ஆனையிறவில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு-இருவர் காயம்

ஆனையிறவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (புதன்கிழமை) அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த இரண்டு லொறிகளுடன் கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த ஹயஸ் ரக வான் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் வானின் சாரதி...

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரில் ஆராய்ந்தார் ஆளுநர்!

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேரில் சென்று ஆராய்ந்தார். பலாலி விமான நிலையத்திற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த ஆளுநர், விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தார். அபிவிருத்தி பணிகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது குறித்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இம்மாதம் 16ஆம் திகதி அல்லது அதனை...
Ad Widget

புதிய தேர்தல் கூட்டணி – மைத்திரியை சந்தித்தார் சஜித்!

புதிய தேர்தல் கூட்டணி ஒன்றினை அமைத்துக் கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்றிரவு(செவ்வாய்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. புதிய தேர்தல் கூட்டணி ஒன்றினை அமைப்பது குறித்து பேச வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித்...

ஜனாதிபதி தேர்தலுக்கு 13 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்!!

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதுடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை, 13 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனரென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று (30) மட்டும் நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். கெடகொட கமகே ஜயந்த பெரேரா, சிறிபால அமரசிங்க, அஜந்தா விஜேசிங்க பெரேரா, அபரெக்கே புஞ்ஞானந்த தேரர், வெலிசரகே சமன்...

தமிழ் மக்கள் ஓரணியில் நிற்பதற்கான முயற்சியை தமிழத் தேசியக் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும் ; சிவாஜிலிங்கம்

தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நிற்பதற்கான முயற்சியை தமிழத்தேசியக் கட்சிகளோ அல்லது தமிழ் மக்கள் சார்ந்து செயற்படுகின்ற பொது அமைப்புக்களோ விரைந்து முன்னெடுக்கவேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ் மக்கள் ஓரணியில் நிற்பது தொடர்பில் பல கருத்துக்கள் வெளிவருகின்ற நிலையில் இதனை யார் முன்னெடுப்பது எனக் கேட்டபோதே அவர் இதனைத்...

காணாமலாக்கப்பட்ட சிறுவர்களை விடுவிக்குமாறு கோரி போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். கல்வியங்காடு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்றுகூடிய காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பேரணியாக காணாமல்போனோருக்கான அலுவலகம் வரை செல்லவுள்ளனர். அங்கு மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் பொது அமைப்புக்கள். பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு...

தமிழர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என சஜித் நினைப்பது தன்னைதானே ஏமாற்றிக் கொள்ளும் செயல் – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என சஜித் பிரேமதாச நினைப்பது தன்னைதானே ஏமாற்றிக் கொள்ளும் செயலுக்கு ஒப்பானது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு பதிலளிக்கும் வகையில் விக்னேஸ்வரண் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இதனை குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ பெரும்பான்மையான...

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!!

கொக்குவில் பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்த தாக்கியவர்கள் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியும் தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறும் கோரி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். இதற்கமைய யாழிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) அவர்கள் இந்த முறைப்பாட்டை பதிவு செய்தள்ளனர். அண்மையில் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் பட்டப்பகல்...

வாள்வெட்டுக்கு இலக்கான நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு!

யாழில் வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான இரும்பக உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு உயிரிழந்தார். கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக...

தொடரும் ரயில்வே தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. ரயில்வே தொழிற்சங்க ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவிற்கும் ரயில்வே தொழிற்சங்கத்திற்கும் இடையில் நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. எனினும், ஏற்றுக்கொள்ளக்கூடிய...

நீராவியடி விவகாரம் – யாழில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு அனைவருக்கும் அழைப்பு!!

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து சட்டத்தை கையில் எடுத்த ஞானசார தேரர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணி எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாழில் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் யாழ்....

அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாராகும் அதிபர் ஆசிரியர் சங்கங்கள்

சம்பள முரண்பாட்டுக்கு உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதன் காரணமாக அடுத்த மாதம் 7ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை 5 நாட்கள் தொடர் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர்...

ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது

ரயில்வே தொழிற்சங்கங்களின் தொழிற்சங்கப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்களைச் சேர்ந்த ஊழியர்களே இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வழமையாக 376...

சுன்னாகம் பிரதேச சபையின் பெண் உறுப்பினரின் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

வலி.தெற்கு பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ரவிக்குமார் யோகாதேவி வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் வீட்டு முற்றத்திலிருந்து உரையாடிக் கொண்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவர்களது உறவினர்கள் தெய்வாதீனமாக பாதிப்புகளின்றித் தப்பித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் உடுவில் கந்தேரோடை...

ஶ்ரீகஜன் தப்பியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

புங்குடுதீவுமாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவி காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. புங்குடுதீவு மாணவி...

நீராவியடி பிள்ளையாா் விவகாரம்: வடக்கில் ஆளுநா் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம்

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்தகேணிக்கு அருகில் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டமையை கண்டித்து வடக்கு மாகாண ஆளுநா் அலுவலகம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வட.கிழக்கு சிவில் அமைப்புக்களும் பொதுமக்களும் இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த கவனயீா்ப்பு போராட்டத்தினை நடத்தியிருந்தனா். இதன்போது ‘அரசே இன அடக்குமுறையை நிறுத்து’,...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தது நாம்!!, உரிமைகோருவது ஆனல்ட் – முன்னணி விசனம்

தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் மாநகர சபை நடத்தும் என்று முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அறிவித்த போதும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அவர் முன்னெடுக்கவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. நல்லூரில் தியாக தீபம் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வுக்கு வசதியாக யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் தூபிக்கு முன்பாக...

எரிகாயங்களுக்கு உள்ளான இளம் குடும்பப்பெண் சாவு!!

கடல் தொழிலுக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை தேநீர் வைப்பதற்காக மண்ணெண்ணெய் அடுப்பினை பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயினால் உடல் முழுவதும் எரி காயங்களுக்கு உள்ளான குடும்பப்பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். யாழ்ப்பாணம், பாசையூர் கடற்கரை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான நிரோசன் வின்சியா (வயது 26)...

இன்றும் தொடர்கிறது ரயில்வே ஊழியர்களின் போராட்டம்!

சம்பள முரண்பாட்டை நீக்குதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் தொடங்குகிறது. ரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த ரயில் சாரதிகள், உதவியாளர்கள் , ரயில் நிலைய அதிபர்கள் , சமிஞ்ஞையாளர்கள், பாதுகாவலர்கள் என 15 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த...

‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடுகிறார் சஜித்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் அவர், ‘அன்னம்’ சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசநேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார். சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நேற்று...
Loading posts...

All posts loaded

No more posts