Ad Widget

மருத்துவத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு அனுமதி

சுதேச மருத்துவத் துறை உள்பட அனைத்து மருத்துவத் துறை உத்தியோகத்தர்களும் தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக (பாஸ்) பயன்படுத்த முடியும் என்று பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

இந்தத் தகவலை அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அத்தியாவசி சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் தமது அலுவலக அடையாள அட்டைக்கு மேலதிகமாக திணைக்களம்- நிறுவனத் தலைவரின் சான்றுப்படுத்தப்பட்ட கடிதத்தையும் வைத்திருந்தால் மாத்திரமே ஊரடங்கு வேளையில் கடமைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.

இந்த நடைமுறை இன்று ஏப்ரல் 11ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது.

எனினும் மருத்துவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதியாகப் பயன்படுத்த முடியும் என்றும் பொலிஸ் தலைமையகம் முன்னர் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சுதேச மருத்துவத் துறை உள்பட மருத்துவத் துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக (பாஸ்) பயன்படுத்த முடியும் என்று பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

Related Posts