Ad Widget

யாழில் வெளிமாவட்டத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை: டக்ளஸ்

வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கு யாழ்.மாவட்டத்தில் தொழில்வாய்ப்பு வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நடமாடும்சேவை ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் யாழ். மாவட்ட அரச அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன் போது, வட கிழக்கில் யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் இழப்புகளை சந்தித்தவர்களுக்கான நஷ்ட ஈடுகளை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டது.

அதற்காக யாழ் மாவட்டத்திலுள்ள பதினைந்து பிரதேச செயலக பிரிவுகளிற்குட்பட்ட சுமார் அறுநூறிற்கும் மேற்பட்ட மக்கள் இன்றைய தினம் தம்மை பதிவு செய்துள்ளனர்.

இவர்களுக்கான இழப்பீட்டுத்தொகையினை விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றினூடாக ஒரு மாதத்திற்குள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

Related Posts