Ad Widget

வடமாகாணத்தில் 246 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

வடமாகாணத்தில் 246 ஆசிரியர்கள் வருடாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என வடமாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு பாடசாலையில் 5 வருடங்கள், அதற்கு மேல் சேவையாற்றியவர்களுக்கு இவ்வாறு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டில் 246 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி வலயத்தில் 53 ஆசிரியர்களும், மடு வலயத்தில் 35 ஆசிரியர்களும், மன்னார் வலயத்தில் 14 ஆசிரியர்களும், முல்லைத்தீவு வலயத்தில் 27 ஆசிரியர்களும், துணுக்காய் வலயத்தில் 35 ஆசிரியர்களும், வவுனியா வடக்கில் 38 ஆசிரியர்களும், வவுனியா தெற்கில் 12 ஆசிரியர்களும், தீவகம் 29 ஆசிரியர்களும், வலிகாமம் 1 ஆசிரியரும், வடமராட்சி 1 ஆசிரியரும், தென்மராட்சி 1 ஆசிரியருமாக மொத்தம் 246 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான இடமாற்ற நடைமுறை 6 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர யாழ்ப்பாணம் கல்வி வலயத்தைச் சேர்ந்தவர்களும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். அவர்களுக்கான இடமாற்றல் தெரிவுகள் நடைபெற்று மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts