Ad Widget

மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

எதிர்வரும் பொது தேர்தலில் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலொன்று இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக கொழும்பில் 19 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், குறைந்தபட்சமாக திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 4 பேர் தெரவுசெய்யப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 பேர் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர். யாழப்பாண மாவட்ட வேட்பு மனுவில் 10 பேர் இணைத்துக்கொள்ளப்படவேண்டும். வன்னி மாவட்டத்தில் 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதுடன் 9 பேர் வேட்புமனுவில் சேர்க்கப்படவேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதுடன், 8 பேர் வேட்பு மனுவில் இணைத்துக்கொள்ளப்படவேண்டும்.

திகாமடுல்ல மாவட்டத்தில் 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதுடன் 10 வேட்பாளர்கள் களமிறக்கப்படவேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் 4 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுவதுடன் வேட்பு மனுவில் 7 பேர் சேர்க்கப்படவேண்டும்.

நுவரெலியா, புத்தளம் மற்றும் பதுளை மாவட்டங்களில் இருந்து 8 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Related Posts