வாகனங்களுக்கான தண்டப்பணம் – செலுத்துவதற்கு நிவாரண காலம்

வாகனங்களுக்கான தண்டப்பணத்தை தபால் அலுவலகங்கள் மூலம் செலுத்துவதற்கான நிவாரண காலத்தை இலங்கை அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்தோடு இதனை செலுத்துவதில் ஏற்படும் தாமத்திற்கான மேலதிக தண்டப்பணமும் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: இலங்கை அஞ்சல் திணைக்களம் 2020.04.08 ஊடக அறிக்கை வாகனங்களுக்கான தண்டப்பணத்தை தபால் அலுவலகங்கள் மூலம் செலுத்துவதற்கான...

கோரோனா பாதிப்புக்காரணமாக பூநகரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் லண்டனில் உயிரிழப்பு!!

பூநகரியைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிப்பவருமான ஊடகவியலாளர் தில்லைநாதன் ஆனந்தவர்ணன், கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று (ஏப்ரல் 9) உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அவரது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். 30 வயதுடைய ஆனந்தவர்ண்ணன், பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதனின் மகனாவார். ரிரிஎன் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஊடகத்துறையில் ஆனந்தவர்ணனின் ஆளுமை மிகப்பெரியது ....
Ad Widget

தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு!!

நாட்டில் கோரோனா பரம்பலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக தொழிலை இழந்துள்ள தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊரடங்கு அனுமதிக்கு நிறுவனத் தலைவரின் கடிதம் அவசியம்!!

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக தேசிய அடையாள அட்டைப் பிரதி மற்றும் கடமையில் உள்ளார் என்பதனை உறுதிப்படுத்தும் திணைக்களம் – நிறுவனத் தலைவர் அல்லது பிரதித் தலைவரின் முத்திரையிடப்பட்ட ஒப்பத்துடன் கூடிய கடிதம் வைத்திருத்தல்வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித்...

தமது பிரிவு கிராம சேவையாளர், சமுர்த்தி – அபிவிருத்தி உத்தியோகத்தரை கண்டறிய இணையம் ஊடாக வசதி

நாட்டு மக்கள் அனைவரும் தமது பிரதேச செயலர் பிரிவில் கிராம சேவையாளர், சமுர்த்தி அலுவலகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கள உத்தியோகத்தர் ஆகியோரது விவரங்களைக் கண்டறிய பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில் அமைச்சின் இணையத்தளத்துக்குச் சென்று தமது பிரதேச செயலர் பிரிவில் கிராம சேவையாளர், சமுர்த்தி அலுவலகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும்...

யாழ்ப்பாணம் மாவட்ட எல்லையைக் கடக்க அதிகளவானோருக்கு பாஸ் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிருப்தி

யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு பயணிப்பதற்கு சுகாதார மருத்துவ அதிகாரிகளினால் அதிகளவானோருக்கு அனுமதியளிக்கப்படுகின்றன. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனையோருக்கு அனுமதியளிப்பதனைத் தவிர்த்து இறுக்கமான கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதற்கு மாகாண ஆளுநர், மாவட்டச் செயலாளர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன்...

48 வயதுடைய கோரோனா நோயாளி சாவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு

நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுப் பாதித்த 7ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார். தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு கல்கிசையைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

யாழ் பல்கலைக்கழக மாணவர்களிற்கு விசேட அறிவித்தல்!!

கொரோனா வைரஸ் பரவல் அபாயம் மற்றும் ஊரடங்கு காரணமாகத் தடைப்பட்டிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை, இணைய வழிக் கற்றல் முறைகளினூடாகத் தொடர்வதற்கான ஏற்பாடுகளைப் பல்கலைக் கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தற்போது கல்வி பயிலும் சகல பீடங்களினதும் இளநிலை மாணவர்களுக்குத் தேவையான இணைய வழிக் கற்றல் முறைமைகளைப் பதிவேற்றுவதற்கு வசதியாக...

தற்போதைய நடைமுறையை இன்னும் 14 நாட்கள் பின்பற்றினால் இலங்கையிலிருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்கலாம்!!

நாட்டில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை எதிர்வரும் 14 நாட்களுக்கும் பின்பற்றினால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து நோயாளர்களும் இனங்காணப்படுவர். அவர்கள் அனைவருக்கும் முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு குணப்படுத்தப்பட்டால் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை முற்றாக ஒழிக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். முதலாவது இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியின் படையினரால் சிலாபம்...

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் (06.04.2020) ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நாயாறு குருகந்த ரஜமகா விகாரை தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்த...

புத்தாண்டு சம்பிரதாயங்களை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்துங்கள் – ஜனாதிபதி செயலகம் வலியுறுத்து

புத்தாண்டு காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும் தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்தால் வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் புத்தாண்டு தினமான வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,...

யாழ். நகரில் மீண்டும் தீவிர சோதனை நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதையடுத்து யாழ்ப்பாண பொலிஸார் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். நாடுமுழுவதும் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் முன்னெடுத்துவரும் நிலையில் இந்த பரிசோதனை இன்று யாழ். நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, இதற்கு முன்னர் நாட்டின் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த...

வடக்கு மாகாணத்தில் 20 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கை கிடைத்தது!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேரிடம் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்கள் அனைவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். யாழ்ப்பாணம், அரியாலையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச்...

அனைவரதும் ஒரே எதிரி கொரோனா வைரசு – அதனை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர்

கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உலகில் அனைத்து நாடுகளும் கொருளாதார ரீதியில் பின்னடைவைக்கண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இனம் , மதம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது அனைவரதும் ஒரே எதிரி கொரோனா வைரசு அதனை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும்...

யாழ்ப்பாணத்தில் அத்தியவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை- யாழ். வர்த்தக சங்கத் தலைவர்

யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு வர்த்தகப் போக்குவரத்து தடைப்படாதவரை அத்தியவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படாது என யாழ். மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் ஜனக்குமார் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிவேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “இப்போதும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு குறையும் இல்லாமல் பொருட்கள் வந்துகொண்டிருக்கின்றன....

அனைத்து மருந்தகங்களையும் நாளை திறக்க அனுமதி!!

நாடுமுழுவதும் உள்ள மருந்தகங்களை நாளை (ஏப்ரல் 9) வியாழக்கிழமை திறப்பதற்கான அனுமதியை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை அனைத்து மருந்தகங்களும் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதற்கான புதிய முறைமை அறிவித்தது ஜனாதிபதி செயலகம்

ஊரடங்கு அனுமதிப்பத்திரம் (Curfew Pass) வழங்குவதற்கு புதிய நடைமுறையை கொண்டு வருவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மாவட்ட மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை அமைய ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை வழங்கும் அதிகாரம் நான்கு முறைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகம், மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகரின் பிரிவு மற்றும் பொலிஸ் நிலையம் என...

கோரோனா பாதித்த தாவடி குடும்பத்தலைவரின் உடல்நிலை முன்னேற்றம்

யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் உடல்நிலை தேறி வருகின்றார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலையில் தொடர்பில் இரவு தொலைபேசியின் ஊடாக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலை பணிப்பாளருடன் உரையாடியிருந்தேன். தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர், உடல்நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர்...

கடுமையான நோய்களுக்குள்ளானோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும்; அச்சமடையத் தேவையில்லை – பணிப்பாளர்

கடுமையான நோய்ப் பாதிப்புக்குள்ளாகியவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும். கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தனியான பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். எனவே நோயாளர்களைப் பராமரிப்பதற்கு ஏனைய விடுதிகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். “எனவே பொது மக்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்தால்...

கொரோனா பரிசோதனை உபகரணங்களை சுகாதார துறையினருக்கு வழங்க டக்ளஸ் தீர்மானம்

கொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை சுகாதார துறையினருக்கு வழங்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார். கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் உள்ள நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவகம், நக்டா எனப்படும் இலங்கை தேசிய...
Loading posts...

All posts loaded

No more posts