வேலையற்ற பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படுகிறது. வேலையற்ற பட்டதாரிகள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரச அதிபரிடம் கையளித்தனர். இன மத பேதம் இல்லாமல் நல்லாச்சியை நடாத்தும் அரசு எந்த விடயத்திலும் பேதமை காட்டக்கூடாது என வேலையற்ற பட்டதாரிகள்...

மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்!!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் (செப்டம்பர் 22ஆம் திகதியிலிருந்து 24ஆம் திகதி வரை) மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென், சப்ரகமுவ,மத்தியமற்றும்...
Ad Widget

அரச துறை 28 தொழிற்சங்கங்கள் சுகவீன லீவு- பொதுச் சேவை பாதிப்பு

அரச துறையின் 28 தொழிற்சங்கங்கள் சுகவீன விடுப்புப் போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளன. இதனால் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை உள்பட பொதுச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச முகாமைத்துவ உதவியாளர் சங்கம், அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கள் உள்பட 28 தொழிற்சங்கங்கள் இன்று திங்கட்கிழமை சுகவீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

வடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்

வட மாகாணத்தில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக வீதிப்பாதுகாப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரை இந்த வீதிப் பாதுகாப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இப்பாதுகாப்பு வாரத்தில் பொதுமக்களுக்கு அறிவூட்டும் வேலைத்திட்டங்கள் பல மேற்கொள்ளப்படவுள்ளதோடு, வட மாகாண ஆளுநர் செயலகம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இது...

தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் – தமிழ் மக்கள் பேரவை ஆராய்வு

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழு கூடி ஆராய்ந்துள்ளது. தேர்தல் தொடர்பாக பொதுக் கலந்துரையாடலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் நடைபெற்றது. இதில்...

சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்!!

ஆசிரியர் அதிபர் போராட்டத்த்திற்கு மார்ச் 13 நடவடிக்கைக்கு இதுவரை தீர்வு இல்லை. எனவே 6 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 26, 27 ஆகிய இரு தினங்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் சுகயீன விடுமுறை தொழில் சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் 26 ஆம் திகதி கொழும்பு கோட் புகையிரத்திற்கு முன்னாள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள்...

இராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்!

இராணுவத் தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு நேற்று(வெள்ளிக்கிழமை) விஐயம் செய்திருந்தார். இந்த விஐயத்தின் போது வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க்கந்தன் ஆலயத்தில் அவர் விசேட பூஜைவழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நல்லை ஆதீனத்திற்கும் சென்ற அவர், ஆதீன குருமுதல்வர் ஞானதேசிக பராமாச்சாரிய சுவாமிகளைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். யாழ் நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளில்...

போலி நகைகளை அடகு வைத்து மோசடி – வங்கி ஊழியர்கள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்!

தனியார் வங்கி ஒன்றின் சங்கானை கிளையில் போலி நகைகளை அடகு வைத்து 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கியின் உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் வாடிக்கையாளர்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், தலைமறைவாகியுள்ள முகாமையாளரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா பிறப்பித்துள்ளார்....

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்தளபதியிடம் வலியுறுத்தல்!

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஆளுநர் செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. போருக்கு பின்னரான வடமாகாணத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைககள் குறித்து இராணுவ தளபதி, ஆளுநரிற்கு அவர்களுக்கு இதன்போது விளக்கமளித்ததுடன் தனது தலைமைத்துவத்தின் கீழ் அதனை...

இலஞ்சம் வாங்கிய யாழ்.இந்து கல்லூரி அதிபருக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் வாங்கிய யாழ்.இந்து கல்லூரி அதிபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அவரை வரும் ஒக்டோபர் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஒக்டோபர் 3ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அவரை முற்படுத்த நீதிமன்றம் அனுமதியளித்தது. மாணவர் அனுமதிக்கு கையூட்டுப்...

யாழ்.இந்து கல்லூரி அதிபர் கைது!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். கையூட்டுப் பெற்றுக்கொண்ட போதிய ஆதாரங்களுடன் இன்று நண்பகல் அவர் கைது செய்யப்பட்டார் என்று ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் அனுமதிக்கு 50...

யாழ். பல்கலைக்கழக ஊழியர்களால் பேரணி முன்னெடுப்பு

யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். தொடர்ந்து நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த பேரணி இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து பேரணியாக வந்த ஊழியர்கள் பிரதான நுழைவாயிலை வந்தடைந்தனர். அங்கிருந்து தொடர்ந்து பரமேஸ்வரா சந்திக்கு சென்ற நடைபவனி பலாலி...

தேசிய மட்ட கணித புதிர் போட்டியில் வடக்கு மாகாணம் முதலிடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு தேசிய மட்ட கணித புதிர் போட்டியில் கனிஸ்ட பிரிவில் வட. மாகாண அணியினர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கான தேசிய மட்ட கணித புதிர் போட்டி நேற்று (வியாழக்கிழமை) கொழும்பு மிபேயிலில் நடைபெற்றது. கனிஸ்ட பிரிவினருக்கான போட்டியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஜி.சாகித்தன்,...

அரசியல் மட்டுமன்றி மனித நேயத்தையும் மீள கட்டியெழுப்ப வேண்டும் – சுரேன்

இந்த தேசத்தை மீளவும் கட்டியெழுப்பும் போது அரசியல் மட்டுமன்றி மனித நேயத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரச புகைப்பட ஆலோசனைக்குழு, கலாசார அமைச்சு, இலங்கைக் கலைக்கழகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலான அரச புகைப்பட கண்காட்சி இன்று யாழில் ஆரம்பிக்கப்பட்டது. இதனை கலாநிதி சுரேன்...

யாழில் திறக்கப்பட்ட பிரமிட் நிறுவனத்தை மூட யாழ்.மாநகர சபையில் பிரேரணை

குளோபல் லைவ் ஸடரைல் லங்கா நிறுவனத்தினை உடனடியாக மூடுமாறும் அவ்வாறு மூடமறுக்கும் பட்சத்தில் தங்கள் மீது சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த நிறுவனத்தற்கு அடுத்த மூன்று வேலை நாட்களுக்குள் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன் பிரேரணையை முன் மொழிந்துள்ளார். யாழ்.மாநகர சபை...

யாழ். பல்கலை ஆட்சேர்ப்பு விடயத்தில் இன, பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை – ஹக்கீம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு ஆட்சேர்ப்பு விடயத்தில் இன, பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை என நீர்வழங்கல் நகர திட்டமிடல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றம் கூடியது. இதன்போது நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு புதிதாக ஆட்சேர்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் டக்ளஸ்...

பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு எதிராக நடவடிக்கை!!!

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்துக்குள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு மீது மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக நீதிமன்றக் கட்டடத்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தில் அறைந்ததுடன், அவர் மீது உமிழ் நீர் துப்பி தனது ஆத்திரத்தை...

திலீபனின் நினைவு தூபி புனரமைப்பு – யாழ். மாநகரசபையில் தீர்மானம்

தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியைப் புனரமைப்பதற்கு யாழ். மாநகரசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகர சபையின் மாதாந்த அமர்வின் ஒத்திவைப்பு அமர்வு, இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களிலும் யாழ்ப்பாண மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும்...

யாழில் பாடசாலை அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை – கல்வி அமைச்சு

யாழிலுள்ள பிரபல பாடசாலைகளின் அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பதற்கு பணம் கோரினார்கள் எனும் குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்கள் என நேற்றைய தினம் மாலை இணையத்தளங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன. இந்நிலையில், இந்த...

கூட்டமைப்பிடம் ஆதரவு கோரும் அரசியல் தலைவர்களுக்கு சி.வி.கே. முக்கிய அறிவுறுத்தல்!

தமிழர்களுக்கு தீர்வு வழங்குவோம் என கூறி கூட்டமைப்பிடம் ஆதரவு கோருபவர்கள், எந்த விடயத்தில் எவ்வாறான தீர்வுகளை வழங்குவார்களென பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்...
Loading posts...

All posts loaded

No more posts