- Sunday
- May 10th, 2026
“ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச்சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக...
நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். “மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக மீண்டும் இன்று நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர் இனிமேலும் பிரதமராகப் பதவி வகிக்க முடியாது, உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவரது அமைச்சரவை இனிமேலும் பதவியில் இருப்பதற்கு அருகதை இல்லை” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வுகள் 19ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வுகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தொடர்ந்து நேற்று முன்தினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. ஆனால், அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகள் நேற்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது....
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா மீது மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரச தரப்பினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் இவ்வாறு மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிலர் குழப்பம் விளைத்து மோதலில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைக்கு வழங்கப்படுகின்ற சத்துணவு திட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக போலியான குற்றச்சாட்டை முன்வைத்தமைக்கு எதிராக வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, அவ்விடத்திற்கு வருகை தந்த சிலர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களோடு...
ஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.இந்தத் துயரச் சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் ( 14.11.2018) இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த குறித்த தாய் திருமணமாகி நீண்டகாலமாக குழந்தைப் பாக்கியம் கிடைக்காததால் கடந்த வருடம் இந்தியாவில் சிகிச்சை பெற்று கருத்தரித்த நிலையில் நாடு திரும்பியுள்ளார். இவருக்கு பிரசவ...
தற்போதைய அரசியல் சூழ்நிலை பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் வடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம் எனவும முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்குள் நேற்று (வியாழக்கிழமை) நிலவிய குழப்பகரமான சூழல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”1987ஆம் ஆண்டில்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைவாக நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைப்பை அடிப்படையாக கொண்டு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளது. அதன்படி ஒரு லீட்டர் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் ஒரு லீட்டர் 07...
தமிழகத்தில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள கஜா புயல் தற்போது இலங்கையில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையின் வடக்கு, வடமேற்கு திசையில் காங்கேசன் துறையிலிருந்து சுமார் 75 கிலோ மீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கஜா புயல் அடுத்த 6 மணித்தியாலங்களுள் மேற்கு நோக்கி நகர்வதுடன் படிப்படியாக குறைவடையுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது....
நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டுமென்றால் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்திய கடதாசிகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாதாயின், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஒருவரின் பெயரினை முன்மொழியுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை...
“கஜா“ புயல் காரணமாக வடமாகாண பாடசாலைகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே-இன் அலுவலகத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள கஜா புயல் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கரையை கடக்கும் என எதிர்வுகூறப்பட்ட நிலையில் வடக்கின் பல பகுதிகளில் தாக்கம் செலுத்தும் என எதிர்வுகூறப்பட்டிருந்தது. அதற்கமைய, யாழின்...
அரியாலை தொடருந்துப் பாதையில் பயணித்த கார், கடுகதி தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த குளிரூட்டப்ட்ட கடுகதி தொடருந்துடனேயே இந்த விபத்து இடம்பெற்றது. காரை கராஜூக்கு கொண்டு சென்றுவிட்டு திரும்புகையிலேயே குடும்பத்தலைவர் உயிரிழந்தார். தெல்லிப்பளையைச் சேர்ந்தவரே...
நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினருக்கு மத்தியில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட சந்திப்பொன்றை நடத்தினார். அதன் பின்னர் எதிர்வரும் 21ஆம் திகதிவரை நாடாளுமன்றை ஒத்திவைப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பிற்கும் இடையில் அமளி துமளி ஏற்பட்ட...
ஐக்கிய தேசியக் கட்சி அரசை அமைத்தவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் என ரணில்விக்கிரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்”...
4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை 21ஆம் நோயாளர் விடுதியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. குழந்தைக்கு அந்தரங்க உறுப்பிலிருந்து குருதி வெளியேறியுள்ளது. அதனால் குழந்தை சட்ட மருத்துவ அதிகாரியின்...
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து தொடர்ந்தும் தன்னால் பணியாற்ற முடியாது என்பதால், அது சம்பந்தமாக சிந்தித்து பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை...
அவரது அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பது நிருபணமாகியுள்ள நிலையில்,நாடாளுமன்றத்தில் இன்று தாம் ஆளும் கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளதுடன், மகிந்த ராஜபக்சவை பிரதமராக சிறப்பு உரையாற்ற அனுமதிக்கப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் குழப்பங்கள் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. ”புதிதாக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனது பிரதமர் பதவிக்கு ஆபத்து வருமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னரே உணர்ந்திருந்ததாக, யாழ்.பல்கலைக்கழக சட்டபீட தலைவரும் சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார். அதனாலேயே அரசியலமைப்பில், 19ஆம் திருத்தத்தினைக் கொண்டு வந்து ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரங்களை, ரணில் விக்ரமசிங்க குறைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு...
யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வடமராட்சியினை வசிப்பிடமாக கொண்ட இரத்தினம் ரவீந்திரன் (வயது 53) என்பவரே இச்சம்பவத்தில் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டில் நீரிறைக்கும் மின் மோட்டார் பழுந்தடைந்தமையால் அதனை திருத்துவதற்கு அவர் முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில்...
Loading posts...
All posts loaded
No more posts
