- Monday
- May 4th, 2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை வழங்குமாறு இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பணித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு இந்த அறிவுறுத்தலை...
நாட்டின் தென்மேற்குப் பகுதியிலும் கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழையுடனான வானிலையில் இன்று சிறிய அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ...
இலத்திரனியல் மென்பொருளூடாக காணி உரிமங்களைப் பதிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் N.C. விதானகே இதனைத் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்களைப் பதிவுசெய்வதில் காணப்படும் மோசடிகளை இல்லாது செய்வதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போலிக் காணி உறுதிப்பத்திரங்கள் தயாரிப்பு தொடர்பாக வருடமொன்றுக்கு சுமார் 3,000 முறைப்பாடுகள் பதிவாகுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக காணி...
யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்தனர். இந்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக மாணவர்கள் தெரிவித்துள்ளதாவது, “தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளையும் மூடுவதற்கு முஸ்தீபு எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் குறித்த செயற்பாட்டுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழக...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துகொள்ளப்போவது தொடர்பாக தம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லையென கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் அது குறித்து சுமந்திரனுடன் பேசியதாகவும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இந்த விடயம் குறித்து...
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்கதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனை போது அந்தக் காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுக்குச் சென்ற யாழ்ப்பாண நில அளவைத் திணைக்களத்தினர் காணிகளை அளவீடு செய்யாமல் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களுக்குச் சொந்தமான இக் காணிகளை சுவீகரிப்பதற்காக...
திருட்டுக் குற்ச்சாட்டில் பொலிஸாரால் அழைத்துச்செல்லப்பட்ட மகன் எங்கே?? மனித உரிமை ஆணைக்குழுவில் தாய்
திருட்டுக் குற்றச்சாட்டில் பொதுமக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை காணவில்லை என தாய் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். [caption id="attachment_99954" align="aligncenter" width="1000"] Arrested man in handcuffs with hands behind back[/caption] யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபடடார்...
மன்னாரில் பனை அபிவிருத்திச் சபையின் கீழான பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் பெயர்ப்பலகையில் முதல் வரியிலிருந்த தமிழ்மொழி அமைச்சர் விமல் வீரவன்சவின் பணிப்பில் இரண்டாவது வரிக்கு மாற்றப்பட்டு சிங்களமொழி முதல் வரியில் இடம்பிடித்துள்ளது. வடக்கு – கிழக்கு கடந்த ஒருவாரம் பயணம் மேற்கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில்...
இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் தேங்காயிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாம் எண்ணெய் கலக்கப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்தும் வகையிலான செயற்திட்டமொன்றினை சுகாதார அமைச்சுடன் இணைந்து மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துவைத்தது. இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதன்போது பால்மாவினால் ஏற்படும்...
யாழ்ப்பாணத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளனர். இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தென்மராட்சி, மட்டுவில் சந்திரபுரம் வடக்கு செல்லப்பிள்ளையார் கோயிலடியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், அவரது மகள், மகளின் கணவர் ஆகிய மூவர்...
இலங்கைத் தமிழ் மக்களையும் அவர்களின் நில உரிமையையும் பாதுகாக்கின்ற கடமையையும் பொறுப்புக்களையும் அயல் நாடான இந்தியா எதிர்காலத்தில் செய்யவேண்டும் என்பதே எமது நம்பிக்கையாகவுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சி மகளிர் அணியின் பொங்கல் விழா நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது பிரதம...
மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு உயர் நீதிமன்றால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டநிலையில் அவர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் உறவுகள் இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தின் இன்று...
விடுதலைப்புலிகளுடனான போரின்போது காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கரை சந்தித்த ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்ததுடன், இச்சந்திப்பில் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தனது திட்டங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். மேலும் காணாமல்போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகளால் அழைத்துச்...
நிரந்தர ஆசிரியர் நியமனம் கோரி வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக இன்று முற்பகல் இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாத 300க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில்...
இலங்கையில் அழிந்துவிட்டது என கருதப்படும் கரும்புலி இனம் தற்போதும் வாழுகின்றது என வனஜீவராசிகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. உலகில் உள்ள 8 புலி இனங்களில் இலங்கை புலி இனங்கள் அரிதாகக் காணப்பட்டமையினால் அவை மிகவும் விசேடமானவையாக கருதப்பட்டன. இதுவரை காலம் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட கரும்புலி இனம் இலங்கை புலி இனத்தில் கிளை இனமாகவும் வர்ண வித்தியாச இனமாகவும்...
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 1 இலட்சம் வேலைவாய்ப்பு தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன. பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினால், பயிலுனர் பதவிகளிற்கான முதலாம் கட்ட ஆட்சேர்ப்பிற்கான விபரங்கள் இன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 100,000 வேலைவாய்ப்பிற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கிறது. இதற்கான மாதிரி விண்ணப்படிவத்தை நீங்கள் வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவில் பெற்று, பூர்த்தி...
யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது. இதுதொடர்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தெரிவித்ததாவது: சுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவாயிலில்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக வடிகால்கள் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கழிவுகளை அகற்றும் நடவடிக்கை சுகாதாரத் தொழிலாளிகளால் கடந்த சனிக்கிழமை இரவு அகற்றப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் கேட்கப்பட்டதற்கு அமைய யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரின் ஏற்பாட்டில் இந்த சுத்திகரிப்புப் பணிகள்...
யாழ்.மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என இளைஞர் ஒருவர் கோரியதாக கூறி இராணுவத்தினர் இளைஞனை மிரட்டியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாது, சுழிபுரம் பாணாவெட்டி பகுதியில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும்...
தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும். எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து போராடுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்று 19ம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் பொங்கல் விழா நிகழ்வு திருகோணமலை நகராட்சி மன்ற நகர மண்டபத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
