Ad Widget

சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்!!

ஆசிரியர் அதிபர் போராட்டத்த்திற்கு மார்ச் 13 நடவடிக்கைக்கு இதுவரை தீர்வு இல்லை. எனவே 6 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 26, 27 ஆகிய இரு தினங்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் சுகயீன விடுமுறை தொழில் சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் 26 ஆம் திகதி கொழும்பு கோட் புகையிரத்திற்கு முன்னாள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்க செயலாளர் மகேந்திர ஜெயசிங்க தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் ஊடகவியலாளர் மகாநாடு மட்டக்களப்பு தாமரைக்கேணியல் அமைந்துள்ள தொழிற்சங்க காரியாலயத்தில் நேற்று இரவு இடம்பெற்றது. இதன் போது சங்கத்தின் செயலாளர் மகேந்திர ஜெயசிங்க, உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப், கிழக்கு மாகாண தலைவர் பொன்னையா சதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் 26, 27ஆம் திகதி முன்னெடுக்கப்படுகின்ற தொழிற்சங்க போராட்டத்தை தெளிவுபடுத்துவதற்காக இன்று மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட பொழுது அங்குள்ள ஆசிரியர்கள் விசேடமாக கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கூறினார்கள்

(1) 22 வருடங்களாக இடம்பெறும் பி.சி.பெரோ சம்பள முரண்பாட்டை நீக்கி ஆசிரியர் அதிபர் சம்பளத்தை அதிகரி.
(2)அரசியல் பழிவாங்கல் என்னும் போர்வையில் இடம்பெறும் அனைத்து நிபந்தனைகளையும் வரப்பிரசாரங்களையும் நீக்கு.
(3) கடதாசி நிரப்புதல் உட்பட நெருக்கடி தரும் மேலதிக வேலைகளை நிறுத்தி ஆசிரியர்களை மாணவர்களுக்கு கற்பிற்பதற்கு இடம்கொடு,
(4)பெற்றோரிடமிருந்து பணம் அறிவிடுவதை நிறுத்தி மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதம் ஒதுக்கு
(5) 2016 இருந்து இல்லாமற் செய்யப்பட்ட ஓய்வூதிய சம்பளத்தை மீண்டும் வழங்கு
(6) பிரிவினா மற்றும் நிதியுதவி பெறும் பாடசாலை ஆசிரியர்களுக்கு அரச ஓய்வூதிய சம்பளத் திட்டத்தை வழங்கு போன்ற 6 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்ம் இடம்பெறவுள்ளது.

இந்த ஆசிரியர் அதிபர் சேவைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக போராட்டம் தொடர்பாக பல்வேறு போலிப் பிரச்சாரங்களை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். எமது கோரிக்கைகள் தொடர்பாக இதுவரை தற்போதைய ஆட்சியாளர்கள் செவிமடுக்காதுள்ளனர்.

மக்களின் இலட்சக்கணக்கான பணத்தை செலவிட்டு ஆசிரியர் அதிபர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதாக பக்கம் பக்கமாக 3/ 2016 சுற்றறிக்கையின்படி அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டதேயன்றி ஆசிரியர் அதிபர் முரண்பாட்டை நீக்குவதற்கானதல்ல.

1994 ல் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க போராட்டத்தின் ஊடாக வெற்றி கொண்ட தொடர்சேவை சம்பளம் 1997 பி.சி. பெரோ சம்பள ஆணைக்குழுவினால் இல்லாமல் செய்யப்பட்டதோடு அதன் பின்னர் வெளியிட்ட சம்பள சுற்றறிக்கையினூடாக சம்பள முரண்பாடு நீக்கப்பட் வேண்டிதற்கு பதிலாக மேலும் தீவிரமடைந்து 1997 ல் தொடங்கிய ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடானது தொடர்ந்த வண்ணமுள்ளது

கல்வியின் உண்மையான நோக்கை பின்தள்ளிவிட்டு பரீட்சையை மையமாகக் கொண்ட போட்டிக்கு அதிபர்களையும் பின் தள்ளிவிட்டு கடதாசிகளை நிரப்புவதுட்பட பல்வேறு வகையான மேலதிக வேலைகளையும் ஆசிரியர்கள் மீது சுமத்துவதனூடாக ஆசிரியர்கள் பாடசாலைக்குள் கடுமையான மன உளைச்சலுக்கு ஊள்ளாகின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

கல்விக்கு தேவையான நிதியை ஓதுக்காது பாடசாலையை கொண்டு நடாத்தும் செலவை பெற்றோர் மீது திணிக்கப்பட்டுள்ளது. 2016.01.01 திகதிக்கு பின்னர் அரச சேவையில் இணைந்த ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனைத்து ஆசிரியர்கள் அதிபர்கள் தொழிற் சங்கங்களும் ஒன்றினைந்து வெற்றிபெறும் வரை முன்னெடுத்துச் செல்வதை தவிர வேறு வழிகிடையாது. எனவே இந்த போராட்டத்தினத்தில் ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலைக்கு சமூகமளிக் தேவையில்லை இந்த நடவடிக்கைகளுக்கு 31 ஆசிரியர் தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவிதுள்ளதுடன் இந்த தொழிற் சங்கங்கங்கள் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும் என்றார்.

Related Posts