Ad Widget

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரில் ஆராய்ந்தார் ஆளுநர்!

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேரில் சென்று ஆராய்ந்தார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த ஆளுநர், விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தார்.

அபிவிருத்தி பணிகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது குறித்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இம்மாதம் 16ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் பலாவி விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

எனவே 10ஆம் திகதிக்கு முன்னர் நிர்மாணப் பணிகளை முடிப்பதற்கு சிவில் விமான சேவைகள் அமைச்சினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பலாலி விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் நிர்மாணப் பணிகள் நூற்றுக்கு 70 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அதேபோன்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் வழங்கும் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் நிர்மாணப் பணிகள் 55 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts