- Sunday
- May 10th, 2026
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளில் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தலைவர் பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப் பிறந்தநாளை நிகழ்வை தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பலரும் மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந் நிலைமையிலையே நள்ளிரவு வேளையில் பிறந்த நாள் கேக்...
கடந்த 26 ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை தற்போது மாணவர்கள் மத்தியிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நல்லாட்சி அரசாங்கத்தால் மாணவர்களுக்கான சீருடைக்கு பதில் வவுச்சர் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால் புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர் முறைக்கு பதிலாக மீண்டும்...
தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட முக்கிய ஆவணங்களுடன் தனது மகனது புகைப்படத்தினைத் தாயொருவர் தேடியலைந்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களின் உருவப் படங்களை அவர்களது பெற்றோருக்கு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் மட்டக்களப்பு வெல்லாவெளியில் நடத்தப்பட்டது. இதனையறிந்த மாவீரரின் தாயொருவர் வீரச்சாவடைந்த...
வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கு யாழ்.மாவட்டத்தில் தொழில்வாய்ப்பு வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நடமாடும்சேவை ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் யாழ். மாவட்ட அரச...
யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர் அஞ்சலி நிகழ்வும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் அமைந்துள்ள வை.எம்.சி மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில்...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் ஆயிரத்து 300 ஹெக்ரெயர் நிலப்பரப்பு தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. எனினும் இது வரை 19 ஆயிரம் ஹெக்ரெயருக்கும் அதிகளவிலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுவிக்கக்கூடிய காணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்த ஆய்வுகள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்...
சிறிய மற்றும் நடுத்தர வர்க்க முயற்சியாளர்களுக்கு ஐந்து வருட வரி விலக்கு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 28 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக வரி வீதம் குறைக்கப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. இதன்போது, ஏற்றுமதிக்கான...
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு சுமந்திரனே தலைவர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அமெரிக்கா எனவும் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்கப்போவதில்லை எனவும், கிழக்கில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விலைக்கு வாங்கியதுபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மஹிந்த ராஜபக்ஷ விலைக்கு வாங்கியிருக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி கோப்பாயில் நடைபெறவிருந்த மாவீரர் நிகழ்வில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், இலச்சினைகள் என்பனவற்றை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்...
புத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்த கோரி, யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிளின் புத்தளம் உள்ளிட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புத்தளத்தில் குப்பை...
மக்கள் பிரதிநிதிகள் மக்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ள கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து...
தமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடமைகளை இல்லாதாக்கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையானது என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி வடக்கு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் என்றபோதிலும் அரசியல்...
முல்லைத்தீவு காவல்துறையினர் இளைஞர்களிடம் கஞ்சா வாங்கி வருமாறு கோரிய போது அதனை மறுத்த மூன்று இளைஞர்கள் மீது காவல்துறையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில் , முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் கடந்த 19ஆம் திகதி இரவு 09 மணியளவில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் எம்மை மறித்து ,...
”பிரதமர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரம் பெறப்பட வேண்டும். மாறாக லஞ்சமும் மோசடியும் இந்த சபையை ஆள தீர்மானிக்க முடியாது” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே...
இன நல்லிணக்கத்தின் அடையாளமாக யாழ்ப்பாணம், நாக விகாரை வளாகத்துக்குள் ஆகம விதிமுறைகளுக்கு அமைய கோபுரங்களுடன் கூடிய இந்து ஆலயமொன்றை நிர்மாணிக்கின்ற வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பிரதம விகாராதிபதி மீகஹ ஜந்துரே ஸ்ரீவிமல தேரர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மீகஹ ஜந்துரே ஸ்ரீவிமல தேரர் இதனை தெரிவித்துள்ளார். அவர்...
வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை தடைசெய்வதற்குரிய நீதிமன்ற உத்தரவினை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர் பொலிஸ்மா அதிபரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர், “நாட்டில் தீவிரவாத அமைப்பொன்றை...
யாழில் அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் சுன்னாக பொலிஸார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்து, கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளதாவது, “கடந்த 19ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் நானும் எனது...
தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சபரி மலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது எனவும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொம்பனித்தெரு ஸ்ரீ ஹரி ஹர சுதன் ஐயப்ப யாத்திரைக் குழுவினருக்கும், அமைச்சர்...
தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி என்பன ஒன்றை ஒன்று மோதிக் கொண்டதில் பூசகர் ஒருவர் உயிரிழந்தார். துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் பொன்னாலைப் பாலத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றது. காரைநகரில் உள்ள ஆலயம் ஒன்றில் பூசையை முடித்து வடலியடைப்பிலுள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த பூசகர், கடற்றொழிலுக்குச் சென்றுவிட்டு...
Loading posts...
All posts loaded
No more posts
