அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுமா? புதிதாக உருவாகிய சர்ச்சை!

அன்னை பூபதியின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரின் பெயரை பயன்படுத்தி முன்னெடுக்கும் நிகழ்வுகளை தங்களது அனுமதியின்றி நடாத்தக்கூடாது என அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி மட்டு. பொலிஸ் நிலையததில் நேற்று (திங்கட்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார். தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் பெயரைப் பயன்படுத்தி, சிலர் வெளிநாடுகளில் நிதிகளை திரட்டி...

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார்! – சம்பந்தன்

ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நினைப்பது அநாகரிகமான செயலென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அதனை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு எவருக்கும் உரிமை உண்டு என்கின்ற போதிலும்,...
Ad Widget

வலி. வடக்கில் அமைந்திருந்த இராணுவ களஞ்சியசாலை வெளியேற்றம்

வலி. வடக்கு – மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுதக் களஞ்சியசாலை அங்கிருந்து நேற்று (திங்கட்கிழமை) வெளியேற்றப்பட்டது. குறித்த பகுதியில் கடந்த 683 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டமையை தொடர்ந்து இந்த ஆயுதக் களஞ்சியசாலை மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் என்பன இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டன. அங்கு பொருத்தப்பட்ட இரும்புக் கூரையினை இராணுவத்தினர் கழற்றி வாகனங்களில்...

தொகுதிவாரி தேர்தல் முறை தவறானது – சுமந்திரன்

தொகுதிவாரி தேர்தல் முறை மிகவும் மோசமானது என்பதற்கு வவுனியா நகரசபையின் ஆட்சியதிகாரம் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி வசமானமை மிகச் சிறந்த உதாரணம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இந்த தேர்தல் முறையின் கீழ் நகரசபையில் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றிய கட்சி ஆட்சி அமைக்கமுடியாத...

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 68 மில்லியன் நிதி முதற்கட்டமான கிடைக்கப்பெற்றுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் வீடமைப்பு மற்றும் உட்கட்டுமான வசதிகள்...

சன்சீ கப்பலில் கனடா சென்ற யாழ் இளைஞன் வெட்டிக் கொலை

கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் உட்பட 8 பேர் அங்கு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்த கொலைகள் இடம்பெற்ற போதும், தற்போது வெளிவந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடம் கனேடிய பொலிஸார் உறுதி செய்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கச்சேரியடியை சேர்ந்த 40 வயதான கனகரட்ணம்...

தலைவர் பிரபாகரனின் வீட்டில் நடிகர் சதீஸ்!

தென்னிந்திய திரைப்பட நடிகர் சதிஸ் யாழ்பாணத்திற்கு வருகைதந்துள்ளார். யாழ்ப்பணத்திற்கு வந்த அவர், வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டுக்கு சென்று அதனை பார்வையிட்டு உள்ளார். அது தொடர்பிலான ஒளிப்படத்தினை தனது கீச்சகத்தில் (டுவீட்டரில்) பதிவிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் புத்தரும் இல்லை காந்தியும் இல்லை! – யாழில் அமைச்சர் மனோ

“அரசுடன் உடன்படிக்கை செய்வதில் நம்பிக்கையில்லை. காரணம் அந்த உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசில் கௌதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை. எல்லாம் அரசியல் பேரம்தான் நடக்கிறது” இவ்வாறு தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த அமைச்சர் மனோ, யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற...

கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் கொழும்பில் மாயம்!

கொழும்பில் பணி நிமித்தம் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி, ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 46 வயதுடைய வேலாயுதம் விக்கினேஸ்வரன் என்பவரே காணாமற்போயுள்ளார் என அவரது மனைவி திருமதி வி.விஜயகுமாரி முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில்...

தியாக தீபத்துக்கு சிலை – கிட்டு பூங்கா புனரமைப்பு – வீதிகளுக்கு மாவீரர்களின் பெயர் யாழ் மாநகர முதல் அமர்வில் வி.மணிவண்ணன் கோரிக்கை

தியாக தீபம் திலீபன் அண்ணாவிற்கு யாழ் மாநகரசபை சிலை வைத்தால் அதனை வரவேற்பதோடு அதற்கான ஒத்துளைப்பும் வழங்குவோம். அதேபோன்று மாவீரர்களின் பெயரில் முன்னர் இருந்த வீதிகளுக்கு மீண்டும் அவர்களது பெயர்கள் சூட்டப்படவேண்டும் என்றும் கிட்டு பூங்கா புனரமைக்கப்பட்டு மீண்டும் கிட்டு பூங்க என பெயர் சூட்டப்படவேண்டும் என வலியுறுத்தியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய...

வலிதெற்கின் எல்லையினுள் உள்ள சந்தைகளில் வெளி வியாபாரிகளுக்கு தடை

சுன்னாகம் மற்றும் மருதனார் மடம் உள்ளிட்ட வலிதெற்கின் எல்லையினுள் உள்ள சந்தைகளில் வெளி வியாபாரிகளுக்கு இடம் வழங்குவதனையும் இவ் எல்லையினுள் நடைபாதை வியாபார நடவடிக்கையினையும் தடை செய்யவேண்டும் என்ற தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனி உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நீண்ட வாதபிரதிவாதங்களின் பின்னர் அனைவரின் ஒத்துழைப்புடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் கன்னியமர்வு கடந்த...

வடமாகாணத்தில் 246 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

வடமாகாணத்தில் 246 ஆசிரியர்கள் வருடாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என வடமாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு பாடசாலையில் 5 வருடங்கள், அதற்கு மேல் சேவையாற்றியவர்களுக்கு இவ்வாறு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டில் 246 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி வலயத்தில் 53...

இடி, மின்னலுடன் மழை : பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் மாலை வேளைகளில் பல பிர தேசங்களிலும் பெய்துவரும் மழையுடனான கால நிலை எதிர்வரும் 16ஆம் திகதிவரை தொடரும் சாத்தியம் இருப்பதாக வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்போது இடியுடன்கூடிய மழை பெய்யும்போது பாரிய மின்னலுடன் மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 வரையான வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய...

வடக்கு ஆக்கிரமிப்பு தெற்கில் நடந்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா? – ராஜிதவின் காரசாரமான கேள்வி

வடக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு வருவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் வடக்கு மக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர்...

அரசியல்வாதிகள் இலட்சியங்களைக் குழிதோண்டிப் புதைத்தாலும் நியாயமான இலட்சியங்கள் ஒருபோதும் சாவதில்லை! – பொ.ஐங்கரநேசன்

விடுதலை அரசியலுக்கும் தேர்தல் அரசியலுக்கும் இடையில் பலவேறுபாடுகள் உள்ளன. விடுதலை அரசியலில் இலட்சியத்துக்காகப் போராளிகள் உயிர்துறக்கவும் தயங்கமாட்டார்கள். ஆனால், தேர்தல் அரசியலில் அரசியல்வாதிகள் நாற்காலிகளுக்காக இலட்சியங்களைக் குழிதோண்டிப் புதைக்கவும் தயங்கமாட்டார்கள். ஆனால், எவ்வளவுதான் ஆழக்குழிதோண்டிப் புதைத்தாலும் நியாயமான இலட்சியங்கள் ஒருபோதும் சாவதில்லை என்று தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் ஆணித்தரமாகத்...

புத்தாண்டை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் நலன் கருதி இன்று முதல் விஷேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை இந்த சேவை முன்னெடுக்கப்படும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது. இன்று காலை முதல் கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை மற்றும் மஹவை வரை குளிரூட்டப்பட்ட...

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளிற்கான அவசர கலந்துரையாடல்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளிற்கான அவசர கலந்துரையாடல் 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் யாழ்மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள YMC மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலானது பட்டதாரிகள் அனைவரினதும் வேலைவாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதுடன் இம்மாதம் இடம்பெறவுள்ள நேர்முகத்தேர்வு தொடர்பாகவும் அதில் உள்ள பிரச்சினை தொடர்பாகவும் வேலையற்ற பட்டதாரிகளின் சரியான தரவுகளை உறுதிப்படுத்துதல் தொடர்பாகவும் நடைபெறும் முக்கிய கலந்துரையாடல்...

நேர்முக தேர்விற்கு செல்லும் வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு கல்வி இராஜாங்க அமைச்சரின் முக்கிய அறிவித்தல்!!!

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நேர்முக தேர்விற்கு வருகை தரும் பொழுது உறுதிப்படுத்துவதற்கான கடிதம் அல்லது சத்தியகடதாசி கட்டாயம் எடுத்து வர வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அறிவுறுத்தியுள்ளார். வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முக பரீட்சை எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் கல்வி அமைச்சில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு...

அபாராதத் தொகை 25 ஆயிரம் ரூபாய் 3 ஆயிரம் ரூபாவாக குறைப்பு!

வீதி விதிமீறல்கள் தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் அபாராதத் தொகையை 3 ஆயிரம் ரூபாவாக குறைப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாகன போக்குவரத்து சட்டங்கள் கீழான 3 கட்டகளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். தெரிவுசெய்யப்பட்ட 33 வீதி விதிமீறல்கள் தொடர்பில் அபராதத் தொகையை...

தொடர் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள்

யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வாசலில் கற்பூரம் ஏற்றியும் 108 தேங்காய் உடைத்தும் நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் போராட்டம் நடத்தினர். யாழ். பல்கலைக்கழக ஊழியர்களும் தமது பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் சமீப நாட்களாக முன்னெடுத்து வருகின்றனர். நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட...
Loading posts...

All posts loaded

No more posts