மனைவியைக் கடுமையாகத் தாக்கிய கணவன் விளக்கமறியலில்

கோப்பாயில் மனைவியைக் கடுமையாகத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிபதி சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார். குடும்பத் தலைவர் ஒருவர் அவரது மனைவியைத் தாக்கியமையைத் தொடர்ந்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு செய்திருந்தார். அம்முறைப்பாட்டின் அடிப்படையில் கணவனைக் கைது செய்த பொலிஸார் யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய...

ரணிலுக்கு ஆதரவு வழங்குமாறு டக்ளஸ் தேவானந்தாவிற்கு மிரட்டல்? : வெளிவரும் பரபரப்புத் தகவல்கள்

இலங்கை அரசியலில் பல்வேறுபட்ட சர்ச்சைகளை ஏற்படுத்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மிரட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக்...
Ad Widget

ரணிலின் திடீர் முடிவு! – பரபரப்படையும் தென்னிலங்கை

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று நேற்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. ரணிலுக்கு எதிரானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்...

ஜப்பானில் இலங்கை இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு!

ஜப்பானில் தொழில் வாய்ப்பிற்கான தொழில்நுட்ப பயிற்சியாளர்களை ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் தற்பொழுது இலங்கை அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் ஐ.எம்.ஜப்பான் நிறுவனமும் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டதற்கமைவாக குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மொழித் தேர்ச்சியில் ஜே.எல்.பி.ரி.4 அல்லது என்.ஏ.ரி.4 என்ற தரத்துடனான கல்விச் சான்றிதழைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு பணியாளர் சேவைக்கான தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படும்...

முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தார் நடிகர் கருணாஸ்

ஈழ தமிழ் மாணவர்களுக்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்காக தென்னிந்திய நடிகர் கருணாஸ் இன்று யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்தார். இதன்போது பல்கலைக்கழத்திற்காக அடிக்கல்லை நாட்ட வருமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு கருணாஸ் அழைப்பு விடுத்துள்ளார். இன்றைய தினம் யாழ்.வந்த நடிகர் கருணாஸ் காலை 9.30 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்து பேசினார். சுமார்...

ஏப்ரல் 16 – 30ஆம் திகதி வரை பட்டதாரிப் பயிலுனர்களுக்கான நேர்முகத் தேர்வு

பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களாக 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 30ஆம் தகதி வரையில் ஒவ்வொரு மாவட்டச் செயலகங்களிலும் நடைபெறவுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் இதற்கான அழைப்புகள் பட்டதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பத்திரிகை விளம்பரங்களின் ஊடாக கடந்த 06.08.2017 முதல் 08.09.2017 வரையான...

530 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம், 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ளது

வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள 530 ஏக்கர் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுக்கு 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ள நிலையில், அதனைக் கொடுத்து அக் காணிகளை மீட்பதுக்கு அமைச்சரவைப் பத்திரங்களை தமது அமைச்சு தயாரித்து வருவதாக மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார். யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் மீளக் குடியேறிய கடற்தொழிலாளர்களுக்கு உதவித்...

மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு கடூழிய சிறை!!

வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில்; மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார். வவுனியா நெடுங்கேணியில் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்த சிறுமி 2014ஆம் ஆண்டளவில் சாதாரண தர பரீட்சைக்காக பரீட்சை வினாத்தாள்களைக் கோரியுள்ளார். இந்நிலையில், குறித்த சிறுமியை வீட்டுக்கு வரவழைத்த...

முல்லைத்தீவுக்கு சென்று கனவயீர்ப்பில் ஈடுபட வடமாகாண சபை தீர்மானம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாயபுர மற்றும் வெலிஓயா, கிதுள் ஓயா பகுதிகளில் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை வடமாகாண சபையினர் முன்னெடுக்க வடமாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. வடமாகாண சபையின் 120 வது விசேட அமர்வு...

சுதந்திர தமிழீழம் மலர்வதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை: சிவாஜிலிங்கம்

சுதந்திர தமிழீழம் மலர்வதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், எச்சரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு நேற்று (வியாழக்கிழமை) வடமாகாண சபையில் நடைபெற்றது. இதன்போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர்...

புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு போக்குவரத்து சபையில் முன்னுரிமை

இலங்கை போக்குவரத்து சபையில் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றது. இவற்றுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளும் விண்ணப்பிக்கலாமென, போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளின் விவாதம் இடம்பெற்றது. இதன்போது புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு...

சுமந்திரனின் விசேட நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட ஆய்வுகூடம், பேருந்து தரிப்பிடம் என்பன அடித்து நொறுக்கப்பட்டுள்ளது!!

யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பேருந்து தரிப்பிடம் என்பன கடந்த புதன்கிழமை(04) இரவு விஷமிகளால் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் விசேட நிதி ஒதுக்கீட்டில் கல்லூரி மாணவர்களின் சாதனைகளைப் பறைசாற்றும் புகைப்படங்களை உள்ளடக்கிப் பத்து இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட...

வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் அங்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள் முகாம்கள் அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். பலாலி விமான நிலையத்திற்கு அண்மைய காணிகள், வறுத்தலைவிளான், கட்டுவன் சந்தி அச்சுவேலி வீதி, கட்டுவன்- மயிலிட்டி வீதி அதனை சுற்றியுள்ள காணிகள், மயிலிட்டி...

“சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்களை அழைத்துச் சென்றதைக் கண்டேன்” கொலை வழக்கில் பெண் சாட்சியம்

“சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன். சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று பார்த்தேன். எனினும் இளைஞர்கள் இருவரும் வெளியே வரவில்லை” இவ்வாறு சிறுப்பிட்டி இளைஞர்களைக் கடத்திக் கொலை செய்யப்பட்ட இராணுவத்துக்கு எதிரான வழக்கில் பெண் ஒருவர் சாட்சியமளித்தார். யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு...

பாடசாலைகளுக்கான விடுமுறை ​​அறிவிப்பு

அனைத்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு, ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு 2 ஆம் தவணை ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

வடமராட்சி, வல்வெட்டித்துறை கடற்கரையில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் நேற்று (04) மாலை மீட்கப்பட்டதுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். கம்பர்மலையைச் சேர்ந்த 76 வயதுடைய துரைசிங்கம் அருந்தவம் என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் அவரும் மகளும் பேரப்பிள்ளைகளுமே இருந்தனர். நேற்று (04) காலை 9 மணியளவில் மகள் வெளியில்...

‘கொடுத்தது போல் மீண்டும் பறிக்க முடியும்’ – இராணுவத் தளபதி எச்சரிக்கை!!

“இந்த வீடுகள் மற்றும் வசதிகளை உங்களுக்கு வழங்குவதை போன்று மீண்டும் எங்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்” என இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார். தெல்லிப்பளையில், ‘நல்லிணக்கபுரம்’ என பெயர் சூட்டப்பட்ட கிராமத்தில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த வார்த்தையை...

ஐ.நா. நம்பாத இலங்கை அரசை நாமும் நம்ப தயாரில்லை: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

மாறி மாறி ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசாங்கங்களை இனியும் நம்புவதற்கு நாம் தயாராக இல்லை என வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 405ஆவது நாளாக நேற்று (புதன்கிழமை) தங்களது போராட்டத்தை தொடர்ந்த உறவுகள், கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டிருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். மேலும், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல்...

விடுதலைப்புலிகள் கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்!!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாம் வெற்றிப்பெற்றும் எமது அரசியல் செயற்பாடுகளில் புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் காணப்படுவதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) யாழில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “முன்னாள் போராளிகளாகிய நாம் கடந்த காலமாக எமது உரிமைகளுக்கான போராடி...

நம்பிக்கையில்லா பிரேரணை – பிரதமர் ரணில் அமோக வெற்றி

மகிந்த அணியினரால் கொண்டுவரப்பட்ட அவநம்பிக்கைப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் ஊடாக, நாடாளுமன்றம் பிரதமரது அதிகாரத்தை மீள ஸ்தாபித்துள்ளது. நேற்றையதினம் இந்த பிரேரணை மீதான விவாதம் 12 மணி நேரமாக இடம்பெற்றிருந்தது. இதனை அடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில், 46 மேலதிக வாக்குகளை அவநம்பிக்கை பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும், எதிராக 122 உறுப்பினர்களும் வாக்குகளைப் பயன்படுத்தி...
Loading posts...

All posts loaded

No more posts