Ad Widget

ரணிலை பிரதமராக்குவதற்கு தயார்!- ஜனாதிபதி மைத்திரி

நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டுமென்றால் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்திய கடதாசிகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாதாயின், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஒருவரின் பெயரினை முன்மொழியுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை அறிவித்ததை தொடர்ந்து நாட்டின் அரசியலில் பெரும் குழப்பநிலை உருவாகியது.

இதனால் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுவையும் மஹிந்த ராஜபக்ஷவையும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

அந்தவகையில் தற்போது மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு வழங்கியுள்ளனர். மேலும் ரணிலுக்கு அதிகளவு ஆதரவு காணப்படுவதாக கூறப்படுகின்றது.

இருப்பினும் ரணிலை பிரதமராக ஒருபோதும் நியமிக்க போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் 113 பேரின் சத்திய கடதாசிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts