- Wednesday
- May 13th, 2026
“உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விண்மீன்கள் அமைப்பினரால் விழிப்புணர்வு வாகனப்பேரணியொன்று இடம்பெறவுள்ளது. வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது விண்மீன்கள் அமைப்பின் தலைவர் நகுலேஸ்வரன் புவிகரன் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உணவு வீண்விரயமாகுவதை தடுக்கும் நோக்குடன் வீண்மீன்கள் அமைப்பை உருவாக்கி இல்ல, பொது நிகழ்வுகளில்...
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வருடம் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி என்பதனால் அதனைத் தொடர்ந்து வரும் ஒரு வார காலம் வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையை அடுத்து மே தின கொண்டாட்டங்கள் மே மாதம் 7...
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அவர் முழு நாட்டுக்கும் பணி செய்கிறார் இல்லை என்று சொல்லி அதை பறித்து தமக்கு தர சொல்லி பொது எதிரணி கூறுகின்றது. ஆனால் அதைவிட முக்கியமாக "சம்பந்தன், இலங்கை நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றதன் மூலம்,...
எரிபொருள் விலையை உயர்த்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதி மற்றும் பிரதமரே எடுப்பார்கள் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் முகமாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....
தமிழ் மக்கள் பேரவையில் உள்ள கட்சிகளின் கொள்கைகளுடன் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒன்றித்து செயற்பட்டால் அடுத்த தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘இவ்வாறு புதிய அமைப்பைத் தொடங்கவுள்ள...
சபைகளை அமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பலர் எமது கட்சியுடன் பேசி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பேச்சுக்கள் எதுவும் நடத்தவில்லை என்று கூறுவதானது “ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி கடந்த பின்னர் நீயாரோ நான்யாரோ” என்ற கதைபோல் உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக்...
தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) தமிழர் தாயகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறித் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது. அவ்வேளையில் தமிழீழ...
யாழ். அராலியில் அதிகளவு மதுபானம் அருந்திய நிலையில் கொய்யாக்காய் என நினைத்து ஒருவகை நச்சு விதையை உட்கொண்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று குறித்த குடும்பஸ்தருக்கு அவரது பிள்ளைகளால் ஒரு தொகைப் பணம் கைவிசேடமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பணத்தை எடுத்து...
“நாங்கள் எவரின் பின்புலனில் செயற்படவில்லை, தேசத்துக்காக உயிர் நீத்த எங்களது தாயாரையும் எம்மையும் அவமானப்படுத்துவதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார். அன்னை பூபதியின் நினைவு தின நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர்...
இறுதிக்கட்டப்போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்காக எதிர்வரும் மே- 18 ஆம் திகதி அனைவரையும் ஒன்று திரளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலக சமூகங்களின் மனச்சாட்சிக் கதவுகளை இறுக்கி மூடி வைத்தபடி, அவசர அவசரமாக இருபத்தோராம் நூற்றாண்டில் எல்லோர்...
நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் கட்டடங்கள் அனைத்தையும் அதன் ஆரம்பநிலையிலேயே இடித்து அழிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் முதலாவது அமர்வு சபை சபா மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதன்போது குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டு, சபை உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய அமர்வில் சட்டவிரோதமாக கட்டடங்கள் அமைக்கப்படுவது...
இந்தியாவில் இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் செய்வது சாதாரணமானது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டையில் உள்ள அரச சித்த மருத்துவக் உள்ள அகத்தியர் கோயிலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை...
யாழ். நகர அபிவிருத்திக்காக மத்திய அரசின் உதவிகளை பெற்றுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், தேவையேற்படின் அதற்கான கோரிக்கையை முன்வைக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட்டை, யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) முற்பகல் இச்சந்திப்பு கலந்துரையாடியபோதே ஆளுநர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது யாழ். நகரத்தை அழகுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்கள்...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதை வைத்தே அவருடன் இணைவது குறித்து ஈபிஆர்எல்எவ் தீர்மானிக்கும் என்று அக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சி ஒன்றின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான, பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்தி...
யாழ் .வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு, சுமார் ஒன்றரை கோடி பெறுமதியான மீன்கள் சிக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே, நேற்று (செவ்வாய்க்கிழமை) 20 ஆயிரம் கிலோவிற்கும் அதிமான மீன்கள் சிக்கியுள்ளன. குறித்த மீன்கள் பாரை இனத்தை சேர்த்தவைகள்...
தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனிடம், ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் மனுவொன்றை கையளித்துள்ளனர். இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகத்திடம் சேகரிக்கப்பட்ட மூன்று லட்சம் மக்களின் கையொப்பங்கள் அடங்கிய மனுவையே ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை)...
வடக்கு மாகாண ஆளுநராக மீளவும் நியமிக்கப்பட்டுள்ள றெஜினோல்ட் கூரே இன்றையதினம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மாகாண ஆளுநர்கள் மாற்றத்தின் போது வடக்கு மாகாண ஆளநராக இருந்த றெஜினொல்ட் கூரேயையும் ஐனாதிபதி மாற்றியிருந்தார். இந்நிலையில் மீளவும் வடக்கு ஆளுநராக றெஜினோல்ட் கூரே நியமிக்கப்பட வேண்டுமென பல தரப்பினர்களும் ஐனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமை வடக்கு...
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள பகுதி கிணறுகளை தூய்மைப்படுத்தும் பணிகளையும், பற்றைகளை துப்புரவு செய்து வீதிகளை அமைக்கும் பணிகளையும், மீள்குடியேறிவரும் மக்களுக்கான குடிநீர் வசதிகளையும் வலி,வடக்கு பிரதேச சபை செய்து வருவதாக பிரதேச சபையின் தலைவர் எஸ்.சுகிர்தன் கூறியுள்ளார். கடந்த 13ம் திகதி வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த சுமார் 683 ஏக்கர்...
இலங்கையில் மதங்களிற்கு இடையே குரோதங்களை பரப்புவதற்கு பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என 12 சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையை சேர்ந்த 12 சிவில்அமைப்புகள் இது தொடர்பில் பேஸ்புக்கின் பிரதான நிர்வாகிக்கு பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளன. இலங்கையில் மதங்களிற்கு இடையே குரோதத்தினை பரப்புவதற்கு பேஸ்புக் பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள சிவில் அமைப்புகள் இதனை கட்டுப்படுத்தவேண்டும்....
Loading posts...
All posts loaded
No more posts



