிந்த!: அம்பலமாகும் இரகசியங்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தீட்டிய சதித்திட்டங்களை அம்பலப்படுத்த முயன்றதற்காக பல தடவைகள் என்னைக் கொலை செய்து விட முயற்சி செய்தார்கள் என ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ மேஜர் ஹசித சிரிவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்...

ஜனாதிபதியின் கருத்தால் வெகுண்டெழுந்த உறவுகள்: சர்வதேச தலையீட்டிற்கு கோரிக்கை

காணாமற்போனோர் எங்குமே இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்திற்கு, காணாமல் போனோரின் உறவுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உறவுகளுக்காக ஏங்கித் தவிக்கும் தமக்கு இவ்வார்த்தைகள் மேலும் வேதனையை ஏற்படுத்துகின்றதென குறிப்பிட்டுள்ள உறவினர்கள், தமது வேதனையை கண்ணீராக வெளிப்படுத்தியுள்ளனர். இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த மற்றும் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உண்மை நிலையை...

ஈழத்தமிழர் அரசியல் யதார்த்தம் எது? கூட்டமைப்பின் தலைவர்களுக்கு ஓர் வேண்டுகோள்

தற்போதய சூழலில் யதார்த்தம் என்ற பெயரில் இலங்கை அரசின் ஆக்கிரமிப்புக்குள் தமிழர் தாயகத்தை சிக்கவைக்கும் முயற்சிக்கு தமிழர் தலைமைகள் துணைபோவதை நாம் வேதனையுடன் அவதானிப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழர்களை அடிமைப்படுத்தும் முயற்சிக்குத் துணைபோக வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் அவர் விடுத்துள்ளார். இது...

கறைபடிந்த கைகளுக்கா? தூய கரங்களுக்கா? யாருக்கு உங்கள் வாக்கு? : மணிவண்ணன்

மக்களாகிய உங்களைக் கொன்றுகுவித்த, நீங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கறைபடிந்த கரங்களோடு உங்கள் முன் வந்து நிற்கின்றவர்களுக்கு நீங்கள் வாக்களிக்கப்போகின்றீர்களா ? அல்லது இந்த இனத்தின் விடுதலைக்காக விலைகொடுத்ததவர்களின் வழியிலே சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மகனான கஜேந்திரகுமார் பொன்னம்பத்தின் தலைமையை ஏற்று தூய கரங்களோடு உங்கள் முன் வந்துநிற்கின்ற எங்களுக்கு வாக்களிக்கப்போகின்றீர்களா என்பதை நீங்களே...

சிங்கக் கொடி ஏந்திய சம்பந்தனும், சுமந்திரனுமே துரோகிகள் : கஜேந்திரகுமார்

1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களின் ஆணையினைப் பெற்றபின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்த ஒரு இடத்திலும் சிங்கள தேசத்தை அங்கீகரித்ததும் இல்லை சிங்கக் கொடியை கையில் தூக்கிப் பிடித்து கொண்டாடிதும் இல்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்களி முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பந்தனும் சுமந்திரனுமே சிங்களவர்களுடன் இணைந்து...

தேர்தல் பரப்புரைகள் நாளை நள்ளிரவுடன் முடிவு !!

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் நாளை (பெப்ரவரி 07) நள்ளிரவுடன், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மொகமட், “எதிர்வரும் 10ஆம் நாள் 341 உள்ளூராட்சி சபைகளுக்கு, 8, 356 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 43 அரசியல் கட்சிகள்...

அரசியல்வாதிகள் மக்களின் சொத்தை களவாடுவதே வறுமைக்கு காரணம்: ஜனாதிபதி

அரசியல்வாதிகள் மக்களின் சொத்தை களவாடுவதே வறுமைக்கான காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதநதிரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கட்சி பார்த்து அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதை நான்...

பருத்தித்துறை-பொன்னாலை வீதி 28 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பு!

28 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த யாழ்.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட, பருத்தித்துறை- பொன்னாலை வீதி நேற்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டது. மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்ட பின்னர் பருத்தித்துறை – பொன்னாலை வீதியை திறக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே குறித்த வீதி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த வீதி திறந்து வைக்கப்பட்டதன் ஊடாக, இப்பகுதி மக்களுக்கு...

சேதமடைந்த, கிழிந்த நாணயத்தாள் தொடர்பில் மத்திய வங்கி முக்கிற அறிவிப்பு!

சேதமடைந்த மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் நிதி திணைக்களத்தின் உயர் அதிகாரி தீபா செனவிரத்ன இதனை தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், நாணயத்தாள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில்...

காணாமற்போனவர்கள் எவரும் நாட்டில் எங்குமே இல்லை : யாழில் ஜனாதிபதி

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் இந்த நாட்டில் எங்கும் ஒழித்துவைக்கப்படவில்லை. அந்த இடங்களில் எல்லாம் தேடிப்பார்த்த பின்னரே இதனைத் தெரிவிக்கின்றேன். எனவே காணாமற்போனோரின் உறவினர்களுக்கு நிதியுதவி வழங்கவேண்டுமாயின் அதனை நான் ஏற்பாடு செய்வேன்”இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் இன்று அறிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்று...

வடக்கில் ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்

யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமானது இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. மேலும் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, யாழ். மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள்...

கேப்பாபுலவு மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய பொலிஸ் அதிகாரி!!

கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் நேற்று (04) 339 ஆவது நாளாகவும் தொடர்கிறது.இந்நிலையில் நேற்றைய தினம் இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினம் இடம்பெற்ற நிலையில் சுதந்திர தினத்தை எதிர்க்கிறோம் வெறுக்கிறோம் என தெரிவித்து தமது போராட்ட இடமெங்கும் கருப்பு கொடிகள் கட்டி பல்வேறு...

யாழ். மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்

யாழில் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உணர்வு பூர்வமாக கொண்டாடப்பட்டது. குறித்த நிகழ்வு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரே பிரதம விருந்தினராக கலந்துகொள்ள யாழ். அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது முப்படைகளின் அணிவகுப்புடன் பாடசாலை மாணவர்களின் இன்னிசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டு அணிவகுப்பும் இடம்பெற்றது. மேலும்...

சுதந்திர தினத்தைப் புறக்கணித்தனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுதந்திர தினத்தைப் புறக்கணித்து தமது போராட்டத்தைத் தொடர்ந்திருந்தனர். இதன்போது கறுப்பு உடையணிந்தும், தலையில் கறுப்புப் பட்டி அணிந்தும் இருந்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நேற்றுடன் 350 நாட்களாக தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராடி வருகிறார்கள். இதுவரை தமக்கான தீர்வுகள் எதுவும்...

தமிழ்த் தேசியப் பேரவையின் கூட்டத்தினைக் குழப்பிய குண்டர்கள்

யாழ்ப்பாணம் றக்கா வீதி மருதடிப் பிரதேசத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் மீது குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் (03.02.2018) மாலை மக்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது தாம் ஈபிடிபியினர் என கூறியவாறு ஈபிடிபியின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சில இளைஞர்கள் இப்பகுதியில் வேறு கட்சிகள் கூட்டங்கள் நடத்த...

யாழ் மாநகரை ஆட்சி செய்தவர்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும்!!, மாநகர முதல்வரது வாகனமும் ஏலத்தில் விற்கப்படும் : வி.மணிவண்ணன்

யாழ் மாநகரசபையில் ஈபிடிபியின் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப் பேவதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ்த் தேசியப் பேரவை யாழ் மாநகரசபையினைக் கைப்பற்றினால் அப்போதைய முதல்வராக இருந்த யோகேஸ்வரி பற்குணராஜாவால் கோடிக்கணக்கான நிதியினைச் செலவிட்டு தனது பயன்பாட்டிற்கு என...

சிறிதரனும் 2 கோடி வாங்கினார் : ஆதாரத்துடன் அம்பலம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இரண்டுகோடி ரூபாவை அபிவிருத்தி நிதி எனும் பெயரில் பெற்றுக்கொண்டமையை பத்திரிகை ஒன்று ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியுள்ளது. வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபா அரசியல் இலஞ்சம் வழங்கப்பட்டதாக தாவல்கள்...
Loading posts...

All posts loaded

No more posts