- Saturday
- July 25th, 2026
இறைமக்களாகிய நாம் எமது தவக்காலம் நிறைவடைந்து புனித வாரத்தில் தடம் பதிக்கின்றோம். கிறிஸ்து இயேசுவின் பாடுகள் – இறப்பு – உயிர்ப்பு இன்றைய பயங்கரமான சூழலில் எமக்கு ஆழமான இறை விசுவாசத்தையும், இறைபராமரிப்பையும் உணர்த்தி நிற்கின்றது என்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு செய்தியிலேயே அவர்...
அனைத்துப் பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக வரும் மே 11ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஏப்ரல் 20ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் பரம்பல் காரணமாக முதலாம் தவணை விடுமுறை மே 10ஆம் திகதிவரை...
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களின் நிர்வாகத்தினர் பசியினால் துன்பப்படுபவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் இன்று (சனிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “தற்போது நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில்...
காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தும் சுவிஸ் போதகர் விமான நிலையத்தில் பொறுப்பில்லாமல் கூறிய பொய்யினால் யாழ். மாவட்டம் இன்று இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருக்கும் சமுதாய மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக 7 பேர் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இனிமேலும் யாழ்.மாவட்டம் பாதுகாப்பாக இருக்க...
கொரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள தாவடி பகுதியில் உள்ளவர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழில் இன்று (சனிக்கிழமை) மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி...
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு...
தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரம்பலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை முழுவதும் தொழிலை இழந்துள்ள தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி...
அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் வீதிகளில் பயணிப்போர் முகக்கவசம் அணிதல் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் வீதிகளில் பயணிப்போர் மற்றும் வாகனங்களில் பயணிப்போர் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில்...
கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் மற்றும் முடக்கபட்ட பகுதிகளில் மருந்தகங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் ஒன்லை மூலம் பெறப்படும் ஓடர்களுக்கு அமைய நடமாடும் மருந்து வழங்கலை முன்னெடுக்குமாறு கோவிட் -19 ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் அனைத்து மருந்தகங்களையும்...
சுதேச மருத்துவத் துறை உள்பட அனைத்து மருத்துவத் துறை உத்தியோகத்தர்களும் தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக (பாஸ்) பயன்படுத்த முடியும் என்று பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். இந்தத் தகவலை அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அத்தியாவசி சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் தமது அலுவலக அடையாள...
யாழ்ப்பாணம் உள்பட 6 மாவட்டங்களில் அறிகுறிகள் எதுவுமின்றி, மக்களோடு மக்களாக உள்ள கோரோனா தொற்றாளர்களைக் கண்டுபிடிக்க, பொது மக்களிடையே பரிசோதனைகளை முன்னெடுக்க சிறப்புச் செயற்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். கோரோனா பரவல் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் பொருட்டு...
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் N.H.சித்ரானந்த இதனைத் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமடையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமையவே இது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை...
பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பதின்ம வயது (17-வயது) மாணவன் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசாரணைகளின் பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் சந்தேகநபர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கை நெறியைத் தொடரும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவனே...
அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், இது தொடர்பான வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, 1 கிலோ கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லரை விலை 125 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டரிசி...
தொற்றா நோயினையுடைய நோயாளர்கள் தமது நோய்நிலை தீவிரமடைகின்ற சந்தர்ப்பங்களில் உடனடியாக 1990 என்கின்ற அவசர அம்புலன்ஸ் இலக்கத்தை தொடர்புகொண்டு வைத்தியசாலைக்கு செல்லுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவரால் வெளியிடப்பட்டுள்ள அவசர ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடமாகாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தற்போதைய காலகட்டத்தில் இருதய நோய்,...
“கோரோனா வைரஸ் தொற்றுடையவர்களுடன் நெருங்கிப் பழகிய குழுக்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்படும் முறைமை தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் அதற்கப்பாலும் இரு கட்டங்கள் முன்னோக்கி தொடர்புகளை கொண்டிருந்தவர்களை இனம்கண்டு பரிசோதிக்க வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். கோரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும்...
உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 185 கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் தமது பிரிவைச் சேர்ந்த சமுர்த்திப் பயனாளிகளை ஒரே இடத்துக்கு அழைத்து உதவித் திட்டத்தை வழங்க முற்பட்டுள்ளார். எனினும் விரைந்து செயற்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கூடியிருந்த மக்களை வீடுகளுக்குத் திருப்பினர். அத்துடன், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி மக்களுக்குரிய உதவித் திட்டங்களை அவர்களின் இடங்களுக்குச்...
மந்திகை – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசனை உடனடியாக இடமாற்றவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச மருத்துவ அதிகாரி சங்கத்தின் மருத்துவர்கள், தவறும் பட்சத்தில் தொழிற் சங்க நடவடிக்கையில் இறங்குவோம் என்றும் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாணக் கிளை அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பருத்தித்துறை...
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் இன்றைய தினமும்(வெள்ளிக்கிழமை) திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மருந்தகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதே வேளை நேற்றைய தினமும் நாடளாவிய ரீதியில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி...
ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வோர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும், அவ்வாறானவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தற்போது...
Loading posts...
All posts loaded
No more posts
