ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது

ரயில்வே தொழிற்சங்கங்களின் தொழிற்சங்கப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்களைச் சேர்ந்த ஊழியர்களே இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வழமையாக 376 ரயில்கள் சேவையில் ஈடுபடும் நிலையில், நேற்றைய தினம் 20 ரயில் சேவைகளே இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts